For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...

இங்கே மலபார் புளி என்று அழைக்கப்படுகிற கொடம்புளியைப் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும்தான் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

கர்சினியா கம்போஜியா என்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மிகச்சிறந்த நன்மைகளை அள்ளித் தருகிறது. இதன் மருத்துவ குணத்தால் நிறைய உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. அந்த வகையில் பார்த்தால் இது உடல் எடையை குறைக்க உதவும் அற்புத புளி என்று கூறலாம்.

Kudampuli For Burning Excess Fat

பழுத்த வுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறிவிடும். தோற்றத்தை வைத்து சொன்னால் பார்ப்பதற்கு சின்ன பூசணிக்காய் போன்று காட்சியளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொடம்புளி

கொடம்புளி

இந்த தாவரம் கர்சினியா கம்மி குட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் பழங்கள் உணவுப் பொருட்களில் ப்ளேவரிங் ஏஜெண்ட்டாக, பதப்படுத்தும் பொருளாக, உணவு பல்கி ஏஜெண்ட்டாக பயன்படுகிறது. ஏன் இதை நீங்கள் சட்னி, குழம்பு மற்றும் சூப் போன்ற உணவுகளின் கெட்டியான பதத்திற்கும் ருசிக்கும் கூட பயன்படுத்தி கொள்ளலாம். இதன் பழங்கள் 5 செமீ விட்டளவும் ஆரஞ்சு பழம் போன்று 6-8 வரையிலான செலைகளையும் கொண்டுள்ளது.

பழுக்காத இந்த பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்த வுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறிவிடும். தோற்றத்தை வைத்து சொன்னால் பார்ப்பதற்கு சின்ன பூசணிக்காய் போன்று காட்சியளிக்கும். லேசான இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையையும் கொண்டு இருப்பது அற்புதமான ருசியாக இருக்கும்.

கொடம்புளியின் பயன்கள்

கொடம்புளியின் பயன்கள்

ஆயுர்வேத முறைப்படி பார்த்தால் இந்த குடம்புளி சீரண சக்தியை மேம்படுத்த உதவும் ஜூஸ் என்கின்றனர். மேலும் ஆராய்ச்சி முறைப்படி இதில் அதிகளவில் ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் உள்ளது.

கொழுப்பை கரைக்க

கொழுப்பை கரைக்க

இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இந்த மாற்றம் தடுக்கப்படுவதால் கார்போஹைட்ரேட் ஆக்ஸிடையாகி கிளைகோஜெனாக உடலில் சேமிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் விளைவால் பசி குறைந்து இயல்பாகவே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். மேலும் இந்த ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை சுரப்பை அதிகரித்து பசியை குறைக்கவும் செய்து விடுகிறது. செரோடோனின் ஒரு இயற்கையான முறையில் பசியை குறைக்க பயன்படுகிறது. இதனால் எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம்.

டைப் - 2 நீரிழிவு

டைப் - 2 நீரிழிவு

இந்த குடம்புளி டைப் 2 டயாபெட்டீஸ் நோய்க்கு சிறந்தது. இந்த குடம்புளி இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி இன்சுலின் சென்ஸ்டிவிட்டியை மேம்படுத்துகிறது. இதனால் குளுக்கோஸ் (சர்க்கரை சத்து) செல்கள், தசைகள் போன்றவற்றிற்கு கடத்தப்பட்டு அதிகப்படியான சர்க்கரை சத்து இரத்தத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது. அதிக குளுக்கோஸ் அளவான (ஹைப்பர் கிளைசெமியா) அல்லது ஹைபிளாஸ்மா குளுக்கோஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

சில ஆராய்ச்சி தகவல்கள் என்ன கூறுகிறது என்றால் கர்சினியா கம்போஜியா பிளாஸ்மா குளுக்கோஸ் அளவில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. 3.3% கர்சினியா கம்போஜியா சாறு குளுக்கோஸ் மெட்டா பாலிசத்தை மேம்படுத்தி செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.

அதிக கொழுப்பு

அதிக கொழுப்பு

நம் உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க இது உதவுகிறது. மேலும் இது அடினைன் ட்ரை பாஸ்பேட் நொதி (ஆற்றல்) செயல்பாட்டை தடுத்து கொலஸ்ட்ரால் உருவாக்கத்தை தடுக்கிறது. இதனால் இயல்பாகவே உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு குறைந்து விடுகிறது.

அழற்சி எதிர்ப்பு

அழற்சி எதிர்ப்பு

பொதுவாக நம் உடலில் நிறைய நோய்கள் வர அழற்சி தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு அழற்சியை எதிர்த்து போரிடுகிறது.குடல் அழற்சி நோய் (IBD), இரைப்பை குடல் வளர்ச்சியில் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

கல்லீரல் நோய்கள்

கல்லீரல் நோய்கள்

கர்சினியா கம்போஜியா கல்லீரலில் நச்சுத்தன்மையை உருவாக்க கூடியது. ஆராய்ச்சி படி பார்த்தால் இது கல்லீரலில் கொலாஜனை சேமித்து TNF - £(ட்யூமர் நெகுரோஸிஸ் காரணி) என்ற அழற்சியை ஏற்படுத்தி விடுகிறது. கொலாஜன் சேமிப்பால் கல்லீரலின் செயல்திறன் பாதிப்படைகிறது. இதனால் என்சைம் இரத்தத்தில் கலந்து கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

சரும அழற்சி

சரும அழற்சி

முயல்களை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சி கருத்துப்படி பார்த்தால் 500 மில்லி கிராம் அளவு ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலத்தை முயல்களில் கொடுத்த பொழுது அவைகள் சரும பாதிப்பை சந்தித்தனர். மேலும் இது சரும நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி விட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kudampuli For Burning Excess Fat

here we are talking about malabar tamarind and that health benefits. this herb helps to burn excess fat in your body.
Story first published: Thursday, September 26, 2019, 19:39 [IST]
Desktop Bottom Promotion