Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
கடவுளின் தானியம் என்று அழைக்கப்படும் இந்த தானியம் நீங்க எதிர்பார்க்காத விதத்தில் ஆயுளை அதிகரிக்குமாம்...!
அமராந்த் ஒரு ஆரோக்கியமான உணவாக சமீபத்தில் பிரபலமடைந்தது, இந்த பழங்கால தானியமானது உலகின் சில பகுதிகளில் உணவில் பிரதானமாக உள்ளது. இந்த உணவு நார்ச்சத்து, புரதம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து மற்றும் பல முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி கூற்றுப்படி, அமராந்த் ஒரு விதிவிலக்கான, குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு சூப்பர்ஃபுட். இது இந்தியாவில் காலங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு பழங்கால தானியமாகும், மேலும் இது "ராம்தானா" (கடவுளின் தானியம்) அல்லது "ராஜ்கிரா" (அரசர்களின் தானியம்) என்றும் பெயரிடப்பட்டது. இது ஒரு மென்மையான மற்றும் மாவு போன்ற சுவை கொண்டது. உங்கள் உணவில் அமராந்தை சேர்க்க வேண்டியதன் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு
பைட்டோஸ்டெரால்கள் இருப்பதால், அமராந்தில் கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது
அமராந்தின் செரிமானத்தின் போது வெளியிடப்படும் பெப்டைடுகள் உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பயோஆக்டிவ் பெப்டைட் லுனாசினின் இருப்பு தானியத்திற்கு அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது.
உயர்தர புரதத்தின் ஆதாரமாக இருக்கிறது
இது புரதத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது, குறிப்பாக தாவர அடிப்படையிலான அல்லது பசையம் இல்லாத உணவில் இருப்பவர்களுக்கு, இது மிகவும் அவசியமானது. 100 கிராம் அமரந்தில் 13.27 கிராம் புரதம் உள்ளது. அத்தியாவசிய அமினோ அமிலங்களின் சிறந்த சமநிலை காரணமாக, இது 87-89% உயர்தர புரதமாக இருக்கிறது. மேலும், இந்த தானியத்தில் சபோனின் உள்ளடக்கம் மிகக் குறைவாக இருப்பதால், ஊறவைக்க தேவையில்லை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.
நார்ச்சத்து நிறைந்தது
மலச்சிக்கலை நிவர்த்தி செய்வதில் உதவியாக இருப்பதுடன், அமராந்த் குடலில் ப்ரீபயாடிக் விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது "குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களின்" தொகுப்பை அதிகரிக்கிறது.
நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்களின் வளமான ஆதாரமாக இருக்கிறது. இது வைட்டமின் B6, ஃபோலேட் உட்பட பல அத்தியாவசிய வைட்டமின்களின் நல்ல மூலமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

