Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்படின்னா இந்த காய்கறியை அடிக்கடி சாப்பிடுங்க...
புதிய ஆய்வு ஒன்றில், அதிகளவு ப்ராக்கோலி, முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை, இரத்த நாள நோய்களான மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்தது.
ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு வாரத்திற்கு பல முறை குறுக்குவெட்டுக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலான குறுக்குவெட்டு காய்கறிகள் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான ஃபோலேட் மற்றும் வைட்டமின்களான சி, ஈ மற்றும் கே மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை அதிகமாகவும் கொண்டுள்ளன. குறுக்குவெட்டுக் காய்கறிகளில் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் மற்றும் குளுக்கோசினோலேட்டுகள் போன்றவைகளும் உள்ளன. இவை புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளைக் கொண்டுள்ளன.

புதிய ஆய்வு ஒன்றில், அதிகளவு குறுக்குவெட்டுக் காய்கறிகளான ப்ராக்கோலி, முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை, இரத்த நாள நோய்களான மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்தது.
ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் இரண்டுமே கொழுப்புக்களின் தேக்கம் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கால்சியம் படிவுகளால் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில காய்கறிகளை சாப்பிட வேண்டும். இக்கட்டுரையில் மாரடைப்டைத் தடுக்க உதவும் சில காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்களின் அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலியை வேக வைத்து அடிக்கடி சாப்பிடுவது, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ப்ராக்கோலி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, வலிமையான எலும்புகளுக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

காலிஃப்ளவர்
100 கிராம் காலிஃப்ளவரை சாப்பிடும் போது, அதில் 92 கிராம் நீர்ச்சத்து கிடைக்கிறது. ஆகவே இந்த காய்கறியை அதிகம் உணவில் சேர்க்கும் போது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. மேலும் காலிஃப்ளவரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவையும் நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில், குறிப்பாக சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸ் இதயத்திற்கு நல்லது. இந்த காய்கறி பீட்டா-கரோட்டீன், லுடின் மற்றும் பிற இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால், இது பெருந்தமனி தடிப்புக்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு முட்டைக்கோஸ் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், இதய நோய்களையும் தடுக்க உதவுகிறது.

முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ்
உங்கள் உணவில் இந்த காய்கறிகளை அதிகம் சேர்ப்பதன் மூலம், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது, சர்க்கரை நோய் நிர்வகிக்கப்படுகிறது, இதய நோய் மற்றும் புற்றுநோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது. ஆகவே இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்பதை நினைவில் கொண்டு, இனிமேல் இந்த காய்கறியைக் கண்டால் வாங்கி சாப்பிடுங்கள்.

கேல்
கேல் கீரை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிந்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. உணவுப் பொருட்களிலேயே கேல் கீரையில் தான் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து தான் இரத்தம் உறைதலில் ஈடுபடும் முக்கிய ஊட்டச்சத்தாகும். மேலும் இந்த கீரையில் உள்ள ஏராளமான உட்பொருட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் என்பது சோதனை-குழாய் மற்றும் விலங்குகளின் மீதான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications











