For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாய் தாக்கும் நோய்கள் !!

|

முக்கிய ஐரோப்பா நாடுகளில் இதய நோயை விட புற்று நோயாலேயேஅதிகம் இறக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. அதேபோல் யு. என் நாடுகளில் இஸ்ரேலிலும் புற்று நோயால்தான் அதிகம் இறக்கின்றனர்.

ஃப்ரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் புற்று நோயால் அதிக ஆண்கள் இறக்கின்றனர். அதேபோல், இஸ்ரேலில் பெண்கள் அதிகளவு புற்று நோயால் இறக்கின்றனர் என கணக்கெடுப்பு கூறுகிறது.

Cancer Kills more European than heart diseases

ஃப்ரான்ஸில் 2011 ஆம் ஆண்டு, 92, 375 பேர் புற்று நோயால் இறந்திருக்கின்றனர். இதய நோயால், 67 , 659 பேர் இறந்திருக்கின்றனர்.

அதேபோல் ஸ்பெயினில் 67,711 பேர் புற்று நோயாலும், 54,387 பேர் இதய நோயாலும் இறந்திருக்கின்றனர்.
பிரிட்டனில் 87,511 பேர் புற்று நோயாலும், 79,935 பேர் இதய நோயாலும் இறக்கின்றனர்.

புற்று நோயால் மேற்கு ஐரோப்பிய நாடுகளும், இதய நோயால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இறக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஆக்ஸ்ஃபோர்டு பக்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் நிக் என்பவர் கூறுகிறார்.

கிழக்கு ஐரோப்பாவில் சுமார் வருடத்திற்கு 4 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர் என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது

உலகளவில் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்களால் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்க வேண்டும். இதனால் அந்தந்த நாட்டு அரசாங்கம் இந்த நோய்களுக்கு கூடுதல் கவனமளித்து அவற்றை குறைக்க வழிகளை கண்டுணர வேண்டும் என அவர் மேலும் கூறுகிறார்.

இதைப் பற்றியான விரிவான தகவல்கள் யுரோப்பியன் ஜார்ட் ஜர்னல் என்னும் இதழில் உள்ளது.

English summary

Cancer Kills more European than heart diseases

Cancer Kills more European than heart diseases
Desktop Bottom Promotion