Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் என்ன விதமான விளைவுகள் உடலில் உண்டாகும்..?
இந்த பூமியில் நாம் பிறந்ததற்கு சில முக்கிய காரணிகள் உண்டு. ஆனால், அவை எல்லாவற்றையும் விட 'சோறு' தான் நமக்கு முக்கியம். உணவு என்பது பலவித கால கட்டத்தில் எண்ணற்ற வகையில் பரிணாமம் அடைந்து வந்துள்ளது. சுமார் 500 வருடத்திற்கு முன்பிருந்த உணவுகளில் பாதி கூட இப்போது இல்லை.

அவற்றில் திரிந்து வந்த உணவுகள் தான் இங்கு அதிகமாக உள்ளள. நாம் பாரம்பரியம் என்று நினைத்து கொண்டிருக்கும் சில உணவுகள் கூட அப்படி தான். இது ஒரு புறம் இருக்க, இவை எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட உணவுகளும் இங்குண்டு. இவற்றை சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..? என்கிற மிக பெரிய ஆய்வுகள் இன்றளவிலும் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகை உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அடங்கும். இன்று நாம் சாப்பிட கூடிய பல உணவுகள் இந்த வகையை சேர்ந்தது தான். இவற்றை சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்னவித விளைவுகள் உண்டாகும் என்பதை இந்த பதிவில் அறியலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பொதுவாக இந்த பாக்கெட், ஜார், டப்பா..இப்படி பல வகையிலும் இந்த வகை உண்வுகள் உருவெடுத்துள்ளது. இன்று இருக்கின்றன பல உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளே அதிகம். இவற்றின் தன்மை சாதாரண உணவை விட முற்றிலும் மாறுபட்டிருக்கும்.

தேவையில்லை!
பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்கிற ஒரு குடைக்குள் மிக பெரிய உணவு உலகமே உள்ளது. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கியத்தை காட்டிலும் ருசி தான் நிறைந்திருக்கும்.
மசாலாக்கள், சுவையூட்டிகள், செயற்கை இனிப்பூட்டிகள், கலர் கலர் வண்ணத்தில் உணவு இருக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் நிறமூட்டிகள்... இவை அவற்றின் தன்மையை வீரியத்துடன் மாற்றுகிறது.

ஆற்றல்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தினால் முதலில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம் இதுவே. அதாவது, எப்போதுமே அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.
காரணம் இவற்றின் நச்சு தன்மை உங்களின் உடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி இருக்கும். மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கும்.

ஹார்மோன்
இந்த வகை உணவுகளை தவிர்த்து வந்தால் ஹோர்மோன்கள் சீராக வேலை செய்யும். குறிப்பாக செரடோனின், டோபோமைன், போன்ற மன நிலையை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் அதிக அளவில் உற்பத்தி பெற்று ஆரோக்கியாமான மனநிலையை தரும்.

வயிற்று உப்பசம்
நீங்கள் எப்போது இந்த பழக்கத்தை ஆரம்பித்தீர்களோ, அப்போது தான் உங்களுக்கு வயிற்று உப்பசம் அதிகமாக இருந்திருக்கும்.
இதை தவிர்த்த பின் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்து விடும். கூடவே, வயிற்றில் ஏற்பட கூடிய வாயு தொல்லையும் குறையும்.

நிம்மதி
யாரெல்லாம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு இதனை நாட்களாக இருந்த தூக்கமின்மை, இனி இருக்காது.
நிம்மதியான தூக்கத்தை பெற எப்போதுமே இந்த வகை உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் போதும்.

நோய்கள் 1000..!
பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் ஏராளமான நோய் தாக்குதல்கள் உங்கள் உடலில் அரங்கேறும். இவை அனைத்தில் இருந்தும் உங்களை காக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை இனி சாப்பிடாமல் இருங்கள்.
இதனால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை சீரான முறையில் இருக்கும். புற்றுநோய், சர்க்கரை நோய் முதலிய அபாயங்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

உடல் எடை
இந்த வகை உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் செரிமான பிரச்சினை குறைந்து விடும். எனவே, உடல் எடை கூடாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தால் மிக எளிமையாக குறைக்கலாம்.

ஆயுள்..!
அதிக ஆயுளுடன் நீங்கள் இருக்க வேண்டுமானால் அதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். இது தான் உங்களை அதிக ஆயுளுடன் வைக்க கூடிய எளிய வழி. மேலும், உங்களின் இளமை நீடிக்கவும் செய்யும்.



Click it and Unblock the Notifications
