Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
டெல்லியில் வேகமாக பரவும் H3N2 ப்ளூ: இதன் அறிகுறிகள் என்ன, எப்படி தடுப்பது - விளக்கும் டாக்டர்!
H3N2 Influenza: தற்போது டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் H3N2 ப்ளூ அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. டெல்லி மருத்துவமனைகளில் இந்த தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருப்பதால், நிறைய பேர் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற பல பிரச்சனையால் அவதிப்படுவதை காண முடிகிறது. இதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், குளிர்ச்சியான காலத்தில் பரவக்கூடிய ஒருசில வைரஸ் தொற்றுகளும் முக்கிய காரணமாக உள்ளன.

அப்படி தான் டெல்லியில் H3N2 ப்ளூ என்னும் சீசனல் ப்ளூ பரவிக் கொண்டிருக்கிறது. சரி, இந்த H3N2 ப்ளூ என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, யாருக்கெல்லாம் இத்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மற்றும் இதை எப்படி தடுப்பது என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை டாக்டர் தீப்தி ஜிம்மி விரிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
H3N2 ப்ளூ என்றால் என்ன?
அதில் அவர் கூறியதாவது, " முன்பெல்லாம் H1N1 ப்ளூ பரவிக் கொண்டிருந்தது. அதன் பின் அது உருமாற்றமடைந்து பரவத் தொடங்கியது தான் H3N2 ப்ளூ அல்லது சீசனல் ப்ளூ. இது எதனால் வருகிறது என்றால் இன்ப்ளூயன்சா வைரஸ் மூலம் வரக்கூடியது. இந்த இன்ப்ளூயன்சாவில் 4 வகைகள் உள்ளன. அவை
* இன்ப்ளூயன்சா ஏ
* இன்ப்ளூயன்சா பி
* இன்ப்ளூயன்சா சி
* இன்ப்ளூயன்சா டி
இதில் H3N2 ப்ளூ தொற்றானது இன்ப்ளூயன்சா ஏ வகையால் ஏற்படக்கூடியது." என்று டாக்டர் கூறினார்.
டைப்-ஏ வைரஸ் உடலினுள் சென்றால் என்ன செய்யும்? அறிகுறிகள் என்ன?
"பொதுவாக உடலினுள் எந்த வைரஸ் நுழைந்தாலும், அதிகப்படியான காய்ச்சலுடன், கடுமையான உடல் வலி, வறட்டு இருமல், தும்மல், மூக்கு ஒழுகல் போன்றவற்றை அனுபவிக்கக்கூடும். சமீப காலமாக இந்த அறிகுறிகளுடன் மிக்கள் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் நிறைய பேர் அனுபவிக்கின்றனர்." என்று டாக்டர் கூறினார்.
H3N2 ப்ளூ எப்படி பரவுகிறது? யாரை எளிதில் தொற்றும்?
"H3N2 ப்ளூ மூலம் சளி பிடித்திருந்தால் அல்லது வேறு எந்த வகையான சுவாச தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும், அது காற்று நீர்த்துளிகள் மூலமாக தான் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட H3N2 ப்ளூ 15 வயதிற்கு குறைவான குழந்தைகள் மற்றும் 50-60 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களை எளிதில் தாக்கும். இது தவிர ஆஸ்துமா, இதய நோய்கள் அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிலைகள் இருந்தாலும், அத்தகையவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், அவர்களையும் எளிதில் தாக்கலாம். மேலும் கர்ப்பிணிகளுக்கு கூட இத்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று டாக்டர் கூறினார்.
H3N2-வை தடுப்பது எப்படி?
* H3N2 தொற்றை தடுக்க வேண்டுமானால், மீண்டும் மாஸ்க்குகளை அணிய வேண்டும். இது காற்று நீர்த்துளிகள் மூலம் பரவக்கூடியது என்பதால், மாஸ்க் அணிவதன் மூலம், பரவுவதைத் தடுக்கலாம்.
* தேவையில்லாமல் முகத்தை கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் மற்றும் சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.
இந்த 2 விஷயங்களை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், H3N2 தொற்று ஏற்படுவதை தடுக்கலாம் என்று டாக்டர் கூறினார்.
சிகிச்சைகள்
"H3N2 என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்றிற்கும் சிகிச்சைகள் உள்ளன. அதுவும் மருத்துவர்கள் இதற்கு ஆன்டி-வைரல் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் எடுத்ததும் ஆன்டி-வைரல் மருந்துகளை உடனே கொடுக்கமாட்டார்கள். அது H3N2 தொற்று என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, ஆன்டி-வைரல் மருந்துகளை கொடுக்க தொடங்குவார்கள்.
ஒருவேளை காய்ச்சல் மிகவும் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி பாராசிட்டமலை எடுக்கத் தொடங்கலாம். ஆயினும் காய்ச்சல் கட்டுப்படாமல், 2-3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்திருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் ஆன்டி-வைரல் மருந்துகளை எவ்வளவு வேகமாக எடுக்க தொடங்குகிறோமோ, அவ்வளவு விரைவில் இந்த தொற்றில் இருந்து மீண்டு வரலாம்." என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தெரிந்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications