Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
மாரடைப்பு வரும்போது... ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு அறிகுறிகள் ஏற்படுமாம்...ஜாக்கிரதை!
மாரடைப்பின் போது ஆண்களுக்கு மார்பு வலி, குமட்டல், வாந்தி, தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, மார்பில் அழுத்தும் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உணர்வு ஏற்படும்.
இன்றைய நாளில் அதிகமான மக்கள் இறக்கும் முக்கிய காரணியாக மாரடைப்பு உள்ளது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை மாரடைப்பு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ நிலமைகள் பொறுத்து மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உங்களுக்கு சில அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அது ஆண், பெண் இருவருக்கும் வேறுபடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மாரடைப்புக்கு முன் பல பெண்களுக்கு மார்பு வலி ஏற்படாது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அதே சமயம் ஆண்களுக்கு மாரடைப்பின் முதல் அறிகுறியாக மார்பு வலி இருக்கும். மாரடைப்பின் போது நெஞ்சு வலி அல்லது மார்பகத்தில் அசௌகரியம் ஏற்படும்.

பெண்கள் நடுத்தர அல்லது மேல் முதுகில் இருந்து வெளிப்படும் வலியைப் புகாரளிக்க அதிக வாய்ப்புள்ளது. மார்பில் இருந்து முதுகு, தாடைகள் மற்றும் கைகளில் வலி ஏற்படுவது இரு பாலினருக்கும் பொதுவானது என்றாலும், பல ஆய்வுகள் பெண்கள் முதுகு, கழுத்து மற்றும் தாடையில் வலியை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகளின் வேறுபாடுகளை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மாரடைப்பு அறிகுறிகள்
மாரடைப்பின் அறிகுறிகளை பெண்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். தசை வலி அல்லது அஜீரணம் போன்ற வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். மார்பு வலி மற்றும் அழுத்தம் போன்ற வலுவான மாரடைப்பு அறிகுறிகளைக் கூட பெண்கள் கவனிக்காமல் விடுகிறார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆதலால், பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆய்வு கூறுவது
பொதுவாக பிரச்சனைகளை விரைவில் கண்டுபிடித்துவிட்டால், அதற்கான சிகிச்சையை தமாதிக்காமல் உடனே தொடங்கிவிடலாம். பெண்கள் அறிகுறிகளை மிக அலட்சியமாக எடுத்துக்கொள்வதால், சிகிச்சையை தாமதமாக பெறுகிறார்கள். இதனால், பாதிப்பு அதிகமாகிறது. சில நேரங்களில் இறப்பும் ஏற்படக்கூடும். மாரடைப்பு பிரச்சனைக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்பு மக்கள் எவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பதை அளவிடும் ஒரு ஆய்வில், ஆண்களுக்கு சுமார் 16 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு சராசரியாக 54 மணிநேரம் தாமதமாகிறது.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகள் என்ன?
மாரடைப்பின் போது, பெண்களுக்கு குமட்டல், வாந்தி, தாடையில் வலி, கழுத்து அல்லது மேல் முதுகில் வலி, கீழ் மார்பு அல்லது அடிவயிற்றில் வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அஜீரணம் மற்றும் தீவிர சோர்வு போன்றவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தூக்கமின்மை பிரச்சினைகள், பதட்டம், தலைச்சுற்றல் மற்றும் கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிக்க வாய்ப்புள்ளது.

மாதவிடாய் ஒரு பெரிய ஆபத்து காரணி
மாதவிடாய் நிறுத்தம் பெண்களுக்கு இதய ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. அறிக்கைகளின்படி, பெண்களில் ஏற்படும் இதயம் தொடர்பான இறப்புகளில் பெரும்பகுதி 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு நிகழ்கிறது. ஆரோக்கியமற்ற உடல் எடை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், நிறைவுற்ற கொழுப்பு-குறைவான டிரான்ஸ் கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வது ஒரு பெண்ணின் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது.

ஆண்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் என்ன?
மாரடைப்பின் போது ஆண்களுக்கு மார்பு வலி, குமட்டல், வாந்தி, தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, மார்பில் அழுத்தும் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உணர்வு ஏற்படும். ஆண்களுக்கு கை வலி, குளிர் வியர்வை மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

ஆபத்து காரணிகள்
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, இதயப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய அபாயங்களைத் தவிர்ப்பதற்கு ஆபத்து காரணிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, சாதாரண ட்ரைகிளிசரைடுகளை விட அதிகமானது, நீரிழிவு நோய், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், உணவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு போன்றவை மாரடைப்புக்கான பொதுவான ஆபத்து காரணிகள் ஆகும்.



Click it and Unblock the Notifications
