Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
உணவுகளைப் பொரிக்க ஏற்ற டாப் 4 எண்ணெய்களை பட்டியலிட்ட அமெரிக்க டாக்டர்! என்னென்னன்னு பாருங்க..
Cooking Oils For Deep Frying: நமது தினசரி சமையலில் பயன்படுத்தும் முதன்மையான மற்றும் முக்கியமான பொருள் தான் எண்ணெய். எந்த சமையலை சமைக்க தொடங்குவதாக இருந்தாலும், முதலில் எண்ணெயைத் தான் பயன்படுத்துவோம்.
அப்படிப்பட்ட எண்ணெயை சமையலுக்கு தேர்வு செய்யும் போது கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு எண்ணெயும் வெவ்வேறு புகைப்புள்ளியைக் கொண்டிருக்கும். அந்த புகைப்புள்ளிக்கு அதிகமாக எண்ணெயை சூடேற்றும் போது, அந்த எண்ணெயின் சுவை மற்றும் தரம் பாழாகி, உடலுக்கு தீங்கு விளைவிக்க தொடங்கிவிடும்.

பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனெனில் எண்ணெயில் பொரித்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். அதற்காக முழுமையாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று. இந்நிலையில் எப்போதாவது சாப்பிடலாம்.
அப்படி எண்ணெயில் உணவுகளைப் பொரிப்பதாக இருந்தால், சரியான எண்ணெய்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுவும் அதிக புகைப்புள்ளி கொண்ட எண்ணெயை தேர்ந்தெடுத்து சமையலில் பயன்படுத்த வேண்டும்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் டிப்ஸ்கள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர். சௌரப் சேத்தி அவ்வப்போது செய்திகளை வெளியிடுவார். அந்த வகையில் உணவுகளை பொரிக்க எந்த எண்ணெயை தேர்வு செய்ய வேண்டுமென்று டாக்டர் சேத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுக்குறித்து காண்போம்.
பொதுவாக உணவுகளை எண்ணெயில் ஆழமாக வறுப்பது சிறந்த சமையல் முறை இல்லையென்றாலும், சரியான எண்ணெயை தேர்வு செய்து பயன்படுத்தும் போது, அது ஆரோக்கியத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். முக்கியமாக செரிமான மண்டலத்தில் சில சேதங்களைக் குறைக்கலாம் என்று கூறினார்.
டாக்டர் சேத்தி பரிந்துரைத்த எண்ணெய்கள் அனைத்தும் அதிக புகைப்புள்ளியைக் கொண்டுள்ளன. புகைப்புள்ளி என்பது எண்ணெய் புகையை உருவாக்கத் தொடங்கும் வெப்பநிலையாகும். அதிக புகைப் புள்ளி விரும்பத்தக்கது. ஏனெனில் எண்ணெய் புகைக்கத் தொடங்கும் போது, அது உடைந்து, உணவின் தரம் மற்றும் உங்கள் குடல் ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை வெளியிடுகிறது. இப்போது டாக்டர்.சேத்தி பரிந்துரைத்த அந்த எண்ணெய்கள் எவையென்பதைக் காண்போம்.
1. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்
உணவுகளை சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். ஏனெனில் இந்த எண்ணெய் நிறைவுற்ற கொழுப்புக்களால் நிறைந்தது மற்றும் இது சுமார் 00 டிகிரி அதிக புகை புள்ளியைக் கொண்டது என்று டாக்டர் கூறினார்.
2. சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் ஆயில்
சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது நல்லது. ஆனால் அனைத்து வகையான ஆலிவ் எண்ணெயும் உணவுகளைப் பொரிக்க ஏற்றவை அல்ல. உணவுகளைப் பொரிக்க வேண்டுமானால் சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன மற்றும் இது சுமார் 465 டிகிரி பாரன்ஹீட் அதிக புகை புள்ளியைக் கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை உணவுகளைப் பொரிக்க பயன்படுத்தாதீர்கள்.
3. நெய்
நிறைய பேர் நெய் அதிக கொழுப்பு நிறைந்த ஒன்றாக நினைக்கின்றனர். ஆனால் உணவுகளை பொரிக்க நெய் மிகவும் சிறந்தது. நெய்யானது 450 டிகிரி பாரன்ஹீட் வரை அதிக புகை புள்ளியைக் கொண்டுள்ளது என்று டாக்டர் சேத்தி கூறினார்.
4. அவகேடோ எண்ணெய்
கடைசியாக அவகேடோ எண்ணெயும் உணவுகளைப் பொரிக்க ஏற்ற சிறந்த எண்ணெயாகும். மற்ற எண்ணெய்களை விட அவகேடோ எண்ணெய் அதிக புகைப் புள்ளி சுமார் 520 டிகிரி பாரன்ஹீட் ஆகும். எனவே இந்த எண்ணெயை பொரிப்பதற்கு பயன்படுத்தலாம் என்று டாக்டர் சேத்தி கூறினார்.
பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள்
உணவுகளை பொரிக்க எப்போதும் சூரிய காந்தி, சோயா பீன், கனோலா போன்ற விதை எண்ணெய்களை பயன்படுத்தக்கூடாது என்று டாக்டர் சேத்தி எச்சரித்தார். ஏனெனில் இந்த எண்ணெய்களில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன மற்றும் அதிக வெப்பநிலையில் இவை ஆக்ஸிஜனேற்றம் செய்யக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications