Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து தான் சாப்பிடணுமாம்.. காரணத்த படிச்சு பாருங்க...
சில வகை உணவுகளை நாம் பச்சையாக சாப்பிட்டால், அதன் முழு சத்துக்களையும் எளிதில் பெறலாம். இன்னும் சில வகை உணவுப் பொருட்களை நீரில் ஊற சாப்பிட்டால், இரு மடங்கு நன்மைகளைப் பெறலாம்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் பல வகையான உணவுகள் உள்ளன. சில வகை உணவுகளை நாம் பச்சையாக சாப்பிட்டால், அதன் முழு சத்துக்களையும் எளிதில் பெறலாம். இன்னும் சில வகை உணவுப் பொருட்களை நீரில் ஊற சாப்பிட்டால், இரு மடங்கு நன்மைகளைப் பெறலாம்.

ஆனால் நம்மில் பலருக்கும் எந்த உணவுப் பொருட்களை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்பது சரியாகத் தெரியாது. இதனால் சில உணவுகளை இன்னும் தவறான வழியிலேயே சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் தமிழ் போல்ட் ஸ்கை எந்த உணவுப் பொருட்களை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்றும், அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெந்தயம்
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலை சுத்தம் செய்ய பெரிதும் உதவிப் புரியும். மேலும் வெந்தயம் மலச்சிக்கலையும் சரிசெய்யக்கூடியது. ஆனால் வெந்தயத்தின் முழு நன்மையையும் பெற வேண்டுமானால், அதை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது.
தினமும் இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அரை டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில், நீருடன் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்.

நன்மைகள்:
தினமும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இச்செயலை தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் பராமரிக்கலாம். முக்கியமாக இளம் பெண்கள் இப்படி சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலியைத் தவிர்க்கலாம்.

கசகசா
வெள்ளை நிறத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் கசகசா சமையலில் பயன்படுத்தக்கூடிய ஓர் பொருளாகும். கசகசாவில் ஃபோலேட், தையமின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
கசகசாவை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் லேசாக கையால் தேய்த்து நீருடன் அப்படியே சாப்பிட வேண்டும்.

நன்மைகள்:
கசகசாவை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். முக்கியமாக நீரில் ஊற வைத்த கசகசாவானது, கொழுப்புக்களைக் கரைக்கக்கூடியது மற்றும் உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கும். மேலும் இது வயிற்றுப் போக்கைத் தடுக்கும்.

ஆளி விதை
தற்போது மக்களிடையே ஆளி விதை சாப்பிடும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. எனவே சைவ உணவாளர்களுக்கு இது அசைவ உணவிற்கான ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. அதிலும் ஆளி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த ஆளி விதையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

நன்மைகள்:
நீரில் ஊற வைத்த ஆளி விதையை காலையில் எழுந்ததும் உண்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும். மேலும் இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த ஆளி விதையை சாப்பிட்டால், குடல் ஆரோக்கியம் மேம்படும்.

உலர் திராட்சை
உலர் திராட்சையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. பலரும் ஸ்நாக்ஸ் வேளையில் உலர் திராட்சையை சாப்பிடுவர். ஆனால் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது என்று பலருக்கும் தெரியாது.
5-6 உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் உலர் திராட்சையை சாப்பிட, பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

நன்மைகள்:
நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உண்பதால், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையும். சருமம் ஆரோக்கியமாகவும், பிரச்சனைகளின்றியும் அழகாக இருக்கும். இரத்த சோகை மற்றும் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் அந்த பிரச்சனைகளில் இருந்து விரைவில் குணமாகலாம்.
முக்கியமாக உலர் திராட்சையுடன் சிறிது சோம்பை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அசிடிட்டி பிரச்சனை முழுமையாக குணமாகும்.

பச்சை பயறு/பாசிப் பயறு
பாசிப் பயறில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவைகயும் அதிகம் உள்ளது. இத்தகைய பாசிப் பயறை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அதன் முழு சத்துக்களையும் பெறலாம்.

நன்மைகள்:
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நீரில் ஊற வைத்த பாசிப் பயறை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் என்பதால், நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும். பாசிப் பயறில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பாதாம்
பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் நட்ஸ் தான் பாதாம். ஆனால் அந்த பாதாமை இன்னும் பலர் அப்படியே பச்சையாகத் தான் சாப்பிடுகிறார்கள். உண்மையில் பாதாமை சாப்பிடும் ஆரோக்கியமான வழி என்றால், அது ஊற வைத்து சாப்பிடுவது தான்.

ஏன் ஊற வைத்து சாப்பிட வேண்டும்?
பாதாமின் தோலில் டேனின்கள் உள்ளன. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனைத் தடுக்கும் பொருளாகும். பாதாமை நீரில் ஊற வைத்தால், அதன் தோலை எளிதில் நீக்கிவிடலாம் மற்றும் நட்ஸில் உள்ள முழு சத்துக்களையும் எளிதில் பெற முடியும்.

நன்மைகள்:
ஊற வைத்த பாதாம் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும். அதிலும் இது கொழுப்பை செரிக்க உதவும் லிபேஸ் என்னும் நொதியை வெளியிடச் செய்யும். ஊற வைத்த பாதாமில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவி, எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, நீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால், அதில் உள்ள வைட்டமின் பி17 மற்றும் ஃபோலிக் அமிலம், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, பிறப்புக் குறைபாட்டையும் குறைக்கும். எனவே சோம்பேறித்தனப்படாமல் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications