Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
இதய நோய் உள்ளவர்கள் உடலுறவில் ஈடுபடலாமா? மருத்துவர்கள் என்ன சொல்றாங்க-ன்னு பாருங்க..
Heart Disease And Lovemaking In Tamil: உலகளவில் இதய நோயாளிகள் ஏராளமானோர் உள்ளனர். இதய நோய் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். முக்கியமாக உடலை வருத்தி எந்த வேலையையும் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
அதே சமயம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளுடன், லேசான உடற்பயிற்சிகளையும் அவசியம் மேறகொள்ள வேண்டும். ஆனால் நிறைய இதய நோயாளிகளின் மனதில் இருக்கும் ஒரு பொதுவான கேள்வி, இதய நோய் இருந்தால் உடலுறவில் ஈடுபடலாமா? ஈடுபடக்கூடாதா என்பது தான்.

பொதுவாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றே உடலுறவில் ஈடுபடும் போதும், உடலின் அனைத்து உறுப்புக்களும் வேகமாக செயல்பட வேண்டியிருக்கும். அதற்காக இதய நோயாளிகள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடலுறவில் ஈடுபடும் போது, மற்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றே இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை அதிகரிக்கும். இருப்பினும், உடலுறவு பாதுகாப்பானது. ஆனால் உடலுறவின் போது ஒருசில பிரச்சனைகளை சந்தித்தால், அதைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஆய்வு ஒன்றின் படி, உடலுறவில் ஈடுபடும் போது வெளியிடப்படும் எண்டோர்பின்கள் இதய நோயின் அபாயம் அதிகரிக்க காரணமான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது தவிர உடலுறவில் ஈடுபடும் போது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து இதய ஆரோக்கியத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
இதய நோயாளிகள் எப்போது உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்?
ஹார்வார்டு ஹெல்த்தின் படி, இதய நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உடலுறவு ஆபத்தானது அல்ல. ஆனால் உடலுறவில் ஈடுபடும் போது ஒருசில அறிகுறிகளை சந்தித்தால், உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* நெஞ்சு வலி
* சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்
* ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
* குமட்டல்
* அஜீரண கோளாறு
* தூக்கமின்மை அல்லது தூங்குவதில் சிரமம்
* உடல் களைப்பு மற்றும் சோர்வு
இதய நோய் எப்படி பாலியல் செயல்பாட்டை பாதிக்கின்றன?
மருத்துவர்களின் கூற்றுப்படி, இதய நோயானது பாலியல் வாழ்க்கையை பல வழிகளில் பாதிக்கின்றன. அதுவும் ஆண்களிடையே ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் குறைந்து விறைப்புத்தன்மை பிரச்சனையையும், பெண்களிடையே உடலுறவில் நாட்டம் குறையவும் செய்து, உச்சக்கட்ட இன்பத்தைப் பெற முடியாமலும் தடுக்கலாம். அதோடு இதய நோய் மன ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதித்து, பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. பெரும்பாலான இதய நோயாளிகள் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்
* ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை உண்ண வேண்டும்.
* சுறுசுறுப்பாக இருக்க தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
* உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.
* புகைப்பிடிப்பதைக் கைவிட வேண்டும்.
* கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications