Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
அடிக்கடி கை, கால் மரத்துப் போகுதா? இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க சரியாயிடும்...
Health Tips In Tamil: ஒருசிலருக்கு அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் மரத்துப் போகும். இப்படி மரத்துப் போகும் போது, கை, கால்களை அசைக்க முடியாது. ஒருவருக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறது என்றால், அவரது உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம்.
உடலுறுப்புக்கள் எவ்வித தடையுமின்றி சரியாக செயல்பட வேண்டுமானால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், உறுப்புக்களின் செயல்பாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.

மோசமான இரத்த ஓட்டமானது இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்றவற்றில் பிரச்சனைகளை வரவழைத்துவிடும். சரி, உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதை ஆரம்ப கட்டத்தில் எப்படி அறிவது என்று கேட்கலாம்.
எப்போது ஒருவருக்கு அடிக்கடி தசை பிடிப்புகள், வலி, கை அல்லது கால்கள் மரத்துப் போவது, செரிமான பிரச்சனைகள் மற்றும் கை அல்லது கால்கள் மிகவும் ஜில்லென்று இருப்பது போன்ற அறிகுறிகளை சந்திக்கிறார்களோ, அவரது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க மருந்துகள் உதவுகின்றன. இருப்பினும் ஒருசில உணவுகளும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன. இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
கடல் மீன்கள்
மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இந்த அமிலங்கள் தமனிகளில் இரத்தம் உறைவதை தடுக்கின்றன மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவுகின்றன. இதன் விளைவாக உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சால்மன், கானாங்கெளுத்தி, சூரை மற்றும் ட்ரௌட் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கின்றன. மேலும் சிட்ரஸ் பழங்களில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.
இதில் உள்ள சிட்ரிக் அமிலம் இரத்தம் உறைவதைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவி புரியும். எனவே உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
நட்ஸ்
நட்ஸ்கள் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ். நட்ஸ்களை உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் நட்ஸ்களில் மக்னீசியம், பொட்டாசியம், அர்ஜினைன் மற்றும் கால்சியம் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.
இதில் இருக்கும் அர்ஜினைன் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்ய உதவி புரிந்து, இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வழிவகை செய்கிறது. ஆகவே மோசமான இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்கள் வால்நட்ஸ், ஹாசில் நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றை ஸ்நாக்ஸாக எடுப்பது நல்லது.
வெங்காயம் மற்றும் பூண்டு
இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளது. அதேப் போல் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டும் இவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இதற்கு இவற்றில் உள்ள சல்பர் தான் காரணம். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக வெங்காயத்தில் உள்ள ஆக்ஸிடன்ட் மற்றும் ப்ளேவோனாய்டுகள், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











