For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா?

சமீப காலங்களில் மாரடைப்பாலும், இதய நோய்களாலும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் பெண்கள் இதய நோய் பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியத

|

மாரடைப்பு என்பது யாருக்கு வேண்டுமென்றாலும், எந்த வயதில் இருப்பவர்களுக்கும் ஏற்படலாம். உலகம் முழுவதும் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளது.

Things Every Woman Should Know About Heart Disease

சமீப காலங்களில் மாரடைப்பாலும், இதய நோய்களாலும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் பெண்கள் இதய நோய் பற்றி சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த பதிவில் பெண்கள் மாரடைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை 1

உண்மை 1

இந்திய அளவில் அதிகளவில் பெண்கள் இறப்பதற்கு காரணம் மாரடைப்புதான். பொதுவாக பெண்கள் தாங்கள் மார்பக புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம் என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் மார்பக புற்றுநோயை விட மாரடைப்பு ஆறு மடங்கு அதிகமான பெண்களை கொல்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

உண்மை 2

உண்மை 2

ஆண்களை விட பெண்களுக்கே அதிகளவு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. இரத்த நாளத்தில் ஒரு இடத்தில் ஒரு அடைப்பு உருவாகிறது, அங்கு அதை ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் பெண்களுக்கு இந்த அடைப்புகள் பரவலாக இருக்கும். இதனாலேயே பெண்கள் அதிகம் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

உண்மை 3

உண்மை 3

மாரடைப்பால் ஒரு வருடத்திற்குள் ஆண்களை விட கிட்டத்தட்ட இரு மடங்கு பெண்கள் இறக்கின்றனர். எண் இவ்வளவு பெண்கள் மாரடைப்பால் இறக்கின்றனர்? பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை உணரத் தவறிவிடுகிறார்கள். ஆண்கள் அடிக்கடி தங்களின் இதயத்தை சோதித்துப் பார்க்கிறார்கள், ஆனால் பெண்கள் இவ்வாறு செய்வதில்லை.

MOST READ: உங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா?

உண்மை 4

உண்மை 4

பெண்களின் மாரடைப்பு அறிகுறிகள் ஆண்களிடமிருந்து வேறுபடலாம். பொதுவாக மாரடைப்பின் அடிப்படை அறிகுறி மார்பு பகுதியில் அழுத்தம் மற்றும் வலி ஆகும். ஆனால் இது பெண்களுக்கு வேறுபடலாம்.களைப்பு, மூச்சு திணறல், அஜீரணம் அல்லது மேல் வயிற்று வலி, தாடை அல்லது தொண்டை வலி, ஒன்று அல்லது இரு கைகளிலும் வலி ஆகியவைதான் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முதல் அறிகுறிகளாகும்.

உண்மை 5

உண்மை 5

இன்று ஆண், பெண் இருவருமே புகைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். புகைபிடிப்பது இருவருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் இது ஆண்களை விட பெண்களுக்கு இருமடங்கு ஆபத்தை ஏற்படுத்தும். புகைபிடித்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, உங்கள் இரத்த நாளங்களில் பிளேக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது. இது உங்கள் உடலில் இருக்கும் நல்ல கொழுப்பான HDL கொழுப்பை குறைக்கிறது. மேலும் இது இரத்த உறைவை ஏற்படுத்தக்கூடும். இவை அனைத்தும் உங்கள் இதயத்திற்கு ஆபத்துகளை அதிகரிக்கும்.

உண்மை 6

உண்மை 6

பெண்களின் எடை அவர்களின் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் முக்கியக் காரணமாகும். தாங்கள் இருக்க வேண்டிய எடையை விட 13 கிலோ அதிகமிருந்தால் அவர்களுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் மொத்த எடையில் இருந்து சில கிலோக்களை குறைப்பது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.

MOST READ: இந்த தீபாவளிக்கு இதுல ஒண்ணாவது செய்யுங்க... அப்புறம் உங்க வாழ்க்கையிலே பணக்கஷ்டமே வராது...!

உண்மை 7

உண்மை 7

உயர் இரத்த அழுத்தம் ஒரு பெண்ணின் இருதய நோய் மற்றும் இதய செயலிழப்புக்கான ஆபத்தை இரட்டிப்பாக்கும். உயர் இரத்த அழுத்தம் எந்த எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் உங்களுக்குள் ஏற்படக்கூடும். உங்கள் இரத்த அழுத்த எண்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால், கண்டுபிடிக்க மருத்துவரின் உதவியை நாடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Every Woman Should Know About Heart Disease

Here is the list of things every woman should know about heart disease.
Story first published: Tuesday, October 22, 2019, 15:59 [IST]
Desktop Bottom Promotion