Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Heat Stroke: வடஇந்தியாவில் பல உயிர்களை காவு வாங்கும் வெப்பவாதம்... அப்படின்னா என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
Heat Stroke In Tamil: தற்போது வட இந்தியாவில் கடுமையான வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஏராளமானோர் வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெப்பவாதம் என்பது அதிக வெயில் காரணமாக சந்திக்கும் ஒரு பிரச்சனையாகும்.
இந்த வெப்பவாதத்தை ஹீட் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்தில் அழைப்பர். வெப்பவாதம் உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படும். ஏன் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். எப்போது நமது உடலின் வெப்பநிலை 106 டிகிரிக்கும் அதிகமாக உள்ளதோ, அதையே ஹீட்ஸ்ட்ரோக் என்பர்.

பொதுவாக நமது உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, நமது உடலே வெப்பத்தைத் தணிக்க அதிகமான வியர்வையை வெளியேற்றும். இப்படி வியர்வை அதிகரிக்கும் போது உடலில் போதுமான நீர் இல்லாமல் போனால் உடல் இன்னும் வெப்பமாகி வெப்பவாதத்தை ஏற்படுத்தும்.
இந்த வெப்பவாதத்தால் சமீபத்தில் கூட பாலிவுட் நடிகரான ஷாருக்கான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாயின. தற்போது ராஜஸ்தானில் 3622 பேர் வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது வெப்பவாதம் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சைகள் மற்றும் முதலுதவிகள் குறித்து காண்போம்.
வெப்பவாதம் என்றால் என்ன?
வெப்பவாதம் என்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவில் ஒரு அவசர மருத்துவ நிலையாகும். இந்நிலையில் உடல் அளவுக்கு அதிகமாக, அதாவது 104 டிகிரிக்கும் அதிகமாக உடல் வெப்பமடைகிறது. இந்த வெப்பவாதத்தை சன் ஸ்ட்ரோக் என்றும் அழைப்பர். வெப்பவாதமானது தீவிரமாகும் போது, அது மூளை சேதம், உறுப்பு செயலிழப்பு அல்லது மரணம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
வெப்பவாதம் எதனால் ஏற்படுகிறது?
நமது உடல் பொதுவாக வளர்சிதை மாற்றத்தின் விளைவாக வெப்பத்தை உருவாக்கும். இப்படி உடலில் உருவாகும் வெப்பத்தை தணிக்க நமது உடல் வியர்வையை வெளியேற்றும். இருப்பினும் அதிக வெப்பம், அதிக ஈரப்பதம் அல்லது வெயிலில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றால் உடல் வெப்பத்தை போதுமான அளவு சிதறடிக்க முடியாமல் போகலாம் மற்றும் உடல் வெப்பநிலை சில நேரங்களில் 106 F (41.1 C) அல்லது அதற்கும் அதிகமாக உயரலாம்.
வெப்ப வாதத்திற்கான மற்றொரு காரணம் நீரிழப்பு. உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதவர் வெப்பத்தை வெளியேற்றும் அளவுக்கு வேகமாக வியர்க்க முடியாமல் போகலாம், இதனால் உடல் வெப்பநிலை உயரும்.
யாருக்கெல்லாம் வெப்பவாதம் வரும்?
வெப்பவாதம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் குழந்தைகள், முதியவர்கள் போன்றோர் அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் இவர்களின் உடல்களால் வெப்பநிலையை திறம்பட கட்டுப்படுத்த முடியாது. விளையாட்டு வீரர்கள், போர் வீரர்கள் மற்றும் சூடான வெப்பநிலையில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் போன்றோருக்கு வெப்பவாதம் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
எவையெல்லாம் வெப்பவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும்?
* மது அருந்துவது
* ஆண்கள்
* நீரிழப்பு
* இதயம் மற்றும் இரத்த அழுத்த மருந்துகள்
* சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற உங்கள் வியர்வைத் திறனைப் பாதிக்கும் நோய்கள்
* தூக்க கோளாறு, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், தைராய்டு அல்லது இரத்த நாள பிரச்சனைகள் இருப்பது
* இறுக்கமான அல்லது வெயிட்டான ஆடைகளை அணிவது
* அதிக காய்ச்சல்
* உடல் பருமன்
* வெப்பவாதத்தின் கடந்தகால வரலாறு
வெப்பவாதத்தின் அறிகுறிகள்
வெப்பவாதமானது ஒரு அவசர மருத்துவ நிலை. ஒருவருக்கு பின்வரும் அறிகுறிகள் தெரிந்தால், அவர்கள் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவை:
* வியர்க்காமல் இருப்பது
* கை, கால் அசைப்பதில் பிரச்சனை
* தலைச்சுற்றல், மயக்கம்
* காரணமின்றி அதிகமாக வியர்ப்பது
* வெளிரிய தோல் அல்லது உடல் மிகுந்த சூடாக இருப்பதை உணர்வது
* உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம்
* சுவாசிக்கும் போது சப்தம் வருவது
* சிறுநீர் அதிகம் கழிக்காமல் இருப்பது
* வலிப்பு
* கவனிப்பதில் சிரமம்
* மிகுந்த உடல் பலவீனம்
* வாந்தி, குமட்டல்
* தலைவலி
* தசைப்பிடிப்பு மற்றும் வலி
வெப்பவாதத்தின் அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் தெரியும்.
வெப்பவாதத்திற்கு எப்படி முதலுதவி கொடுக்க வேண்டும்?
* வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை முதலில் நிழலில் அமர வைத்து, அவரது ஆடைகளை தளர்த்தி, அவர்கள் மேல் நீரைத் தெளிக்க வேண்டும். அதோடு ஐஸ் கட்டி பேக்கை அக்குள் பகுதியில் வைக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட நபரால் ஏதாவது குடிக்க முடியுமானால், அவருக்கு குளிர்ச்சியான நீர் அல்லது பானங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பானத்தில் காப்ஃபைன் அல்லது ஆல்கஹால் எதுவும் இருக்கக்கூடாது.
* உடல் வெப்பநிலையை தெர்மோமீட்டர் கொண்டு கண்காணித்துக் கொண்டே உடல் வெப்பநிலையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
* இந்த முதலுதவிகளை செய்துவிட்டு உடனே அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
