Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கறிவேப்பிலையை இந்த 5 உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுங்க.. எலும்பு இரும்பு மாதிரி வலுவாகும்..
Foods For Strong Bones In Tamil: நமது தினசரி சமையலில் தாளிக்க பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. சொல்லப்போனால் இந்த கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கறிவேப்பிலை நல்ல மணத்துடன், ஏராளமான சத்துக்களையும் கொண்டது. குறிப்பாக இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது, கொலஸ்ட்ராலை சீராக்குகிறது மற்றும் முடி, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
முக்கியமாக 100 கிராம் கறிவேப்பிலையில் 830 மிகி கால்சியம் உள்ளதால், எலும்புகள், பற்கள் மற்றும் மூட்டுக்களை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேரும் ஆய்வுகளின் படி, இதில் கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின்களுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் உள்ளன.

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வந்தால், தற்போது பல சந்திக்கும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். அதுவும் இந்த கறிவேப்பிலையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, உடலுக்கு கால்சியம் போதுமான அளவு கிடைத்து, எலும்புகள் வலுவடையும். இப்போது எந்த உணவுப் பொருட்களை கறிவேப்பிலையுடன் சேர்த்து சாப்பிட்டால், இரட்டிப்பு கால்சியம் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. எள்ளு விதைகள்
எள்ளு விதைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. அதுவும் 1 டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகளில் 88 மிகி கால்சியம் உள்ளது. இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது. மேலும் இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற எள்ளு விதைகளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடி தயாரித்து, சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
2. ராகி
தானியங்களிலேயே ராகியில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளன. அதுவும் 100 கிராம் ராகியில் சுமார் 344 மிகி கால்சியம் உள்ளன. அதுவும் மற்ற தானியங்களை விட ராகியில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற ராகி மாவுடன், கறிவேப்பிலையை வறுத்து சேர்த்து தோசையாகவோ அல்லது ரொட்டியாகவோ அல்லது கஞ்சியாகவோ உட்கொள்ளலாம்.
3. பன்னீர்
பன்னீர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களுள் ஒன்று. அதுவும் 100 கிராம் பன்னீரில் 200-250 மிகி கால்சியம் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ளவும், தசைகளின் செயல்பாட்டை ஆதரிக்கவும், நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற பன்னீருடன் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிடலாம்.
4. பாதாம்
உடலில் கால்சியத்தை அதிகரிக்க பாதாமை உட்கொள்வது சிறந்த வழியாகும். 100 கிராம் பாதாமில் 264 மிகி கால்சியம் உள்ளது. அதோடு, இதில் வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களும் உள்ளன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற பாதாமுடன், கறிவேப்பிலையை சேர்த்து சட்னி தயாரித்தோ அல்லது சாலட்டுகளின் மேல் தூவியோ உட்கொள்ளலாம்.
5. முருங்கைக்கீரை
முருங்கைக்கீரையிலும் கால்சியம் அதிகம் உள்ளது. அதுவும் 100 கிராம் முருங்கைக்கீரையில் 440 மிகி கால்சியம் உள்ளது. சொல்லப்போனால் மற்ற உணவுகளை விட அதிகளவு கால்சியம் இந்த கீரையில் உள்ளது. இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைவதோடு, மூட்டுகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கிறது. சிறந்த அளவில் கால்சியம் சத்தைப் பெற முருங்கைக்கீரையுடன் கறிவேப்பிலையை சேர்த்து சப்ஜி செய்தோ, பொரியலாகலோ சாப்பிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications