Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் உணவுகள் எதுலாம் தெரியுமா? இத படிங்க...
சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் அதிகம் சேர்க்க வேண்டிய சில தாவர அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளைப் பரிந்துரைத்து டிவிட்டரில்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான மக்களை பாதித்துள்ளது. இந்த கொடிய வைரஸால் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழிந்துள்ளனர். அதோடு நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறு உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நிலை மோசமாகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். அதுவரை இந்த வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் ஒரே வழியாக நிபுணர்கள் பலரும் கூறுவது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவதைத் தான்.

அதற்கு நாம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை மேம்படுத்த உதவும்.
சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் அதிகம் சேர்க்க வேண்டிய சில தாவர அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளைப் பரிந்துரைத்து டிவிட்டரில் வெளியிட்டது. கீழே அந்த உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்கள் உணவிலும் அன்றாடம் சேர்க்க மறவாதீர்கள்.
முக்கியமாக இந்த உணவுகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பது மட்டுமின்றி, இவற்றை உண்பதால் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னவென்றும் காண்போம்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வில், நெல்லிக்காய் இரத்தத்தின் திரவத்தை மேம்படுத்துவதற்கும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதோடு இப்பழத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது மற்றும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான தியமின், ஃபோலேட், பொட்டாசியம் போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.

பப்பாளி
ஆரஞ்சு பழத்தைப் போன்றே, பப்பாளியிலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இந்த பழம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு, குடலியக்கத்தை மென்மையாக நடைபெற செய்யும். அதோடு செரிமான பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் இதர வயிற்று பிரச்சனைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.

குடைமிளகாய்
குடைமிளகாயில் வைட்டமின் சி மற்றும் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதுடன், அதில் வைட்டமின் ஈ மற்றும் ஏ, நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களான ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், இரத்த சோகையைத் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் அதில் உள்ள இரும்புச்சத்து மட்டுமின்றி, அந்த இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சியும் இருப்பது தான். எனவே அடிக்கடி குடைமிளகாயை சமைத்து சாப்பிடுங்கள்.

கொய்யா
கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இப்பழம் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுவதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

எலுமிச்சை
எலுமிச்சை உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, இதயம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறப்பான பொருளாகும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரின் அளவு மற்றும் pH அளவை அதிகரிப்பதன் மூலம், சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது. அதற்கு தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பது சிறந்த வழியாகும்.



Click it and Unblock the Notifications
