Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலான கீரையை சேர்ப்பது அவசியம். அதிலும் புளிச்சக் கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
பொதுவாக கீரைகள் அதிக சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவுப் பொருள். கீரைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான குணங்களுடன், சுவையையும் கொண்டவை. அதில் புளிப்பு சுவைக்கேற்ப பெயரைக் கொண்ட ஓர் கீரை தான் புளிச்ச கீரை. ஆந்திராவில் இதை கோங்குரா என்று கூறுவார்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலான கீரையை சேர்ப்பது அவசியம். அதிலும் புளிச்சக் கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான நன்மைகளைப் பெறலாம். இப்போது புளிச்சக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

புளிச்ச கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
புளிச்ச கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி9 அதிகமாக உள்ளது. முக்கியமாக இதில் வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது தான் இந்த கீரைக்கு புளிப்பு சுவையைத் தருகிறது. மேலும் இந்த கீரையில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. கூடுதலாக இதில் ஃப்ளேவோனாய்டுகள், புரோட்டீன்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் அதிகம் உள்ளது. இப்போது இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய புளிச்ச கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

கண் பார்வை மேம்படும்
பார்வை பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் அன்றாட உணவில் புளிச்ச கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் கண் பார்வையை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது.

எடை இழப்பிற்கு உதவும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவராயின், புளிச்ச கீரையை சாப்பிடுங்கள். புளிச்ச கீரையில் பல வைட்டமின்கள், கனிமச்ச்ததுக்கள், புரோட்டீன்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. அதோடு இதில் கொழுப்புக்கள் இல்லை மற்றும் கலோரிகளும் குறைவு. ஆகவே இந்த கீரையை எடையைக் குறைக்க நினைப்போர் சாப்பிடுவது நல்லது.

உடல் சுத்தமாகும்
புளிச்ச கீரையில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இந்த கீரையில் புரோட்டோகாடெக்யூயிக் அமிலம் உள்ளது. இது உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி, உடல் வீக்கத்தை நீக்குகிறது.

புற்றுநோயை தடுக்கும்
புளிச்ச கீரையில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோய் கட்டிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கட்டிகளை தடுக்கிறது. ஆனால் புளிச்ச கீரையை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புளிச்ச கீரைகளில் குளோரோபில் மற்றும் கரோட்டினாய்டுகளுடன் பல வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன.

இரத்த அழுத்தம் குறையும்
தற்போதைய காலத்தில் ஏராளமானோர் மன அழுத்தம் காரணமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புளிச்ச கீரை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். புளிச்ச கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைத்து, அதன் விளைவாக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்
உயர் இரத்த அழுத்தம் தான் இரவு நேரத்தில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். புளிச்ச கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் குறைந்து, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, இரவு நேரத்தில் நல்ல தரமான தூக்கத்தைப் பெற உதவும்.

எலும்புகள் வலுவாகும்
புளிச்ச கீரையில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த கீரை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குறிப்பாக பெண்கள் உட்கொண்டால், 30 வயதிற்கு பின் எலும்புகள் பலவீனமாவது தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவோடு இருக்கும்.

இரத்த சோகை சரியாகும்
பெரும்பாலான பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இரத்த சோகை வருகிறது. புளிச்ச கீரையில் இரும்புச்சத்து, சோடியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் குளோரோஃபில் வளமான அளவில் உள்ளது. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் மற்றும் இரத்த சோகை நோயாளிக்கு நன்மை அளிக்கும்.

செரிமான ஆரோக்கியம் மேம்படும்
புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் பிற இரைப்பைக்குடல் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும். புளிச்ச கீரையில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எளிதில் கழிவுகள் குடலில் நகர்ந்து சென்று வெளியேறச் செய்யும். மேலும் இது உடலில் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும் உதவும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
புளிச்ச கீரையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வந்தால், உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து உடல் பாதுகாக்கப்படும். மேலும் இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி புரியும். குறிப்பாக இதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம், இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆன்டி-பாடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி, உடலைத் தாக்கும் கிருமிகளிடம் இருந்து உடலுக்கு பாதுகாப்பளிக்கும்.

ஆண்மை குறைபாட்டிற்கு அருமருந்து
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் புளிச்ச கீரையை சாப்பிடுவது நல்லது. இந்த கீரை ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களின் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கவும் உதவி புரியும். அதுவும் புளிச்ச கீரையின் விதைகள் பாலுணர்ச்சியை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications