Happy Birthday Trisha: 42 வயதிலும் நடிகை த்ரிஷா ஃபிட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க...

Actress Trisha Fitness Secret: தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் த்ரிஷா. இவர் 20 ஆண்டுகளாக திரையுலகில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். எப்படி தனது திரையுலக வாழ்க்கைத் தொடங்கும் போது சிக்கென்று க்யூட்டாக இருந்தாரோ, இன்று வரை அப்படியே ஃபிட்டாக உள்ளார்.

இன்று நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 42 வயதாகியும் நடிகை த்ரிஷா இப்படி ஃபிட்டாக இருப்பதற்கு என்ன தான் ரகசியம் என்று பலரும் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதுண்டு. உங்களுக்கும் நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொண்டு, அவரைப் போன்றே ஃபிட்டாக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே நடிகை த்ரிஷா தன்னுடைய ஃபிட்னஸிற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Happy Birthday Trisha Tamil Actress Trisha Diet And Fitness Secret

நீர்ச்சத்து அவசியம்

நடிகை த்ரிஷா ஒரு மாடலும் கூட என்பதால் இவருக்கு அழகை பராமரிக்க நீர்ச்சத்து எவ்வளவு அவசியம் என்பதை நன்கு அறிந்தவர். இதனால் இவர் தினமும் நிறைய தண்ணீரைக் குடிப்பாராம். அதுவும் வெறும் நீரை மட்டுமின்றி, நற்பதமான ஜூஸ்களையும் அதிகமாக குடிப்பாராம். அதுவும் ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றின் ஜூஸ்களை அதிகமாக தனது டயட்டில் சேர்ப்பாராம். இது தவிர த்ரிஷா காபி, டீ-க்கு பதிலாக, க்ரீன் டீயைத் தான் அதிகம் குடிப்பாராம்.

காலை உணவு

காலை உணவு ஒருநாளின் மிகவும் முக்கியமான உணவாகும். இது தான் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதை த்ரிஷா நன்கு அறிந்தவர். இவர் ஒருநாளும் காலை உணவை தவிர்க்கமாட்டாராம். பெரும்பாலும் இவரது காலை உணவில் சப்பாத்தி, ஆம்லெட், தயிர் போன்றவை இருக்குமாம்.

சிட்ரஸ் பழங்கள்

நடிகை த்ரிஷா நல்ல பொலிவான மற்றும் பிரகாசமான சருமத்தை பெற்றிருப்பதற்கு காரணம், அவரது டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்ப்பது தான். இவரது தினசரி டயட்டில் சிட்ரஸ் பழங்களுள் ஏதாவது ஒன்றாவது கட்டாயம் இருக்குமாம். இதனால் தான் இத்தனை வயதாகியும் த்ரிஷா அதே பளபளப்பான சருமத்துடன் இருக்கிறார். மேலும் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் திறன் கொண்டது. இதுவும் இவரது ஃபிட்டான உடலுக்கு முக்கியமான ஒன்று எனலாம்.

உடற்பயிற்சி

நடிகை த்ரிஷா தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் சில மணிநேரங்கள் அவசியம் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம். அதுவும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யாமல் வெவ்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வாராம்.

த்ரிஷாவிற்கு மிகவும் விருப்பமான உடற்பயிற்சி என்றால், அது கைகளையும் உடலையும் ஒருசேர வலுப்படுத்தும் புஷ் அப் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள் தான். இந்த இரண்டு வகையான உடற்பயிற்சிகள் தான் இவரது உடலை சிக்கென்று பராமரிக்க உதவுவதாகவும் கூறுகிறார்.

யோகா

த்ரிஷாவிற்கு உடற்பயிற்சியில் எவ்வளவு விருப்பம் உள்ளதோ, அதே அளவில் யோகாவில் ஆர்வம் உள்ளது. யோகாசனம் செய்வதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். முக்கியமாக யோகா மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலின் மெட்டபாலிசத்தை தூண்டிவிடவும் உதவக்கூடியது. எனவே இதை மேற்கொள்வதாலும் த்ரிஷா ஃபிட்டாக இருக்கலாம்.

நீச்சல்

நடிகை த்ரிஷாவிற்கு நீச்சல் ரொம்ப பிடிக்குமாம். எவ்வளவு நேரம் நீச்சல் செய்ய சொன்னாலும், மகிழ்ச்சியாக செய்வாராம். பொதுவாக நீச்சல் ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சி அளிக்கும் ஒரு அற்புதமான உடற்பயிற்சி. இந்த நீச்சலை மேற்கொள்வதாலோ என்னவோ, த்ரிஷா இன்று வரை ஃபிட்டாக உள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, May 4, 2025, 11:47 [IST]
Desktop Bottom Promotion