Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கீல்வாதத்தால் அவதிப்படுகிறீர்களா? இந்த டயட்டை தவறாம ஃபாலோ பண்ணுங்க...
இந்த காலத்து முதியோர்கள் பலர் அவதிப்படும் ஒரு முக்கிய பாதிப்பு கீல்வாதம். வயது அதிகரிக்கும் போது தானாகவே இந்த பாதிப்பு பலருக்கும் வந்துவிடுகிறது. எலும்பு சீர்குலைவு காரணமாக வீக்கம் உண்டாகிறது, இதனைத்
நமது முன்னோர்கள் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை காரணமாக தற்போது நாம் அனுபவிக்கும் பல நோய்களை அனுபவிக்கவில்லை. புதிய உணவுகள், பாரம்பரிய உடற்பயிற்சி முறைகளான யோகா, தியானம் போன்றவை, மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை, சூரிய ஒளியில் வேலை செய்வது போன்ற செயல்கள் அவர்கள் உடலை ஆரோக்கியமாக இருக்க வைத்தன. ஆனால் இன்றைய நிலைமை வேறு.

இந்த காலத்து முதியோர்கள் பலர் அவதிப்படும் ஒரு முக்கிய பாதிப்பு கீல்வாதம். வயது அதிகரிக்கும் போது தானாகவே இந்த பாதிப்பு பலருக்கும் வந்துவிடுகிறது. எலும்பு சீர்குலைவு காரணமாக வீக்கம் உண்டாகிறது, இதனைத் தொடர்ந்து வலி உண்டாகிறது. இதற்கு காரணம், உடல் பருமன், காயம் என்று எதுவாகவும் இருக்கலாம். இந்த நிலை மிகவும் அதிக வலியைத் தரக்கூடியது.
ஆகவே இந்த வலியைக் கட்டுப்படுத்த சில குறிப்பிட்ட உணவு அட்டவணையைப் பின்பற்றுவது நல்லது. ஆகவே கீல்வாதம் பாதித்தவர்கள் அவர்கள் வலியை சிறந்த முறையில் நிர்வகிக்க கீழே உள்ள பதிவைப் படித்து அந்த உணவு அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள்.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்து அதிகம் இருப்பதால் இவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். கரோட்டின் சத்து உள்ள பசலைக் கீரை, பச்சை இலையுடைய காய்கறிகள், பெர்ரி போன்றவற்றை இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் 2-3 பழங்கள் மற்றும் 5 காய்கறிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் புளிப்பு பழங்களான நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை உணவுக்கு பின் எடுத்துக் கொள்வது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ளுங்கள்
பேக்கரி உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளான சமோசா, பக்கோடா, பூரி, சிப்ஸ், குக்கி, மிக்ஸர் மற்றும் இதர சிற்றுண்டி வகைகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளன. பொரித்த உணவுகள், குறிப்பாக ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்ட உணவுகள் அழற்சியுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆகவே இவற்றை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மேலும் இந்த வகை உணவுகள் மூட்டுகளில் எடையை அதிகரிக்கின்றன. அதனால் உங்களால் நடக்கவோ, நகரவோ முடியாமல் போகலாம்.

எடையைக் குறையுங்கள்
உடைந்த நாற்காலியில் அதிக பாரத்தை ஏற்றுவது போன்ற நிலைதான் கீல்வாதம் உள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பது. ஆகவே எப்போதும் நடந்து கொண்டே இருங்கள். இரத்தத்தில் வைட்டமின் டி 3 அளவு சரியான அளவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கீல்வாதம் பற்றிய ஆய்வு
சல்பராபென் என்னும் கூறு முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றில் உள்ளது. இது கீல்வாத வளர்ச்சியை குறைக்கிறது மற்றும் மூட்டு பகுதிகளில் உண்டாகும் சேதங்களைத் தடுக்கிறது என்று கீல்வாதம் பற்றி 2013 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. காலையில் வெந்தய நீர் பருகுவதால் இயற்கையாகவே அழற்சி குறைய உதவுகிறது. ஆகவே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும். இல்லையென்றால் அதனை மென்றும் சாப்பிடலாம்.

கீல்வாத வலியைக் குறைக்க செய்ய வேண்டிய சில உடற்பயிற்சிகள்
சரியில்லாத எண்ணெய்களை பயன்படுத்துவது, பெரும்பாலான அழற்சிக்கு காரணமாக இருக்கலாம். கடுகு எண்ணெய் , வேர்க்கடலை எண்ணெய் போன்ற சுத்தமான மற்றும் ஆர்கானிக் எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்யை சமையலில் பயன்படுத்தவும். ஆர்கானிக் அல்லது கோல்டு கம்ப்ரெஸ் என்று லேபிளில் எழுதப்பட்ட ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். அடர் நிறம் கொண்ட பாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.

அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒமேகா-3
மூட்டு வலிகளை ஓரளவிற்கு குறைக்க DHA மற்றும் EPA சத்துகளின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்கும் மீன் மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். சியா விதைகள், வால்நட்ஸ், பசலைக்கீரை, பரட்டைக்கீரை, ஆளி விதைகள் போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். கீல்வாத நோயாளிகள் தினமும் 300 கிராம் மீன் உட்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் மீனை பொரித்து உட்கொள்ளாமல் வேக வைத்து அல்லது பேக் செய்து உட்கொள்ளலாம்.

முடிவு
கீல்வாதம் தொடர்பான ஆதாரபூர்வமான ஆராய்ச்சியின் வழிகாட்டுதல் படி மேலே உள்ள உணவு பற்றிய விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த வலியைக் குறைக்க சிலர் மருத்துவ உதவியை நாடுகின்றனர், சிலர் ஆயுர்வேத சிகிச்சையை பின்பற்றுகின்றனர். நேச்சுரோபதி, அக்குபஞ்சர் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி வலியை குறைக்க முயற்சிக்கின்றனர். இவை அனைத்தும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும்.



Click it and Unblock the Notifications
