Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மாரடைப்பை வரத் தூண்டும் பிபி, கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த பழங்களை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...
Health Tips In Tamil: தற்போது மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் உடலில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது தான்.
இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு வேறுபட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.

அதுவும் இந்த இதய நோயால் வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் தலைமுறையினரும் இறக்கிறார்கள். இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, ஆரோக்கியமான உணவுகளையும், வாழ்க்கை முறையையும் வாழ வேண்டும்.
இப்பிரச்சனைக்கு பழங்களும் நல்ல தீர்வைக் காண உதவுகிறது. நீங்கள் பழ விரும்பியாக இருந்தால், பழங்களை உட்கொண்டே இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். இப்போது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில பழங்களை காண்போம்.
பப்பாளி
பப்பாளியில் நார்ச்சத்து மட்டுமின்றி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இது சோடியத்தால் ஏற்படும் விளைவை நடுநிலையாக்குகிறது. மேலும் இது இரத்தக் குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை நீக்குவதோடு, மாரடைப்பை தடுக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. எனவே இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கொண்டவர்கள், தினமும் சிறிது பப்பாளியை காலையில் உட்கொண்டு வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
திராட்சை
திராட்சை மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புதமான பழமும் கூட. தினமும் சிறிது திராட்சையை உட்கொண்டு வந்தால், அது இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும். திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை இதய நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்களின் அபாயத்தையும் தடுக்கின்றன. மேலும் இது இரத்தம் உறைவதைத் தடுத்து, கொலஸ்ட்ராலால் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளையும் தடுக்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய சுவையான பழம். வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால், இதை உட்கொள்ளும் போது மாரடைப்பின் அபாயம் குறைக்கிறது. மேலும் இது மன அழுத்த அளவுகளைக் குறைப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
அவகேடோ
அவகேடோ பழம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு இவற்றில் உள்ள பொட்டாசியம், மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், டயட்டரி நார்ச்சத்து போன்றவை தான் காரணம். இவை அனைத்தும் இதயத்தை பாதுகாக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, இதய நோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. ஒருவர் தினமும் சிட்ரஸ் பழங்களை தங்களின் உணவில் சேர்த்து வந்தால், அது இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுவார்கள். இதற்கு ஆப்பிளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆப்பிளை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கணிசமாக குறைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இதயம் மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சோடியத்தைக் குறைக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications