For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா?

இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கினாலும் அதனால் சில ஆபத்தான பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

|

இந்திய சமையலறைகளில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இஞ்சி இருக்கிறது. இஞ்சி அதன் சுவை மற்றும் மணத்திற்கு மட்டுமின்றி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும்தான் உணவில் சேர்க்கப்படுகிறது. கடுமையான வாசனையை கொண்ட இது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அனைத்து அசைவ உணவுகளிலும் இஞ்சி கண்டிப்பாக சேர்க்கப்படும்.

Dangerous Side Effects Of Ginger

இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காக பழங்காலம் முதலே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கினாலும் அதனால் சில ஆபத்தான பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இஞ்சி அதிகமாக சாப்பிடும்போது அது பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் இஞ்சியால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்

இரத்த அழுத்தத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்

இஞ்சி பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் இரத்த அழுத்தத்தின் மீதான அதன் பாதிப்புகளை பற்றிக் கூறுவதில்லை. இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இஞ்சியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது இரத்த அழுத்தத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்

வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்

அதிக அளவில் எடுத்துக் கொண்டால், இஞ்சி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனென்றால் இது குடல் வழியாக உணவு மற்றும் மலம் செல்வதை துரிதப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானது அல்ல

கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானது அல்ல

கர்ப்பிணிப் பெண்களுக்கு இஞ்சியால் குமட்டலைக் குறைக்க முடியும் என்றாலும், இதன் ஆபத்தான பக்கத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். சில நிபுணர்களின் கூற்றுப்படி, இஞ்சியை உட்கொள்வது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். இதன் அளவு ஒரு நாளைக்கு 1500 மி.கி.க்கு குறைவாக இருந்தால் அது ஆபத்தானதாக இருக்காது. அளவில் இஞ்சி சப்ளிமெண்ட்ஸ் கூட கருச்சிதைவு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் இஞ்சியை அதிகமாக உட்கொள்வது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். பிரசவத்தின்போது கணிசமான அளவு இரத்தத்தை இழந்த தாய்மார்கள் பிரசவத்திற்கு பிறகான ஆரம்ப காலத்தில் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.

MOST READ: உங்கள் கழுத்து வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்

இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்

உங்களுக்கு இரத்தப்போக்கு இருக்கும்போது இஞ்சி சாப்பிடுவது அதனை அதிகரிக்கிறது. இது இஞ்சிக்கு மட்டுமல்ல, அது சேர்க்கப்பட்டுள்ள உணவிற்கும் இது பொருந்தும். சில ஊட்டச்சத்து நிபுணர்கள் இஞ்சி அதன் ஆன்டிபிளேட்லெட் (இரத்த மெலிதல்) பண்புகள் காரணமாக இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர். கிராம்பு, பூண்டு, ஜின்ஸெங் மற்றும் சிவப்பு க்ளோவர் போன்ற பிற மூலிகைகளுடன் எடுத்துச் செல்லும்போது, ஜின்ஸெங் அதிகப்படியான இரத்தப்போக்கு அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

இஞ்சி பொதுவாக நீரிழிவு சிகிச்சைக்கு உதவும் என்று அறியப்படுகிறது. ஆனால் சர்க்கரை நோய்க்காக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது மருந்துகளின் விளைவுகளை மேம்படுத்தலாம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது இரத்த சர்க்கரையை அதிகமாகக் குறைக்கலாம்.

இதயக் கோளாறுகள்

இதயக் கோளாறுகள்

உங்கள் இதயக் கோளாறுகளை அதிகமாக்குவதில் இஞ்சி முக்கியப்பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் இரத்த அழுத்தத்தில் விரும்பத்தகாத வீழ்ச்சியை அனுபவிக்க முடியும். இது இதயத் துடிப்பில் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆண்டிஹைபர்ட்டென்சிவ் சிகிச்சையிலும் இஞ்சி தலையிடக்கூடும். இது இறுதியில் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும்.

MOST READ: உடலுறவுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னாடி இந்த பொருள சாப்பிட்டா உங்க சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்...

வாயு மற்றும் வீக்கம்

வாயு மற்றும் வீக்கம்

இஞ்சி டீ சிறிய அளவில் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். . இது பெரும்பாலும் மேல் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் வாயுக்கோளாறு ஏற்படுகிறது. இஞ்சிக்கு பதிலாக வேறு பொருட்களை செரிமானத்திற்கு பயன்படுத்துவது இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். வாயுக்கோளாறு இருக்கும்போது இஞ்சி சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது வீக்கத்தை ஏற்படுத்தும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

இஞ்சி, அதிக அளவுகளில் (ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல்) எடுத்துக் கொள்ளும்போது, லேசான நெஞ்செரிச்சல் ஏற்படலாம். வயிற்றுப்போக்கு மற்றும் பெல்ச்சிங் போன்ற பிற பக்கவிளைவுகளும் இதனுடன் அடங்கும். இஞ்சி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் நெஞ்செரிச்சலுக்கு இது முக்கியமான காரணமாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது மட்டும் இந்த பக்கவிளைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வாய் எரிச்சல்

வாய் எரிச்சல்

இது ஓரல் அலர்ஜி சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் சில உணவுகளை உட்கொள்ளும்போது சில ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த அலர்ஜிகள் காது, சருமம் மற்றும் வாயில் ஏற்படுகிறது, நீங்கள் இஞ்சியை உட்கொள்ளும்போது இதுபோன்ற ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது, இதனால் உங்கள் வாய் அரிக்க தொடங்குகிறது. வாய் எரிச்சல் ஒரு விரும்பத்தகாத சுவைக்கு வழிவகுக்கும். இந்த ஒவ்வாமைகளில் கூச்ச உணர்வு மற்றும் வாயின் வீக்கம் ஆகியவை அடங்கும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க விரட்டி விரட்டி உதவி செய்றேன்னு தொல்லை பண்ணுவாங்களாம் தெரியுமா?

தோல் மற்றும் கண் எரிச்சலை ஏற்படுத்தும்

தோல் மற்றும் கண் எரிச்சலை ஏற்படுத்தும்

இஞ்சியால் ஏற்படும் ஒரு பொதுவான எதிர்வினை சரும எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகும். இஞ்சிக்கான பிற ஒவ்வாமைகளில் கண்கள் அரிப்பு, தோல் சிவத்தல் மற்றும் தோல் அழற்சி ஆகியவை அடங்கும். இந்த பக்க விளைவுகளை தவிர்க்க சரியான அளவில் இஞ்சியை எடுத்துக்கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Side Effects Of Ginger You Must Know

Here is the list of dangerous side effects of ginger you must know.
Story first published: Monday, November 4, 2019, 14:57 [IST]
Desktop Bottom Promotion