Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...
பலருக்கு எந்த உணவுகளை காலையில் சாப்பிடுவது சிறந்தது என்றே தெரியாது. குறிப்பாக எடையைக் குறைக்கும் டயட்டில் இம்மாதிரியான தவறுகளை செய்தால், உடல் எடை குறைவதற்கு பதிலாக எடையைத் தான் அதிகரிக்கும்.
நல்ல ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு தான் அன்றைய தினத்தையே சிறப்பாக கொண்டு செல்லும். நம் அனைவருக்குமே காலை உணவின் முக்கியத்துவம் தெரியும். இருப்பினும் சில உணவுகளின் மீதுள்ள ஆசையினால், நேரம் காலம் பார்க்காமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். இன்னும் சிலர் காலையிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருள் என்று சில தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பர்.

சொல்லப்போனால் பலருக்கு எந்த உணவுகளை காலையில் சாப்பிடுவது சிறந்தது என்றே தெரியாது. குறிப்பாக எடையைக் குறைக்கும் டயட்டில் இம்மாதிரியான தவறுகளை செய்தால், உடல் எடை குறைவதற்கு பதிலாக எடையைத் தான் அதிகரிக்கும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை எடையைக் குறைக்க வேண்டுமானால், காலையில் சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

குறைந்த அல்லது நார்ச்சத்தே இல்லாத செரில்கள்
செரில்களில் கார்போஹைட்ரேட்டுக்கள் மற்றும் சர்க்கரை அதிகம். அதே சமயம் நார்ச்சத்து மிகவும் குறைவு. ஆகவே இது ஒருவரது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்து, பின் குறைத்துவிடும். எனவே இதனால் இது காலையிலேயே உணவுகளின் மீது ஆர்வத்தை அதிகரிப்பதோடு, மந்தமான மனநிலைக்கும் தள்ளும்.
ஒவ்வொரு வேளை உணவிலும் குறைந்தது 3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே செரில்களை உண்பதாக இருந்தால், அத்துடன் நார்ச்சத்து நிறைந்த பெர்ரிப் பழங்கள், ஆளி விதைகள் மற்றும் பாதாமை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் ஒரு வேளைக்குத் தேவையான நார்ச்சத்தைப் பெறலாம்.

பார்கள்
பெரும்பாலான ப்ரேக் ஃபாஸ்ட் பார்களில் புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துக்களுடன் ஏராளமான அளவில் சர்க்கரையும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்கள் அதிகாலை உணவில் சர்க்கரை அதிகமான உணவுப் பொருள் சேர்ப்பதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர். எனவே இனிப்பான ஃப்ரேக் ஃபாஸ்ட் பார்களை காலை உணவாக உண்ணாதீர்கள்.

கொழுப்பில்லாத யோகர்ட்
கொழுப்பு குறைவான யோகர்ட் பால் பொருட்களுக்கு எதிரானது. மேலும் அதிகாலையில் மிகவும் குறைவான அளவில் உணவை உண்பதனால் பிரச்சனையைத் தான் சந்திக்க நேரிடும். பலரும் காலையில் குறைவான அளவில் காலை உணவை உண்பதால், பசியுணர்வு அதிகரித்து மதிய உணவிற்கு முன்பே பல நொறுக்குத்தீனிகளை சாப்பிடத் தூண்டிவிடுகிறது. இதன் விளைவாக உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரித்துவிடும். எனவே ஒருவரது காலை உணவில் கட்டாயம் 250 முதல் 400 கலோரிகள் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே கொழுப்பு இல்லாத யோகர்ட் சாப்பிட வேண்டுமானால், அத்துடன் சிறிது ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு நல்ல ஆற்றல் வழங்கும் உணவாக இருக்கும்.

ஜூஸ்
காலை உணவாக ஜூஸ் குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஜூஸ் ஆரோக்கியமான பானம் தான். ஆனால் அதிகாலையிலேயே ஜூஸைக் குறைப்பது தான் தவறானது மற்றும் ஆரோக்கியமற்றதும் கூட. ஒரு டம்ளர் ஜூஸில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகம் நிறைந்திருக்கும். இதனால் உடலுக்கு மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருக்கும். முக்கியமாக ஜூஸ்களில் புரோட்டீன்கள் இருக்காது. போதுமான புரோட்டீன் இல்லாத ஜூஸ்களை அதிகாலை உணவாக உட்கொண்டால், மதிய உணவிற்கு முன்பே பசி அதிகம் எடுத்து, கண்ட உணவுகளை உண்ண வைத்து, உடல் எடையைக் கூட்டிவிடும்.

டோனட்
இன்று டோனட் பலரது காலை உணவாக உள்ளது. ஆனால் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் அதிகம் மற்றும் இதில் நன்கு வறுத்தெடுக்கப்பட்ட கொழுப்பும் உள்ளது. இந்த உணவுப் பொருளை எப்போதாவது சாப்பிடலாமே தவிர, காலை உணவாக சாப்பிட ஏற்றது அல்ல.



Click it and Unblock the Notifications