Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நாள் முழுவதும் சந்தோஷமான மனநிலையில் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க...
புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து மூளைக்கும் நரம்பு கடத்தலுக்குமான நிலையை மேம்படுத்துகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் நாம் மேம்படுத்த முடியும் என்கிறார
நம் மன ஆரோக்கியத்திற்கும் உணவு ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை. மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) மற்றும் டிமென்ஷியா (Dementia) போன்ற மன மற்றும் நரம்பியல் கோளாறுகள் நோயின் மிகப்பெரிய உலகளாவிய சுமையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் தொற்று நோய்களின் ஆய்வுகளின் படி பார்த்தால், மத்திய தரைக்கடல் உணவான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் நம்முடைய மன நிலையை மேம்படுத்த முடியுமாம்.

ஸ்டெட்ஃபாஸ்ட் நியூட்ரிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் அமன் பூரி ஊட்டச்சத்து உளவியலின் படி கூறுகையில் புரோபயாடிக்குகள் மற்றும் ப்ரீபயாடிக் உணவுகள் நரம்பியல் மனநல நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் என்று கூறியுள்ளார்கள். இதற்கு காரணம் இந்த புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து மூளைக்கும் நரம்பு கடத்தலுக்குமான நிலையை மேம்படுத்துகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் நாம் மேம்படுத்த முடியும் என்கிறார்கள்.
இப்படி மனநிலை கோளாறுகளை தவிர்த்து ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் உணவுகள் இதோ உங்களுக்காக...

மீன் உணவுகள்
மீன்களில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளது. சால்மன், மத்தி மற்றும் டுனா போன்ற கொழுப்பு மீன்களில் ஈ.பி.ஏ (Eicosapentaenoic Acid) மற்றும் டி.எச்.ஏ (Docosahexaenoic acid) உள்ளன. இந்த அமிலங்கள் தான் நமக்கு ஏற்படும் மனச்சோர்வை குறைக்கிறது. மேலும் மூளை வளர்ச்சிக்கும் மற்றும் மூளைக்கு போகும் சிக்னல் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே மீன் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு மனநிலை கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

ப்ரீ மற்றும் புரோபயாடிக் உணவுகள்
கிமிச்சி காய்கறிகள், யோகார்ட், தயிர், கெஃபிர், கொம்புச்சா, புளித்த முட்டைகோஸ் போன்றவைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. செரடோனின் அளவை அதிகரிப்பதன் மூலம், ஒரு மகிழ்ச்சி மனநிலையைத் தருகிறது.
ப்ரீ பயாடிக் உணவுகளான வாழைப்பழம், பூண்டு, சிக்கரி போன்ற உணவுகளில் நார்ச்சத்துகள் உள்ளன. இந்த உணவுகள் குடல் வாழ் பாக்டீரியாக்களுக்கு நண்பர்களாக இருக்கிறது. எனவே ப்ரீ மற்றும் புரோபயாடிக் உணவுகளை தொடர்ந்து எடுத்து வந்தால், குடல் ஆரோக்கியமும் மனநிலையும் மேம்படும்.

டார்க் சாக்லேட்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டார்க் சாக்லேட்டில் காப்ஃபைன், ஃப்ளேவோனாய்டுகள், தியோபுரோமைன், என்-அசித்தனோலமைன் போன்ற பொருட்கள் உள்ளன. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
கீரைகள், பச்சை இலை காய்கறிகள், மிளகாய் இவற்றில் பினோலிக் அமிலம் உள்ளது. இவைகள் மூளை செல்கள் ஆக்ஸினேற்றத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. பழங்களில் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊதா-நீல நிற அந்தோசயனின் என்ற நிறமியும் காணப்படுகிறது. இந்த பழங்கள் மனச்சோர்வு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பது மன அழுத்தத்தையும் சமாளிக்க உதவுகிறது.

நட்ஸ் வகைகள்
பாதாம், முந்திரி, வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற சில கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்தை கொண்டுள்ளது. இவைகள் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலத்தை வழங்கி மன நிலையை மேம்படுத்தும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் ஆகியவை மூளையின் செயல்பாட்டைக் குறைப்பதால் அவற்றை தவிர்க்க மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

முடிவு
மனக் கோளாறு சம்பந்தமான நோய்களை விரட்ட நீங்கள் பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், மீன் உணவுகளை அன்றாட வாழ்வில் சேர்த்து வந்தாலே போதும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள், அமிலங்கள் உங்க மன அழுத்த ஹார்மோனை குறைத்து மன நிலையை மேம்படுத்தும் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இன்னும் உணவுக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் இடையே நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.



Click it and Unblock the Notifications