இந்த மிகச் சாதாரண விஷயம் கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாமாம்!! கவனமா இருங்க!!

Posted By:
Subscribe to Boldsky

சினிமாவில் பார்க்கிற மாதிரி ஒரு வயதான மனிதன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்வது போல் இன்ஸ்டென்டாக இதய நோய்கள் ஏற்படாது.

இதய நோய்கள் ஆற அமர எப்பவோ ஆரம்பித்திருக்கக் கூடும். அதன் அறிகுறிகளும் மெல்ல ஆரம்பித்திருக்கும். இதய நோய்களின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் கேட்டிருக்கலாம்.

தோள்பட்டை வலி, முதுகு வலி, அதிக சோர்வு என்று. இவையெல்லாம் மாரடைப்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன் வருவது.ஆனால் சில நிகழவுகள் மிகச் சாதரணமாக நடந்து கொண்டிருக்கும். அவை இதய நோய்களின் ஆரம்ப காலங்களில் வருபவை. அந்த சமயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக நடந்து கொண்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் பாதங்கள் மற்றும் கெண்டைக் கால் :

உங்கள் பாதங்கள் மற்றும் கெண்டைக் கால் :

இதயம் சரியாக பம்ப் செய்யாவிட்டால் ரத்தத்திலுள்ள திரவம் கசிந்து அருகிலுள்ள திசுக்களுக்கு சென்றுவிடும். பின்னர் அங்கிருந்து கீழ் நோக்கி எல்லா திரவங்களும் பாதம் மற்றும் கெண்டைக்காலிற்கு வந்து வீக்கம் தந்து விடும். இது இதயம் செயலிழப்பிற்கான அறிகுறியே.

உச்சந்தலை சொட்டை :

உச்சந்தலை சொட்டை :

ஆச்சரியமா இருக்குதா? ஆனால் உண்மை. பெரும்பாலும் ஆண்களுக்கு மகுடம் போல் நடு உச்சியிலிருந்து சொட்டை ஆரம்பிக்கும் அவர்களுக்கு எல்லாம் இதய நோய்கள் வருவதற்கான அறிகுறிகளாக இருக்கலாமென பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

காரணம்

காரணம்

காரணம் என்னவென்றால், சொட்டை, ரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு மூன்றும் சேர்ந்து இதய நோய் வருவதற்கான அபாயத்தை தருகிறது.. இதற்கு காரணம் அதிகப்படியான டெஸ்டோஸ்டீரான் சுரக்கும்போது அது இதய வால்வுக்ளை தடிமனாக்குகிறது.

அதுவேதான் முடி உதிர்தலுக்கும் காரணமாகிறது. அதற்காக சொட்டை விழுபவர்களுக்கு எல்லாம் இதய நோய் ஆபத்து என்பதில்லை. ஒரு பரிசோதனை செய்து கொள்வது நன்மையே.

வீக்கமடைந்த ஈறுகள் :

வீக்கமடைந்த ஈறுகள் :

வீக்கமடைந்த, ரத்தம் கசியும் ஈறுகள் உங்களின் மோசமான பற்களின் ஆரோக்கியத்தை காட்டுகிறது என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால் அது இதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காரணம் :

காரணம் :

காரணம் இரண்டு நோய்களுக்குமே மோசமான ரத்த ஓட்டம்தான் காரணம். ஈறு நோய் மற்றும் இதய வால்வுகளில் படிவத்தை ஏற்படுத்துதல் என இரண்டிலுமே பாக்டீரியாக்கள் தாக்கத்தால்தான் உருவாகின்றன.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல் :

அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல் :

நீங்கள் மிகவும் எமோஷனலாய் இருந்தால் அவை உங்கள் இதய தசைகளை பலவீனமாகிவிடும். இதனால் மாரடைப்பு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெண்களுக்கு.

காரணம் :

காரணம் :

காரணம் இதய தசைகள் பலவீனமாகும்போது அட்ரினலின் அதிகமாக சுரக்கும். இவை இதயத்தில் வலியை உண்டாக்கி மாரடைப்பு உண்டு பண்ணுகின்றன.

இதயம் செயலிழந்ததற்கான அறிகுறிகள் :

இதயம் செயலிழந்ததற்கான அறிகுறிகள் :

இதய நோய்கள் போலவே இதயம் செயலிழந்து விட்டதற்கான அறிகுறிகளையும் நமது உடல் தெரிவிக்க வைத்துவிடும். அந்த அறிகுறிகளை என்னவென்று பார்க்கலாம்.

உடல் எடை அதிகரிக்கும் :

உடல் எடை அதிகரிக்கும் :

உடலில் கெட்ட நீர் அதிகம் அதான் உடல் குண்டாயிருக்கு என்பார்களே. அதற்கு காரணம் எட்டிம்மா எனப்படும் வீக்கம்தான். திரவங்கள் சீராக வடிகட்டி வெளியேற்ற முடியாமல் உள்லேயே தங்கி உடலை ஊதி எடையை அதிகரிக்கச் செய்யும்.

அடிக்கடி சிறு நீர் கழித்தல் :

அடிக்கடி சிறு நீர் கழித்தல் :

இதயம் செயலிழந்தால் ரத்த ஓட்டம் சரியாக சிறு நீரகங்களுக்கு செல்லாது. அந்த சமயத்தில் அதிக திரவ்ங்கள் சேகரமாகி அடிக்கடி சிறு நீர் கழித்தக் தோன்றும்.

காடராக்ட் :

காடராக்ட் :

காடராக்ட் நோயுடன் இருப்பவர்கள் பெரும்பாலோனோருக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை ஒன்றோடுன்று இதய செலிழப்பிற்கு தொடர்புடையவை.

இரவுகளில் இருமல் :

இரவுகளில் இருமல் :

இதய செயலிழப்பில் , திரவ நிலை அதிகம் நெஞ்சுப் பகுதியில் தேங்கியிருக்கும். தூங்கும்போது அவை அதிகமாக இருமலை உண்டாகும்.

இதய ஆரோக்கியத்திற்கு ஃப்ரெண்ட்லியான முக்கிய உணவுகள் :

இதய ஆரோக்கியத்திற்கு ஃப்ரெண்ட்லியான முக்கிய உணவுகள் :

வெள்ளை சால்மன் மீன் :

வெள்ளை சால்மன் மீனில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலு கொடுக்கும். செலினியம் அதிகம் இருப்பதால் அவை இதய வால்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது

 ஈரல் :

ஈரல் :

ஈரல் அதிக கொழுப்பை கொண்டுள்ளது. ஆனால் அவை மிகவும் ஆரோக்கியமான கொழுப்புக்களே. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதயத்தில் படியும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஆகவே தாராளமாக நீங்கள் ஈரலை எடுத்துக் கொள்ளலாம்.

வால் நட் :

வால் நட் :

வால் நட்டிலும் ஒமேகா அமிலங்கள், விட்டமின் ஈ, நார்ச்சத்து ஆகியவை உள்ளது. தினமும் வால் நட்டை சாப்பிடுங்கள். இதயம் 100 வயது வரை ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாம் :

பாதாம் :

பாதாமை ஊற வைத்து சாப்பிடுதல் இதய நோய் மட்டுமல்ல, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கிறது.

 காஃபி :

காஃபி :

காஃபி குடிப்பவர்கள் ஜோராய் சிரித்துக் கொள்ளுங்கள். காரணம் இதய நோய், புற்று நோய் என பலவித நோய்களை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் காஃபியில் இருப்பதாக பல ஆராய்ச்சிகள் கூறிவிட்டன.ஒரு நாளைக்கு 3 கப் காஃபி குடிக்கலாம். இவை நன்மையே தருகின்றது.

புரோக்கோலி :

புரோக்கோலி :

ப்ருகோல்லி, காலிஃப்ளவர் ஆகிய இரு காய்களை வாரம் இருமுறையாவது சாப்பிடுங்கள். இவை கொழுப்பை கரைக்கின்றது. இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

பழங்கள் :

பழங்கள் :

ஆப்பிள் ஆரஞ்சு, பெர்ரி பழங்கள் போன்றவற்றிலுள்ள நார்சத்துக்கள் இதய தசை நார்களுக்கு மிகவும் வலுவை தருகின்றன. ஆகவே வாரம் தவறாமல் அவற்றை சாப்பிடுங்கள்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவு. நல்லதும் கூட. சமைக்கும் நேரமும் மிகக் குறைவு. காலை நேர சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகளில்,ஓட்ஸும் உண்டு. என்வே ஸ்லிம்மாக இருக்கவும், இதய நோய்கள், கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கவும் தினமும் ஓட்ஸ் சாப்பிடுங்கள்.

உலர் திராட்சைகள் :

உலர் திராட்சைகள் :

உலர் திராட்சைகள் சுவை மட்டுமல்ல அற்புதமான சத்துக்கள் பெற்றவை. இவைகள் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் அதிகமாகும் சோடியத்தை குறைக்கின்றது. இதனால் ரத்த அழுத்தம், இதய நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.

எண்ணெய் :

எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய், அவகாடோ எண்ணெய் ஆகியவை பாதுகாப்பான எண்ணெய்கள். இவைகளில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டெட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை கல்லீரலுக்கு அனுப்புகின்றன. இருப்பினும் எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவாகவே பயன்படுத்துதல் நல்லது.

தினமும் ஒரு பைட் :

தினமும் ஒரு பைட் :

தினமும் ஒரு கடி டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை துடிப்பாக வைக்க உதவுகிறது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.அதில் 70 சதவீதம் கோகோ இருக்கும்படியான சாக்லேட் வகைகளை சாப்பிட வேண்டும்.

சிவப்பு பீன்ஸ் :

சிவப்பு பீன்ஸ் :

கடைகளில் விற்கும் சிவப்பு பீன்ஸ் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டால் உங்களுக்கு இதய நோய்கள் கிட்ட நெருங்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

4 அவுன்ஸ் ரெட் ஒயின் :

4 அவுன்ஸ் ரெட் ஒயின் :

தினமும் 3-4 அவுன்ஸ் ரெட் ஒயின் குடித்தால் இதயத் தமனிகளில் படியும் கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. உடல் பருமனானவர்கள் தினமும் 4 அவுன்ஸ் ஒயின் குடித்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do's and dont's for heart health and healthy foods for heart

Do's and dont's for heart health and healthy foods for heart