Just In
- 37 min ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 13 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 15 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 15 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதலிரவின் போது ஏன் பால் கொண்டு போறாங்கனு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
கலாச்சாரங்கள் என்பவை மனித இனத்தின் பண்பாட்டின் வெளிப்பாடே. மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை இவை மாற்றம் பெற்று கொண்டே இருக்கும். சில கலாச்சாரங்கள் மக்களின் கொண்டாட்ட நிலையை உணர்த்தும். சில கலாசாரங்கள் உணர்வுகளோடு ஒன்றி இருக்கும். இப்படி பழக்க வழக்கங்கள், உணவு முறை, பண்பாடு, உணர்வுகள் போன்ற பலவற்றோடு பின்னி பிணைத்திருப்பது தான் கலாசாரங்கள் ஆகும்.
இந்தியாவில் சில வகையான கலாச்சாரங்கள் ஏன் உள்ளது என்பதே பலருக்கு தெரிவதில்லை. சில கலாச்சாரங்களுக்கு காரணங்கள் உண்மையிலே உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையில் முதலிரவின் பொது பால் கொண்டு போகும் கலாச்சாரத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. இதற்கு பின்னுள்ள உண்மையான காரணத்தையும், இதை போலவே இந்தியாவில் கடைபிடிக்கும் மேலும் சில கலாச்சாரங்களையும் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இயற்கை என்னும் அரண்!
இந்திய கலாச்சாரங்கள் பலவற்றில் இயற்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் வாழ்வை மேம்படுத்தவே இவை முற்காலத்தில் கொண்டு வரப்பட்டன.
பாரம்பரிய முறையில் இவை இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். உணவு முறை முதல் உடலுறவு வரை எல்லாவற்றிற்கும் தனி சிறப்புகள் இந்திய கலாச்சாரத்தில் உள்ளது.

வாழை இலை
இந்திய உணவு முறையில் வாழை இலையில் உணவு பரிமாறுதல் மிக முக்கிய அங்கமாக உள்ளது. வாழை இலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது போன்ற பல நன்மைகள் உடலுக்கு நேரடியாக கிடைக்குமாம். மேலும், செரிமான கோளாறுகளை உண்டாக்காமல் பார்த்து கொள்ளும்.

கைகளால் சாப்பிடுதல்
இந்திய கலாச்சாரத்தின் படி கைகளால் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். ஒவ்வொரு விரல்களும் உடலில் உள்ள ஒவ்வொரு சக்கரத்தை சீராக வைத்து கொள்ளும்.
இரத்த ஓட்டம் முதல் செரிமான கோளாறுக்ள வரை கைகளால் சாப்பிட்டால் குணமாகும். இந்தியா மட்டுமன்றி ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த பழக்கம் பின்பற்றப்படுகிறது.

ஒற்றுமை
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒரே தட்டில் எல்லோருக்குமான சாப்பாட்டை பரிமாறுவார்கள். இந்த உணவு முறை அவர்களுக்குள் ஒற்றுமையை அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது.
மேலும், இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு அவர்கள் ஏதேனும் இனிப்பு உணவுகளை சாப்பிடுவார்களாம். இது செரிமானத்திற்கு உதவும் என கூறப்படுகிறது.

முதலிரவு
பொதுவாகவே இந்திய கலாசாரத்தின் படி திருமணமான நாளின், முதல் இரவில் தான் தங்களது தம்பாத்திய வாழ்வை தொடங்குவார்கள்.
அப்போது பெண்ணின் கையில் பால் சொம்பை கொடுத்து விடுவது வழக்கம். இதற்கு பின்னால் நம் முன்னோர்கள் ஒரு முக்கிய இரகசியத்தை ஒளித்து வைத்துள்ளனர்.
MOST READ: துபாயில் இடது கையினால் சாப்பிட கூடாது! மீறி சாப்பிட்டால் அவ்வளவு தான்!

காரணம்?
அவ்வாறு முதலிரவின் போது இருவரும் பால் குடித்தால் இனப்பெருக்க உறுப்புகளளின் திசுக்கள் இலகுவாகி புத்துணர்வுடன் வைத்து கொள்ளும். இந்த அற்புத தன்மை பாலிற்கு உண்டாம்.
மேலும், உடலுக்கு அதிக ஆற்றலை தந்து நீண்ட நேரம் தாம்பத்திய உறவை ஏற்படுத்தி கொள்ள இது உதவுமாம். மேலும், மன அழுத்தத்தையும் இது குறைக்கும்.

தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல்
இந்திய கலாசாரத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை உண்டாக்குமாம். முக்கியமாக முதுகு எலும்பின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள இந்த கலாசாரம் உதவுகிறது. கூடவே இது ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாகவும் பார்க்கப்படுகிறது.

உணவு
பொதுவாகவே இந்திய உணவு முறை மற்ற நாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது. காரணம், பலவிதமான உணவு வகைகள் தான். சாதம், கூட்டு, பொரியல், குழம்பு, அப்பளம், ரசம், மோர் இப்படி ஏரளமான உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டவையாக உள்ளது தான் இதற்கு காரணம்.

இந்திய கலாசாரம்
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல தரப்பட்ட கலாசாரங்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளது.
கால மாற்றத்திற்கு ஏற்ப கலாசாரத்திலும் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எதுவாக இருந்தாலும் இந்தியா என்று வந்து விட்டால் ஒற்றுமையாக நாம் எல்லோரும் இருப்பதே சிறந்தது.
MOST READ: சிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
இந்திய கலாசாரத்தில் உங்களுக்கு பிடித்தது எது என்பதை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்...