Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
குளிர்காலத்தில் ஏற்படும் அனைத்து ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் மருந்து உங்கள் வீட்டிலேயே உள்ளது..!
குளிர் காலத்தில் நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகளில் முக்கியமான ஒரு பொருள் கொத்தமல்லி ஆகும்.
குளிர் காலம் தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் பனி அதிகரித்து கொண்டே செல்கிறது. குளிர்காலம் என்றாலே பலருக்கும் உடல்நிலை மோசமாக மாறிவிடுகிறது. அதற்கு காரணம் நமது சருமத்தின் குளிர் தாங்க இயலாத தன்மையும், இந்த பருவ காலத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதும்தான். எனவே இந்த காலகட்டத்தில் நமது தினசரி உணவுகளில் சில உணவுகளை கூடுதலாக சேர்த்துக்கொள்வது நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

குளிர் காலத்தில் நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகளில் முக்கியமான ஒரு பொருள் கொத்தமல்லி ஆகும். வாசனை நிறைந்த கொத்தமல்லியை நாம் பெரும்பாலும் உணவுகளை அலங்கரிக்க மட்டுமே பயன்டுத்துகிறோம். ஆனால் பல சத்துக்கள் நிறைந்த இந்த கொத்தமல்லி நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது என்பது பலரும் அறியாத ஒன்று. குளிர்காலத்தில் தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு சிறப்பான பல நன்மைகளை வழங்கக்கூடும். அந்த நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொத்தமல்லி
கொத்தமல்லி உலகம் முழுவதும் பயனப்டுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப்பொருளாகும். உணவுப்பொருள் என்பதை காட்டிலும் இதனை ஒரு மூலிகை என்றே சொல்லலாம். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற பல சத்துக்கள் உள்ளது. மேலும் ஆரோக்கியத்திற்கு அவசியமான சில அமிலங்களும் உள்ளது. குளிர்காலத்தில் இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குறிப்பாக உங்கள் சருமத்திற்கு இது பல நன்மைகளை வழங்கும்.

வைட்டமின் சி
கொத்தமல்லியில் வைட்டமின் சி அதிகமுள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி-யில் 30 சதவீதத்தை கொத்தமல்லியே வழங்கக்கூடும். இது உங்கள் சருமத்தில் சருமத்தில் கொப்புளங்கள் வராமல் இருக்கவும், வந்த கொப்புளங்களை குணப்படுத்தவும் உதவும். மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கொழுப்பை சீராக்கும்
குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளின் அளவை அதிகரிக்கக்கூடும். ஆனால் உங்கள் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்புகளை குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும். எனவே தினமும் கொத்தமல்லி சாப்பிடுவதால் அதிலுள்ள அமிலங்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதுடன் HDL என்னும் நல்ல கொழுப்புகளின் அளவையும் அதிகரிக்க உதவும். இது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.

அலர்ஜிகளை குறைக்கும்
கொத்தமல்லி குளிர் காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்க காரணம் அதிலுள்ள ஆன்டி அலர்ஜி பண்பாகும். இதிலுள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சரும அலர்ஜிகளை தடுக்க தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆன்டிஆக்சிடண்ட்ஸ்
கொத்தமல்லியில் வைட்டமின் சி மற்றும் இரும்புசத்து அதிகம் உள்ளது. இது குளிர்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர் காலத்தில் உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் தினமும் கொத்தமல்லி சாப்பிடுங்கள். ஏனெனில் இதிலுள்ள குவெர்சிட்டின் ஆன்டி ஆக்சிடன்ட் உங்களை பாதுகாக்கும்.

எலும்பு ஆரோக்கியம்
ஆர்திரிடிஸ் மற்றும் ஆஸ்டோபோரோசிஸ் போன்ற எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். குளிர்காலத்தில் ஏற்படும் சளி உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே எலும்புகளை பாதுகாக்க கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்.

வயிறு ஆரோக்கியம்
உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு அற்புத மூலிகை கொத்தமல்லி ஆகும். குறிப்பாக செரிமானக்கோளாறு மற்றும் வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கொத்தமல்லி மிகவும் அவசியமாகும். மேலும் இந்த இலைகள் வெளியிடும் என்சைம்கள் செரிமான கோளாறுகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும். எனவே குளிர்காலத்தில் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்போது கொத்தமல்லி சாப்பிடுவது உங்களுக்கு நிவாரணத்தை வழங்கும்.

இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொத்தமல்லி சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதிலுள்ள கால்சியம் நரம்பு மண்டலத்துடன் தொடர்புகொண்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே சீரான இதய ஆரோக்கியத்தை பராமரிக்க குளிர்காலத்தில் கொத்தமல்லி சாப்பிடவேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications