Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
மார்பகப் புற்று நோயா இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை!

மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
கேன்சர் வந்தால் எந்த உறுப்பில் கேன்சர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்சரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்சரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி என்று பெயர்.
புற்றுநோய் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்சரை குணப்படுத்தி விடலாம்.பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். கதிர்வீச்சினை (ரேடியேஷன்) சிறு சிறு குழாய்கள் மூலம் கேன்சர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர்வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர்.
இச்சிகிச்சை மார்பக கேன்சர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற புராஸ்டேட் கேன்சருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும். இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்-கேன்சர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.
குடும்பத்தில் தாய்க்கு மார்பகப்புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வந்தால் மிகச்சீக்கிரமாக வலுவாக வளரும்.
லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்றுநோய் வரலாம். அதனால் ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
