இதயத்தை வலிமையாக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சிகளை செய்வதோடு, குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ள வேண்டும். இப்போது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைக் காண்போம்.

தற்போது உலகில் ஏராளமானோர் இதய நோயால் தான் இறக்கிறார்கள். இதய நோய் ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பிற ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை அடங்கும். 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இதய நோயால் ஏற்பட்டது. கடந்த ஆண்டு 9.6 மில்லியன் ஆண்களும், 8.9 மில்லியன் பெண்களும் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 மில்லியனுக்கும் அதிகமானோர் 30 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

Foods That Can Make Your Heart Strong In Tamil

இப்படிப்பட்ட நிலையில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தினமும் உடற்பயிற்சிகளை செய்வதோடு, குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ள வேண்டும். இப்போது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நற்பதமான மூலிகைகள்

நற்பதமான மூலிகைகள்

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கொத்தமல்லி, புதினா, கற்பூரவள்ளி போன்ற மூலிகைகளை உணவில் அதிகம் பயன்படுத்த வேண்டும். அதோடு, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் இதயத்தில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கலாம்.

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸ் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதில் உள்ள ஃபோலேட், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இது தவிர, இதில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகவே இந்த கருப்பு பீன்ஸை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பாதாம்

பாதாம்

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு கையளவு பாதாமை ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள். ஏனெனில், பாதாமில் ஸ்டெரால்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களாகும்.

டோஃபு

டோஃபு

டோஃபு என்பது சீஸ் போன்று காட்சியளிக்கும் ஒரு உணவுப் பொருள். இதில் ஆரோக்கியமான கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாக நோயின்றி இருக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

இந்த எண்ணெய் ஆலிவ் பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. முக்கியமாக இது இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக ஆலிவ் ஆயில் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக் உதவுகிறது. ஆகவே சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து இதய பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

தினமும் ஒரு கையளவு வால்நட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மேலும் இது இதயத்தின் தமனிகளில் ஏற்படும் வீக்கத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும். வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளன. அதோடு இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன. எனவே என்ன தான் மூளை போன்ற தோற்றத்தை வால்நட்ஸ் கொண்டிருந்தாலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறப்பான உணவுப் பொருட்களில் ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, March 5, 2022, 17:40 [IST]
Desktop Bottom Promotion