Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உடம்பில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த பானங்களை அடிக்கடி குடிங்க போதும்...
Health Tips In Tamil: நமது உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த இரத்தம் தான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்களை கொண்டு செல்கின்றன.
உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக செயல்படும். அப்படிப்பட்ட இரத்தம் நன்கு சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய உணவுப் பழக்கங்கள் மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழலால் நமது இரத்தத்தில் நிறைய நச்சுக்கள் சேர்க்கின்றன.

நமது உடலில் உள்ள சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் போன்றவை இயற்கையாகவே இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை செய்கின்றன. இருப்பினும் அவற்றால் மட்டும் இரத்தத்தை முழுமையாக சுத்தம் செய்ய முடியாது.
நமது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் ஒருசில இயற்கை பானங்களையும் அடிக்கடி குடிக்க வேண்டும். இப்போது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் அந்த பானங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸ் நல்ல சுவையான மற்றும் தாகத்தை தணிக்கும் பானம் மட்டுமின்றி, நல்ல செரிமானத்தைத் தூண்டவும் உதவி புரிகிறது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது மற்றும் இது pH அளவை சமநிலையில் பராமரிப்பதோடு, இரத்தத்தில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது.
அமிலத்தன்மை நிறைந்த சூழலில் வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் உயிர்வாழ முடியாது. ஆகவே இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸை குடியுங்கள். அதுவும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.
2. ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா
ஆப்பிள் சீடர் வினிகருடன், பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து எடுக்கும் போது, அது உடலில் pH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. முக்கியமாக இந்த கலவையானது இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்குகிறது.
இந்த பானத்திற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நீரை ஊற்றி, உடனே குடிக்க வேண்டும். ஆனால் இந்த பானத்தை உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
3. துளசி நீர்
மிகவும் புனிதமான துளசி இலைகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த துளசி இலைகளானது இரத்தத்தை ஏத்தம் செய்ய உதவுவதோடு, இரத்தத்தில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. அதுவும் இந்த நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
அதற்கு சிறிது துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
4. மஞ்சள் பால்
மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட பொருள். இந்த மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. இதற்கு அதில் உள்ள குர்குமின் என்னும் பொருள் தான் காரணம். முக்கியமாக இந்த மஞ்சள் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவி புரிகிறது.
இப்படிப்பட்ட மஞ்சள் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, கல்லீரலில் செயல்பாடும் மேம்படும்.
5. தண்ணீர்
எப்போதுமே தண்ணீர் நச்சுக்களை நீக்க உதவும் அற்புதமான பானம். தண்ணீரானது ஒருவரது தாகத்தை தணிப்பதைத் தவிர, இரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவி புரிந்து, உடலுறுப்புக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஆகவே இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டுமானால், தினமும் நிறைய தண்ணீரைக் குடியுங்கள். இதனால் நச்சுக்களானது சிறுநீர் வழியே வெளியேறிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications