Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு இந்த பொருட்களை தெரியாம கூட சாப்பிடாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...!
பழங்கள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஆப்பிள்தான். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாமென்று கூறுவார்கள். இந்த கூற்று ஓரளவிற்கு உண்மைதான், ஏனெனில் ஆப்பிளில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக மட்டும் இல்லாமல், இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் பழமாகும். பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் ஆப்பிளின் நன்மைகள் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம். இது மட்டுமின்றி, 1 அல்லது 2 ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவதால், நம்முடைய பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

ஆப்பிள்களில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன, மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 போன்றவையும் உள்ளன.
அனைத்து உணவுகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் இருக்கும். இதற்கு ஆப்பிளும் விதிவிலக்கல்ல. ஆப்பிள் சாப்பிடுவது ஒருபுறம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், கல்லீரலை வலுப்படுத்தவும், பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். ஆனால் ஆப்பிளை சாப்பிட்ட உடனேயே சில பொருட்களை சாப்பிடுவது உங்களுக்கு நன்மைகளுக்குப் பதிலாக கெடுதலையே ஏற்படுத்தும். இந்த பதிவில் ஆப்பிள் சாப்பிட்டவுடன் சாப்பிடக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக்கூடாது
பாலுடன் தயிர் சாப்பிடக்கூடாது என்று எப்படி அறிவுறுத்தப்படுகிறதோ, அதே போல் ஆப்பிளை சாப்பிட்ட உடனேயோ அல்லது சுமார் 2 மணி நேரத்திற்குள்ளோ தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால், ஆப்பிள் மற்றும் தயிர் இரண்டின் விளைவும் குளிர்ச்சியாகக் கருதப்படுகிறது, இது ஒன்றாக உட்கொண்டால், சளி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புளிப்பான பொருட்கள்
நீங்கள் ஆப்பிள் சாப்பிட்டிருந்தால், அதன் பிறகு புளிப்பு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக ஊறுகாய் அல்லது எலுமிச்சை உட்கொள்ளல் உங்களுக்கு வாயு, அமிலத்தன்மை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஆப்பிள் சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் புளிப்பான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
தண்ணீர் குடிக்கக் கூடாது
பொதுவாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதாகவும், பாதிப்பில்லாததாகவும் கருத்தப்பட்டாலும் குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் அல்லது இனிப்புப் பழங்களை உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. இது உங்கள் pH அளவில் தாக்கம் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல், வயிற்று பாக்டீரியா மற்றும் வாயுக்கோளாறை ஏற்படுத்துகிறது.
மேலும் ஆப்பிள் அல்லது ப்ரெக்டொஸ் உள்ள ஏதேனும் ஒரு பொருளை உட்கொண்ட பிறகு, தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் ஈஸ்ட் உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது, இதனால் வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.
முள்ளங்கி
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் வரலாம், அது சருமத்தில் சொறி அல்லது அலர்ஜியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இதற்கு மேலும் சான்றுகள் தேவைப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
