For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவற்றில் அலச்சியம் வேண்டாம். இதய நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்

இந்த வலிகள் இதய நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.

By Lakshmi
|

மாரடைப்பு பெண்களுக்கு உண்டாகும் வாய்ப்பு குறைவு என்ற காலம் மாறிவிட்டது. இப்போது இளம்வயதில் மெனோபாஸ், அதீத மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கும் அதிலும் இள வயதிலேயே மாரடைப்பும் இதயக் கோளாறுகளும் உண்டாகிறது. இது நேரடியாக நெஞ்சில் வலியாகவோ அல்லது மூச்சுவிடுவதில் சிரமமாகவோ இருக்காது. மறைமுக அறிகுறிகளையும் காட்டலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சின்னச்சின்ன வேலைகளால்கூட களைப்படைகிறீர்களா? உதாரணமாக அருகில் இருக்கும் கடைக்கு போவது, வாசலை பெருக்குவது போன்ற வேலைகளை செய்யும் போது கூட களைப்பு ஏற்படுகிறதா?

#2

#2

வழக்கமாக செய்யும் உடற்பயிற்சி என்றாலும் கூட திடீரென ஒருநாள் அது உங்களுக்கு ஒருவித அசவுகரியத்தைக் உண்டாக்குகிறதா? நெஞ்சு பாரமாக அழுத்துவது போல இருக்கிறதா? அதிகமான களைப்பு மட்டுமின்றி, தூக்கமின்மையாலும் அவதிப்படுகிறீர்களா?

#3

#3

வயதான காரணத்தினாலும், வேலை செய்வது அல்லது உடற்பயிற்சி ஆகியவை இல்லாத காரணத்தாலும் பெண்களுக்கு வியர்வை உண்டாகும். மெனோபாஸ் காலத்திலும் வியர்க்கலாம்.

ஆனால் இது போன்ற எந்த காரணங்களும் இல்லாமல் வியர்ப்பது, கடினமான வேலை செய்த பிறகு மூச்சு வாங்குவது அதிக நேரத்திற்கு நீடித்து இருப்பது, நெஞ்சு பாரமாக இருப்பது, தீடிரென அதிகமாக வியர்ப்பது, மூச்சு திணறல் போன்றவற்றை அலச்சியப்படுத்த வேண்டாம்.

#4

#4

உடலில் ஏற்படும் அசாதாரண வலிகளை கூட பெண்கள் உழைப்பு மற்றும் ஓய்வின்மையின் காரணமாக கருதுவார்கள். ஆனால் ஒரு கையிலோ அல்லது இரண்டு கைகளிலுமோ அசாதாரணமாக திடிரென வலிப்பது, குறிப்பாக தோல்பட்டைகளில் வலிப்பது, குறிப்பாக இரவு நேரத்தில் பாதிதூக்கத்தில் திடீரென வலி.

#5

#5

வாய் மற்றும் பல் பிரச்சனைகள் ஏதுமின்றி தாடைப் பகுதியில் உண்டாகின்ற வலி ஆகியவை சாதாரணமான வலிகள் அல்ல.

இதய பரிசோதனை

இதய பரிசோதனை

இது போன்ற வலிகளை சாதாரணமாக கருதி விட்டுவிட கூடாது. இதய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

உங்களுக்கு மட்டுமே தெரியும்

உங்களுக்கு மட்டுமே தெரியும்

உங்கள் உடலில் உண்டாகும் இது போன்ற மாறுதல்களையும் வலிகளையும் உங்களால் மட்டுமே அடையாளம் காண முடியும். இவற்றை சாதாரணமாக கருதி அலட்சியம் செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

some abnormal pains it may heart attack

here are the some abnormal pains causes heart attack
Story first published: Saturday, June 3, 2017, 10:30 [IST]
Desktop Bottom Promotion