Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீங்க.. இல்லன்னா புற்றுநோய் வரும்...
உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அந்த உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படுவதோடு, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
நம்மில் பெரும்பாலானோர் எஞ்சிய உணவுகளை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, பின் சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் போது அந்த எஞ்சிய உணவுகளை சூடேற்றி சாப்பிடுவோம். ஏனெனில் ஃப்ரிட்ஜில் உணவுகளானது குளிர்ச்சியாக இருக்கும். குளிர்ச்சியான நிலையில் உணவுகளை உண்ண முடியாது என்பதை அதை சூடேற்றி சாப்பிடும். ஆனால் உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அந்த உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படுவதோடு, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, ஃபுட் பாய்சன் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

குறிப்பாக புரோட்டின் நிறைந்த உணவுகளை மீண்டும் சூடேற்றும் போது, அது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இப்போது எந்த உணவுகளையெல்லாம் மீண்டும் மீண்டும் சூடேற்றக்கூடாது என்பதைக் காண்போம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும். இது தவிர, சமைத்த உருளைக்கிழங்கை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் இருந்தால், அது நஞ்சாக மாறிவிடும் மற்றும் இது குமட்டல் அல்லது ஃபுட் பாய்சனை உண்டாக்கும்.

சாதம்
பலர் மிஞ்சிய சாதத்தை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து, பின் பயன்படுத்துவார்கள். சமைக்காத அரிசியில் வித்திகள் இருக்கும். இந்த வித்திகள் தான் பாக்டீரியாக்களாக மாறுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் சமைத்த பின்னரும் இருக்கும். அதுவும் சமைத்த சாதத்தை அறைவெப்பநிலையில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, நச்சுக்களை உற்பத்தி செய்து, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றை உண்டாக்கும்.

முட்டைகள்
புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை எப்போதும் சமைத்த பின்னர் மீண்டும் சூடேற்றக்கூடாது. குறிப்பாக உயர் வெப்பநிலையில் சூடேற்றும் போது, அது நஞ்சாகி, செரிமான பாதையை பாதிக்கும்.

சிக்கன்
சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த சிக்கனை சமைத்த பின்னர் மீண்டும் மீண்டும் சூடேற்றினால், அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுவும் இது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை நீங்கள் சிக்கனை சூடேற்ற வேண்டுமானால், குறைவான தீயில் சூடேற்றுங்கள்.

பசலைக்கீரை
பசலைக்கீரையில் நைட்ரேட்டுகள் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நைட்ரேட்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களை மீண்டும் சூடேற்றும் போது, அந்த நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களாக மாற்றப்படும்.

எண்ணெய்கள்
கிரேப்சீட் எண்ணெய், வால்நட் எண்ணெய், ஹாசில்நட் எண்ணெய் மற்றும் ஆளி விதை எண்ணெய் போன்றவை மிகக் குறைந்த புகை புள்ளிகளைக் கொண்டுள்ளன. அதனால் தான், அவற்றை மீண்டும் சூடுபடுத்தும் போது, அவை வெந்துவிடும். எனவே இந்த எண்ணெய்களை சமைப்பதற்கு மற்றும் பொரிப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மாறாக, இந்த எண்ணெய்களை உணவின் சுவையை அதிகரிப்பதற்கு இறுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.

டர்னிப்
டர்னிப்புகள் வழக்கமாக சூப்புகள் தயாரிக்கும் போது பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் நைட்ரேட்டுகள் இருப்பதால், டர்னிப்புகள் நிறைந்த உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

காளான்
காளானில் புரோட்டீன் அதிகம் உள்ளது. காளானை சமைத்த அந்நாளே அதுவும் சமைத்த உடனேயே சாப்பிட வேண்டும். இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இவற்றை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது அதன் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒருவேளை சமைத்த காளானை மீண்டும் சூடேற்றும் போது, அது செரிமான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிப்பதோடு, இதய பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

பீட்ரூட்
பீட்ருட்டும் பசலைக்கீரை போன்றது. ஏனெனில் இதில் நைட்ரேட்டுகள் உள்ளன. சமைத்த பீட்ரூட்டை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாற்றமடைந்து, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

செலரி
செலரியில் நைட்ரேட்டுகள் அதிகளவில் உள்ளன. இதை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது, அது நஞ்சாக மாறிவிடும். நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக உடலில் மாறும் போது, அது மெத்தெமோகுளோபினீமியாவின் ஆபத்தை அதிகரிக்கும். மெத்தெமோகுளோபினீமியா என்பது இரத்தத்தில் நைட்ரைட்டுகள் ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்துடன் தொடர்பு கொள்ளும் போது, அது உடல் முழுவதும் இரத்தத்தால் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல முடியாமல் வைக்கும். இதன் விளைவாக வலிப்பு அல்லது மரணத்தைக் கூட உண்டாக்கும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications