Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Curry Leaves Water Benefits In Tamil: நமது தினசரி சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை உணவிற்கு ஒரு நல்ல மணத்தை, ப்ளேவரையும் தரக்கூடியது. இந்த கறிவேப்பிலை நம்மில் பலர் தூக்கி எறிந்துவிடுவோம்.
ஆனால் இந்த கறிவேப்பிலை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. ஏனெனில் இந்த சிறிய இலையில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இந்த கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அதில் உள்ள சத்துக்களால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதுவும் இந்த கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் நீரை தினமும் காலையில் குடித்து வரும் போது, உடலினுள் ஏராளமான மாற்றங்களைக் காண முடியும்.

முக்கியமாக இந்த மாற்றங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். சொல்லப்போனால் காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால், பலவிதமான நன்மைகளைப் பெறலாம். இப்போது கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. எடை இழப்புக்கு உதவும்
தற்போது உடல் எடையைப் பராமரிப்பது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. ஆனால் கறிவேப்பிலை நீரை குடித்து வந்தால், எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரிக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது. மேலும் இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.
2. செரிமான மண்டலம் வலுவடையும்
தற்போது அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பண்புகள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றி குடிக்கும் போது, அது வயிற்றில் வாய்வு உருவாவதைக் குறைக்கிறது, அசிடிட்டியில் இருந்து நிவாரணமளிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதோடு இது வயிற்று பண்ணைக் குறைக்கிறது மற்றும் குடல் வீக்கத்தைக் குறைக்க உவுகிறது.
3. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரியும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை சட்டென்று உயர்வதைத் தடுக்கும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள உட்பொருட்கள் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை ஊக்குவித்து, டைப்-2 சர்க்கரை நோயைப் பராமரிக்க உதவுகிறது.
4. சருமம் மற்றும் முடிக்கு நல்லது
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. இந்த கறிவேப்பிலையின் நீரை குடித்து வந்தால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும். மேலும் இந்த கறிவேப்பிலை முகப்பரு வருவதைக் குறைத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக கறிவேப்பிலை தலைமுடி உதிர்வதையும், முடி நரைப்பரையும் தடுக்க பெரிதும் உதவி புரிகிறது.
5. கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, அதன் மூலம் இதய நோயின் அபாயம் குறையும். இது தவிர, இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அத்தியாவசியமானது. அதே சமயம் ஃபோலிக் அமிலம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிகிறது.
என்ன தான் கறிவேப்பிலை உடலுக்கு நன்மைகளை வழங்கினாலும், கர்ப்பிணிகள் அல்லது பிற நோய்களைக் கொண்டவர்கள், கறிவேப்பிலை நீரை தினமும் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை நீரை தயாரிப்பது எப்படி?
* ஒரு பாத்திரத்தில் 1 கொத்து கறிவேப்பிலையைப் போட்டு, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, மூடி வைத்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை வடிகட்டி, அந்நீரில் சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications