Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
மூட்டு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
ஆர்த்ரிடிஸ் வலியால் கஷ்டப்படுபவர்கள், அந்த வலியைக் குறைக்கவும், அப்பிரச்சனையில் இருந்து விடுபடவும் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வருவது நல்லது.
ஆர்த்ரிடிஸ்/கீல்வாதம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுக்கள் வீங்கி, வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இந்நோயால் மூட்டுக்களைச் சுற்றியுள்ள சருமம் சிவந்து காணப்படலாம். பலர் காலை வேளையில் மூட்டுக்களில் மிகவும் மோசமான வலியை அனுபவிக்கலாம்.

ஆர்த்ரிடிஸ் பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடையே காணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் குழந்தைகளுக்கும் இந்நோயின் அறிகுறிகளை சந்திக்கிறார்கள். ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் உடல் பருமன் காரணமாகவும் இந்நோய் ஏற்படலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆர்த்ரிடிஸ் வலியால் கஷ்டப்படுபவர்கள், அந்த வலியைக் குறைக்கவும், அப்பிரச்சனையில் இருந்து விடுபடவும் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வருவது நல்லது. கீழே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இஞ்சி
இஞ்சியில் மூட்டு வலிக்கு நன்மை அளிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சியை டீ வடிவிலோ அல்லது வெதுவெதுப்பான நீருடன் சேர்த்தோ உட்கொள்ளலாம். இஞ்சியில் மூட்டுக்களைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும் மருத்துவ பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. இதில் உள்ள மருத்துவ குணத்தால் ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்தால், அது எடையை இழக்க உதவும், குமட்டலை சரிசெய்யும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் பல நன்மைகளை வழங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள குறிப்பிட்ட அமிலங்கள், உடலில் உள்ள நச்சுக்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம் மூட்டுக்களில் தேங்கியுள்ள படிகங்களை கரையச் செய்து, மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். அதற்கு இதை நீரில் அல்லது தேனுடன் உட்கொள்ளலாம். தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இன்னும் சிறப்பான பலன் கிட்டும். ஆர்த்ரிடிஸ் மற்றும் மூட்டு வலியில் இருந்து விரைவில் குணமாக காலை, மதியம் மற்றும் மாலையில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்ளவும்.

மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் என்னும் பொருள் உள்ளது. இது மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளில் இருந்து விடுவிக்கும். அதற்கு வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து தினமும் குடிக்க வேண்டும். மஞ்சளில் உள்ள மருத்துவ பண்புகளால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மக்கானா
மக்கானா என்பது வேறொன்றும் இல்லை தாமரைப் பூ விதைகள் தான். இது ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் பிற மூட்டு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் முக்கியமான உணவுப் பொருள். இதில் எலும்புகளை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது வீக்கத்தை குறைக்கவும், வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். அதற்கு மக்கானாவை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் சாப்பிடலாம். பாலில் கால்சியம் அதிகம் உள்ளதால், பாலுடன் சேர்த்து சாப்பிட எலும்புகளுக்கு கால்சியம் சத்தும் கிடைக்கும், மூட்டு வலியில் இருந்தும் நிவாரணமும் கிடைக்கும்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் நோயை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாவர கலவைகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த கீரை மூட்டுக்களைச் சுற்றியுள்ள வீக்கத்தையும், சிவந்த பகுதியையும் குறைக்கும். இந்த கீரையை மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, மூட்டுக்களும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்கும்.



Click it and Unblock the Notifications