For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்!: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Instant foods are at risk for chronic diseases
கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

உடனடி உணவுகள்

சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள் பாக்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சூடு படுத்தினால் போதும் பத்து நிமிடத்திற்குள் உணவு தயாராகிவிடும். இந்த உடனடி உணவுகளை அதிகம் வாங்குவது வேலைக்கு போகும் இல்லத்தரசிகளும், வெளியூர்களில் ரூம் எடுத்து வேலைபார்க்கும், படிப்பவர்களும்தான்.

வசீகரிக்கும் விளம்பரங்கள்

மளிகைச் சாமான்களால் நிரம்பியிருந்த பலரது வீடுகளில் இன்றைக்கு இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இது தவறான செயல் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்ற வசீகர விளம்பரத்தில் மயங்கும் பெண்களும், இளம் தலைமுறையினரும் நேரமின்மையினால் இந்த உடனடி உணவுகளை வாங்கி ருசிக்கின்றனர். விளைவு சிறு வயதிலேயே மூளை பாதிப்பு, இதயநோய், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்

உடனடி உணவுகளில் மறைந்திருக்கும் முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவாக இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்பு என பல நோய்களுக்கும் இது காரணமாகிறது என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் மருத்துவர்கள்.

சோடியம் உப்பு

உடனடி உணவுகளில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.

நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த நோய் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

அதிக இனிப்பு பொருள்

பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இது உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.

கெட்டுப்போகாமல் தடுப்பவை

உடனடி உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேட்டிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.

அடுத்து உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது . இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக கலோரி ஆபத்து

ரெடிமேட் உணவுகளில் கலோரி அதிகம் உள்ளது எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக் கொண்டால் , மற்ற நேரங்களில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்.

English summary

Students who eat cheap instant foods are at risk for chronic diseases | உயிருக்கு உத்தரவாதமில்லாத 'இன்ஸ்டன்ட் புட்'!

College students may be putting their health on a back burner by filling up on instant noodles and baked beans. By consuming energy-dense foods and instant meals, students are increasing their risk of getting chronic diseases such as diabetes, cancer and heart disease, according to a new study in Australia.
Story first published: Monday, May 21, 2012, 13:30 [IST]
Desktop Bottom Promotion