Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
தினமும் 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!
Health Tips In Tamil: நம் முன்னோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணம் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருள் தான். அக்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியங்களையே மேற்கொண்டார்கள்.
இயற்கை வைத்தியங்கள் என்பவை வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி கொடுக்கக்கூடிய வைத்தியமாகும். சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. அதில் ஒன்று தான் பெருங்காயம்.

இந்த பெருங்காயமானது ஒவ்வொரு சமையலிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. அதோடு பெருங்காயத்தை தினசரி உணவில் சேர்க்கும் போது, பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
முக்கியமாக தினமும் 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழும் தெரியுமா? கீழே பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. செரிமானம் மேம்படும்
பெருங்காயத் தூள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. தினசரி உணவில் பெருங்காயத் தூளை சேர்க்கும் போது, செரிமான பாதையில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, அஜீரண கோளாறுகள் தடுக்கப்படும். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை கலந்து குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக இருக்கும் மற்றும் வயிற்றின் pH அளவு சீராக இருக்கும்.
2. எடை இழப்புக்கு உதவும்
பெருங்காயத் தூள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலின் மெட்டபாலிச அளவு அதிகமாக இருந்தால், உடல் எடை வேகமாக குறையும். இன்னும் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடையில் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
3. சளியைத் தடுக்கும்
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அதுவும் குளிர்ச்சியான காலநிலையில் அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்படுவீர்களானால், பெருங்காய நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் பண்புகள், சளி பிடிப்பதைத் தடுக்கும்.
4. தலைவலி குறையும்
நீங்கள் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவீர்களா? அப்படியானால் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடியுங்கள். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலியில் இருந்து விடுபட உதவி புரியும். வெறும் வயிற்றில் பெருங்காய நீரைக் குடிக்கும் போது, அது தலையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அழற்சியைக் குறைத்து, தலைவலி வராமல் தடுக்கும்.
5. மாதவிடாய் கால வலி குறையும்
மாதவிடாய் காலத்தில் பல பெண்கள் கடுமையான வயிறு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். இந்த மாதிரியான சமயத்தில் பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், அது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, வலியில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும்.
6. இரத்த சர்க்கரை அளவு குறையும்
சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் மிகவும் நல்லது. ஏனெனில் பெருங்காயமானது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவி புரிகிறது. அதுவும் இது கணைய செல்களைத் தூண்டி, இன்சுலினை அதிகம் உற்பத்தி செய்ய வைத்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. சிறப்பான பலனைப் பெற, பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
7. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா? அப்படியானால் பெருங்காயம் அதை சிறப்பாக கட்டுப்படுத்தும். ஏனெனில் பெருங்காயத்தில் உள்ள கலவைகள் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு நீரில் பெருங்காயத் தூளை கலந்து குடிக்க பிடிக்காவிட்டால், மோரில் கலந்து குடிக்கலாம். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதை மட்டும் மறவாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications