Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
தொந்தியும் தொப்பையுமா குண்டா இருக்கீங்களா? அப்ப இந்த 5 இந்திய உணவுகள சாப்பிடுங்க... உடனே எடை குறைஞ்சிடுமாம்!
Weight Loss Tips In Tamil: நீங்க ரொம்ப குண்டா இருக்கீங்களா? தொந்தியும் தொப்பையுமா அசிங்கமான உடல் பருமன் தோற்றத்தை கொண்டிருக்கீங்களா? அப்ப உங்கள் உடல் எடையை குறைக்க நீங்க கண்டிப்பா முயற்சி செய்யணும். உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரணமா விஷயம் அல்ல. ஆனால், முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.
பிடிவாதமான தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்க நீங்க முதலில் ஆரோக்கியமான சமச்சீரான உணவை சாப்பிட வேண்டும். நல்ல உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். உடல் எடையை குறைக்க நீங்க பெரிதாக உணவுகளை தயாரிக்க வேண்டியதில்லை.

நம் இந்திய உணவுகளே, உங்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், ஆரோக்கியமான இந்திய உணவுகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்? இக்கட்டுரையில், அதைப் பற்றி கூறுகிறோம். இந்த உணவுகள் சுவையானது மட்டுமல்ல, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இது உங்கள் உணவுத் திட்டத்திற்கு ஒரு சிறந்த கூடுதலாகும். எடையையும் விரைவில் குறைக்க உதவும்.
வெஜிடபிள் பிரியாணி
உங்கள் எடை இழப்பு பயணத்தை சுவையான மற்றும் திருப்திகரமான காய்கறி பிரியாணியுடன் தொடங்குங்கள். நறுமண மசாலாப் பொருட்கள், கலவையான காய்கறிகள் மற்றும் நறுமணமுள்ள பாசுமதி அரிசி ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த கலவை உணவு உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
ஏனெனில், இவை, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றின் சீரான கலவையாகும். இந்த உணவு உங்கள் எடை இழப்புக்கு சிறந்த கூடுதலை வழங்கும்.
தந்தூரி சிக்கன்
சிக்கனில் புரதம் அதிகளவு நிறைந்துள்ளது. நீங்கள் புரதம் நிறைந்த உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்ப தந்தூரி சிக்கனை முயற்சி செய்யுங்கள். தயிர் மற்றும் மசாலாப் பொருட்களில் மாரினேட் செய்யப்பட்ட இந்த க்ரில்டு சிக்கன் ரெசிபியில் கொழுப்பு குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான உணவுக்கான சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த உணவை உங்கள் எடை இழப்பு பயண உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், விரைவிலேயே உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
மசாலா ஓட்ஸ்
விரைவில் செய்யக்கூடிய மிகவும் சத்தான உணவான மசாலா ஓட்ஸை நீங்கள் முயற்சி செய்யலாம். நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்கும் இந்த உணவு, ருசியான மசாலா மற்றும் காய்கறிகளுடன் தயாரிக்கப்பட்டு ஓட்ஸின் நன்மையை ஒருங்கிணைக்கிறது.
உங்களுக்கு ஓர் இதமான மற்றும் சத்தான காலை உணவாக மசாலா ஓட்ஸ் இருக்கும் அல்லது மிதமான இரவு உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதிகளவு உப்பைக் கொண்ட ஓட்ஸ் பேக்குகளை வாங்குவதை விட மசாலா ஓட்ஸை வீட்டிலேயே தயாரிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பாலக் பன்னீர்
சைவ உணவு விருப்பத்திற்கும் மற்றும் பிடிவாதமான உங்கள் தொப்பை கொழுப்பு மற்றும் எடையை குறைக்கவும் பாலக் பன்னீர் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த கிரீமி கீரை மற்றும் பன்னீர் கறியானது சுவையானது மட்டுமல்ல, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவாகும்.
முழு கோதுமை ரொட்டி அல்லது பிரவுன் ரைஸுடன் பாலக் பன்னீரை சேர்த்து ஒரு முழுமையான மற்றும் ஆரோக்கியமான உணவாக சாப்பிடுங்கள். இது உங்களை முழுதாக உணர வைக்கும், இதன் மூலம் உங்கள் உணவுக்குப் பிறகு தின்பண்டங்களை சாப்பிடுவதைத் தடுக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் எடை இழப்புக்கு நீங்கள் செய்யக்கூடிய முதல் விஷயம் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது.
மூங் தால் சில்லா
நீங்கள் ஆரோக்கியமான மற்றும் நிறைவான காலை உணவைத் தேடுகிறீர்கள் என்றால், மூங் டால் சில்லா உங்களுக்கான சரியான உணவுத் தேர்வாக இருக்கலாம். இந்த சுவையான பருப்பு அப்பத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், புரதச்சத்து நிரம்பியதாகவும் இருப்பதால், அவை எடை இழப்புக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இணையத்தில் பல்வேறு வகையான மூங் டால் சில்லா ரெசிபிகளை நீங்கள் காணலாம்.
இறுதிக் குறிப்பு
ஆரோக்கியமாக சாப்பிடுவது என்பது சுவையில் சமரசம் செய்வதல்ல. எடை இழப்புக்கான இந்த ஆரோக்கியமான இந்திய ரெசிபிகள் மூலம், உங்கள் எடை இழப்பு இலக்குகளை நோக்கி நீங்கள் பயணிக்கலாம். அதற்கான பலனையும் நீங்கள் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
