அடக்கொடுமையே! இப்படியெல்லாம்கூட ஹார்ட் அட்டாக் வருமா?... படிக்காதீங்க... பயந்துடுவீங்க...

Posted By: gnaana
Subscribe to Boldsky

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள் இருக்கின்றன. அதக்கேட்டாலே பீதியாகிடுவீங்க...

health

வயிறுமுட்ட சாப்பிட்டா, ஐஸ் வாட்டர் குடிச்சா, காலையில் எழும்போது என நாம்இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத காரணங்களால் கூட ஹார்ட் அட்டாக் வருமாம். நீங்க இதையெல்லாம் சரிசெய்யலேன்னா, திடீர் ஹார்ட் அட்டாக் வரலாம், ஜாக்கிரதை.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த தூக்கம்.

குறைந்த தூக்கம்.

ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வையும், எல்லோரிடமும் சிடுசிடுவென எரிச்சலடைய வைப்பதோடு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை, பெருமளவு உண்டாக்கி விடுகிறது.

தினமும் ஆறுமணிக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குபவர்களைவிட, இருமடங்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஒருஆய்வு கூறுகிறது. மருத்துவர்கள் சரியான காரணத்தை அறியாவிட்டாலும், அதிகநேரம் தூங்காமல் இருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, உடல் அழற்சி ஏற்படுவது, இதயத்துக்கு நன்மை தராத ஒன்றாகும்.

ஒற்றைத்தலைவலி

ஒற்றைத்தலைவலி

ஒற்றைத் தலைவலியும், பிற்காலத்தில், இருதய பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைத் தரும். ஆரா ஒளிவட்டமுள்ள தியானம் செய்பவர்கள், தலைவலி இல்லாதவர்கள் போன்றோரை பாதிப்பதைவிட, அதிகமாக ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு, மாரடைப்பு கோளாறுகள் ஏற்படக்கூடும். வினோதமான காட்சிகள், சப்தம், உணர்வுகள் போன்ற தலைவலிக்கு முன் தோன்றும் வித்தியாசமான அனுபவங்கள், இருதய பாதிப்பின் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

ஜில் தண்ணீர்

ஜில் தண்ணீர்

குளிர்காலத்தில் அதிகநேரம் வெளியில் இருப்பது, உடல் இரத்த நாளங்களை சுருக்கி, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை, தடை செய்கிறது. இதனால், உடலை கதகதப்பாக வைக்க, இதயம் சிரமப்படுகிறது. பனிக்காலங்களில், ஐஸ் கட்டியில் விளையாடுவது, பனியில் ஊர் சுற்றுவது, போன்ற வெளிப்புற செயல்களைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

காற்று மாசுபாடு மற்றும் வாகனப் புகைமாசு

காற்று மாசுபாடு மற்றும் வாகனப் புகைமாசு

பெருநகரங்களில் வாகன புகை மாசு மற்றும் காற்று மாசு போன்ற அசுத்த காற்றை அதிகம் சுவாசிக்கக் வேண்டிய நிலையில் இருப்போருக்கு, இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன நெரிசல் மிக்க சாலைகளில் காத்திருப்பதால், வாகன புகை மாசுகளும், நீண்டநேர காத்திருப்பின் கோபமும் சேர்ந்து, ஹார்ட் அட்டாக் ஏற்படக்கூடிய, மிகவும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடக் கூடும்.

வயிறு நிரம்ப, சாப்பிடுவது.

வயிறு நிரம்ப, சாப்பிடுவது.

மூக்குமுட்ட சாப்பிடுவதும், இரண்டாவது, மூன்றாவதுமுறை குழம்பு, பாயசம் வாங்கி சாப்பிடுவது, வயிற்றைமட்டும் பாதிக்காது, மனப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோர்பின்பிரைன் ஹார்மோனை அதிகம் சுரக்கவைத்து, அதனால், இரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரித்து, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் ஏற்படும். கொழுப்புநிறைந்த அசைவ உணவுகள், இரத்தக்கொழுப்பை சட்டென அதிகரித்து, இரத்த நாளங்களை பாதிக்கக்கூடியவை.

 தீவிரமான எதிர்மறை அல்லது நேர்மறை மன நிலைகள்

தீவிரமான எதிர்மறை அல்லது நேர்மறை மன நிலைகள்

கோபம், துக்கம், கவலை போன்றவை, ஹார்ட் அட்டாக்கை வாவென்று அழைக்கும் ஆபத்துகளாகும். அதேபோல, எதிர்பாராத பிறந்தநாள் பார்ட்டி, குதூகலமிக்க திருமண விழாக்கள், குழந்தைப் பிறப்பு போன்ற அதீத உற்சாகத்தைத் தரும் நிகழ்வுகள், சிலருக்கு ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தலாம்.

கடுமையான வேலைப்பளு.

கடுமையான வேலைப்பளு.

சிலர் திடீரென ஏற்படும் அவசர வேலையிலோ அல்லது கடுமையான நெருக்கடி மிக்க வேலையிலோ ஈடுபடும்போது, மாரடைப்பு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆறு சதவீத இதய பாதிப்புகள், கடுமையான உடல் உழைப்பினால் ஏற்படுவதாக, ஆய்வுகள் கூறுகின்றன. உடற்பயிற்சி, மனச்சோர்வை விரட்டும் சிறந்த வழியானாலும், கோபம் மற்றும் வருத்தமான மன நிலைகளில், உடற்பயிற்சிகளின் அளவு மிகும்போது, ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஜுரம் மற்றும் சளி.

ஜுரம் மற்றும் சளி.

உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல், உடலில் ஊடுருவ முயலும் கிருமியை எதிர்த்துப் போரிடும்போது, ஏற்படும் அழற்சியினால், இதயமும், இரத்த நாளங்களும் கடுமையாக பாதிக்கப்படலாம். சுவாசத்தொற்று கோளாறு உள்ளவர்களுக்கு மாரடைப்பு அபாயம், மற்றவர்களைவிட, இருமடங்கு கூடுதல் என்கிறது, ஒரு ஆய்வு. இருந்தாலும், சுவாசத்தொற்று குணமாகும்போது, பாதிப்பு விலகும். கடுமையான ஜுரத்தில், மாரடைப்பு ஏற்படும் ஆபத்துகள், அதிகரிக்கும்.

சுவாச பாதிப்பு ஆஸ்துமா

சுவாச பாதிப்பு ஆஸ்துமா

சுவாச கோளாறுகளால், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பே, எழுபது சதவீத, ஹார்ட் அட்டாக் ஆபத்தை உண்டாக்குகிறது, இன்ஹேலர் மூலம் சுவாசத்தை சீராக்க முயன்றாலும், பாதிப்பின் வீரியம் குறையாது, காரணம், இதயம் இறுகி இருப்பதால், இரத்த ஓட்டம் தடைப்பட்டு, ஹார்ட் அட்டாக் ஆபத்து அதிகரிக்கிறது. சுவாசக் கோளாறு அல்லது உடல் அழற்சி பாதிப்பு, இவற்றில் எதனால், மாரடைப்பு ஏற்படுகிறது என்பதில், மருத்துவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லாவிடினும், சுவாசக் கோளாறுகளை முக்கியமான பாதிப்பாகக் கருதுகின்றனர், சில மருத்துவர்கள்.

காலை படுக்கையில் இருந்து எழும்போது..

காலை படுக்கையில் இருந்து எழும்போது..

காலை வேளையில், இதய பாதிப்பு ஏற்பட வாயப்புகள் அதிகம், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழவைக்க, மூளை, ஹார்மோன்களை அதிகமாக சுரக்கும்போது, அந்த செயலே, இதயத்துக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து, பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதிகநேரம் உறங்கும்போது, உடலில் நீர்ச்சத்து வற்றி, இதய இயக்கம் கடுமையாக பாதித்து, ஹார்ட் அட்டாக் ஏற்படக்கூடும்.

இயற்கைப் பேரழிவுகள், தீவிரவாதத் தாக்குதல்கள்.

இயற்கைப் பேரழிவுகள், தீவிரவாதத் தாக்குதல்கள்.

சுனாமி, பூகம்பம், தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற இயற்கை அல்லது செயற்கை பேரிடர்களில், ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன. இவை அந்த சமயங்களில் பாதிப்பைத்தாராவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்தும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. நாம் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும், முறையான ஓய்வு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம், பாதிப்புகளை வெல்லலாம்.

தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு

உடற்பயிற்சிகளின் சில கடுமையான நிலைகளைப்போலவே, தாம்பத்ய உடலுறவும், சிலருக்கு இதய பாதிப்பைத் தருமென்றாலும், பாதிப்பு குறைந்த அளவே, இருக்குமென்கின்றனர், மருத்துவர்கள். உடல் ஆரோக்கியமானவர்களுக்கு, தாம்பத்ய உறவு, உடல் மற்றும் மன ஆற்றலுக்கு, முக்கியமானதாகும். பாதிப்புகள் ஏற்படுவதாக உணர்ந்தால், மருத்துவரை ஆலோசிக்கலாம்.

பார்வையாளராகக் கண்டுகளிக்கும் விளையாட்டுகள்.

பார்வையாளராகக் கண்டுகளிக்கும் விளையாட்டுகள்.

சிலருக்கு,. விளையாட்டுகளை காண்பதும், ஹார்ட் அட்டாக் பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும். 2௦௦6 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், போட்டியை நடத்திய ஜெர்மனி, பைனலுக்கு தகுதிபெறாமல் வெளியேறியபோது, அனேகம்பேர், அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால், உயிர்நீத்தார்கள். அமெரிக்காவின் பிரபல சூப்பர் பவுல் விளையாட்டிலும் 1981ல், லாஸ் ஏஞ்சல்ஸ் அணி தோற்றபோது, பலருக்கு அதிர்ச்சியால், இதயபாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு 1984ல், லாஸ் ஏஞ்சல்ஸ் அணி வென்றபின், மாறியது. நமது நாட்டிலும், இதுபோன்ற அதிர்ச்சியால் ஏற்பட்ட, ஹார்ட் அட்டாக் இறப்புகள், இந்திய அணி, உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிகளில் வெல்லாத சமயங்களிலும், ஏற்பட்டது.

மதுப்பழக்கம்.

மதுப்பழக்கம்.

மிதமான மதுப்பழக்கம், இதயத்தை நோயிலிருந்து காப்பதாக இருந்தாலும், மிகையான குடிப்பழக்கம், இதயத்துக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். அதிக குடி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும், சதையில் சேரும் கொழுப்புகளால், உடல் எடை கூடும். இவையாவும், இதயத்தை வதைக்கும். ஒருநாள் மட்டுமே, மோசமாகக்குடித்தாலும், அந்தவாரத்தில், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

காபி

காபி

மதுவைப் போலவே, காபி பயன்பாட்டிலும், நன்மையையும், தீமையும் கலந்துள்ளன. காப்ஃபீன், இரத்த அழுத்தத்தை கூட்டி, காபி குடித்த சிறிதுநேரத்தில், மாரடைப்புக்கான ஆபத்தையும் அதிகரித்துவிடும். தினசரி காபி குடிக்காமல், திடீரெனக் குடிப்பவர்களுக்கு, பாதிப்பு அதிகம். தினமும் மூன்று முதல், ஐந்து கப் வரை காபி குடிப்பவர்களுக்கு, இரத்த நாளங்களில், கொழுப்பு அதிகமாகப் படிவதில்லை, என்கின்றன, ஆய்வுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unexpected Heart attack triggers

Some heart attack risk factors are common knowledge. The average person knows, for example, that obesity, diabetes and hypertension can lead to an increased risk.
Story first published: Wednesday, March 28, 2018, 10:45 [IST]