உங்க இதயத்தை பத்திரப்படுத்தனும்னா இந்த சப்ளிமென்ட்ரியை உடனே நிறுத்துங்க!!

Written By:
Subscribe to Boldsky

60 வயதிற்கு பிறகு மாரடைப்பு வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு மாரடைப்பின் விகிதம் அதிகம்.

வயதாகும்போது இன்னொரு பிரச்சனை வரும். எதுவென தெரிகிறதா? ஆமாம் மூட்டு தேய்மானம்.

Intake of Higher amount of calcium supplementary may damage your heart

எலும்புகள் தேய்ந்து ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோஃபோரொஸிஸ் ஆகியவை ஏற்படும். ஆனால் மூட்டு வலி என்று கால்சியம் சப்ளிமென்ட்ரி நீங்கள் சாப்பிடுவீர்களென்றால் இந்த கட்டுரை உங்களுக்குதான்.

இதயம் மற்றும் எலும்பு தேய்மானம் இந்த இரண்டிற்கும் மிக முக்கிய தொடர்பு இந்த கட்டுரையில் உள்ளது என்பது தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்சியம் மாத்திரை :

கால்சியம் மாத்திரை :

கால்சியம் மாத்திரை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக் கூடாது என்பது தெரியுமா?

சிலர் வயதாகிய தங்கள் எலும்பு பல்மாக இருக்க வேண்டும் என்று உணவோடு கால்சியம் மாத்திரைகளையும் விழுங்குவார்கள்.

இந்த மாத்திரையில் நடந்த ஆராய்ச்சியில் பல அதிர்ச்சியான உண்மைகளும் தெரிய வந்துள்ளன.

கால்சியம் நிறைந்த உணவும் ஆபத்து :

கால்சியம் நிறைந்த உணவும் ஆபத்து :

வெறும் மாத்திரைகள் மட்டுமல்லாது அதிக கால்சியம் நிறைந்த உணவுகளும் ஆபத்தை தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

எனவே அளவான கால்சியம் இருந்தாலே போதும். தேடிப்போய் கால்சியம் உணவுகளாய் சாப்பிடுவதை தவிருங்கள்.

முந்தைய ஆராய்ச்சி :

முந்தைய ஆராய்ச்சி :

முந்தைய ஆராய்ச்சியில் வயதானவர்கள் எடுத்துக் கொள்ளும் கால்சியம் மாத்திரை மற்றும் உணவுகள் எலும்புகளில் சேரப்படுவதில்லை.

அதே சமயம் சிறு நீரகத்தின் மூலமாகவும் வெளியேற்றப்படுவதில்லை. மாறாக அவை திசுக்களில் தங்க்விடுகிறது என்ற உண்மையை கண்டறிந்தனர்.

 கால்சியம் இதயத்தில் படிகிறது :

கால்சியம் இதயத்தில் படிகிறது :

கடந்த 10 வருடங்களாக கால்சியம் சத்தைப் பற்றி நடந்த ஆராய்ச்சியில் , அதிகப்படியான கால்சியம் ரத்தக் குழாய்களிலும், இதயத்தில் தமனிகளிலும் போய் தங்கி ப்ளேக் உருவாகிறது.

இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு வரும் சாத்தியம் பெருமளவு உள்ளது என்று அமெரிக்காவிலுள்ள ஜான் ஹாப்கின் மருத்துவ பல்கலைக் அக்ழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

10 வருடங்களில் தோராயமாக 45- 84 வயதுவரை உள்ள 2742 பெரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் அவர்களின் டயட், வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் எடுத்துக் கொள்ளும கால்சியம் அளவு ஆகியவ்ற்றை கணக்கிலெடுக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் இறுதியிலேயே அதிக கால்சியம் எடுத்துக் கொண்ட வயதானவர்களுக்கு மாரடைப்பு வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனை பற்றிய விரிவான தகவல் ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஹார்ட் அஸோசியேஷன் என்ற இதழில் வெளி வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Calcium supplement may damage your heart

Intake of Higher amount of calcium supplementary may damage your heart
Subscribe Newsletter