For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...

காவா டீயின் ஆரோக்கியம் பற்றியும் அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது பற்றியும் தான் இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விவரமான தொகுப்பு தான் இது.

|

காலையில் எழுந்ததும் சிலருக்கு காபி, டீ குடிக்கலைன்னா கை கால் ஓடாது. அந்தளவுக்கு நிறைய பேர் தேநீர் பிரியர்களாக இருப்பார்கள். சில நாடுகளிலும் தேநீர் என்பது மக்களுக்கு விருப்பமான ஒன்றாகவே உள்ளது. அதிலும் நீங்கள் ஜப்பான், சைனா போன்ற நாடுகளுக்கு சென்றால் தேநீர் திருவிழாவே கொண்டாடி மகிழ்கின்றனர்.

Kava Tea Nutrition

சில பசிபிக் தீவுகள் போன்ற இடங்களில் ஸ்பெஷல் டீ புகழ்பெற்று விளங்குகிறது. அது தான் 'கவா டீ'. இந்த டீ ருசியில் மட்டுமல்ல உடலுக்கும் நிறைய நன்மைகளை அள்ளித் தருகின்றன என்கின்றனர் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவா டீ என்றால் என்ன?

கவா டீ என்றால் என்ன?

காவா தேநீர் தென் பசிபிக் தீவுகளுக்கு சொந்தமான காவா (பைபர் மெதிஸ்டிகம்) என்ற தாவரத்தில் ருந்து தயாரிக்கப்படுகிறது. இதை கவா கவா, அவா என்ற பல பெயர்களில் அழைக்கின்றனர். இந்த டீ யின் ஸ்பெஷலே தேங்காய் ஓட்டில் ஊற்றி பருகப்படுவது தான். அப்படியே ஒரே கல்ப்பில் அடிக்கலாம் என்கின்றனர் அங்குள்ள மக்கள். அந்தளவுக்கு அதன் சுவை அருமையாக இருக்குமாம். குளிர்க்கு ஏற்ற சூடான பானம் என்கின்றனர்.

MOST READ: ராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு?

நிம்மதியான தூக்கம்

நிம்மதியான தூக்கம்

கவா டீ அனிஸிட்டி, ஓய்வின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை வராமல் காக்க உதவுகிறது. தூக்கம் வராமல் அவதிப்படும் இன்ஸோமினியா நோயாளிகளுக்கு இது சிறந்தது. இந்த டீ குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

மூளை செயல்திறன்

மூளை செயல்திறன்

2004 மனித மனோதத்துவவியல் ஆய்வின் படி கவா டீ மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. கவா தாவரத்தின் சாறு அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

போதையை கட்டுப்படுத்துதல்

போதையை கட்டுப்படுத்துதல்

2001 பசிபிக் ஹெல்த் டயலாக் கட்டுரையின் படி, கவா டீயில் உள்ள சில பொருட்கள் ஆல்கஹால், புகைப்பழக்கம் போன்றவற்றிற்கு அடிமையாக இருப்பவர்களை மீட்கிறது. எனவே இந்த கெட்ட பழக்கத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்கள் கவா டீயை குடித்து வரலாம்.

பக்கவாதத்திலிருந்து மீட்டல்

பக்கவாதத்திலிருந்து மீட்டல்

கவா டீ பக்கவாத நோயாளிகளுக்கு சிறந்தது. இந்த டீ பக்கவாதத்திலிருந்து அவர்களை மீட்கிறது. மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்ி அதை பாதுகாக்க உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

MOST READ: 13 வயசுல 4 இன்ச் அளவு இருந்தா நார்மலா? பிறப்புறுப்பின் சரியான அளவை தெரிந்து கொள்வது எப்படி?

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

மேட்டூரிடாஸ் இதழில் 2003 ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையின் படி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க்கு முன் பின் உள்ள பிரச்சினைகளை சரி செய்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பதட்டம், டென்ஷன் போன்றவற்றை குறைக்கிறது.

மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி

மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி

தசைகளில் ஏற்படும் வலி போன்றவற்றிற்கு கவா டீ வலி நிவாரணியாக செயல்படுகிறது. இதன் வேரை வெறுமனே வாயில் போட்டு மென்றாலே போதும் வலிகள் குறைந்துவிடும் . சில நேரங்களில் நாக்கில் நமநமப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அழற்சி எதிர்ப்பு பொருள்

அழற்சி எதிர்ப்பு பொருள்

கவா டீயில் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி செப்டிக் தன்மை உள்ளது. எனவே உங்கள் பல் வலிக்கு மற்றும் தொண்டை புண்ணுக்கு இதமாக இருக்கும். அதே மாதிரி சிறுநீரக பாதை தொற்று, சிஸ்டிடிஸ், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலையும் தீர்க்க உதவுகிறது.

டையூரிடிக் தன்மை

டையூரிடிக் தன்மை

நேச்சுரல் ஸ்டாண்டர்ட் ஹெர்ப் & சப்ளிமெண்ட் கைடு கருத்துப் படி கவா டீ டையூரிடிக் தன்மை கொண்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

சரும பயன்கள்

சரும பயன்கள்

தொழுநோய் போன்ற தோல் நோய்களை நிவர்த்தி செய்ய, காயத்தை குணப்படுத்த ஊக்குவிக்கவும், வலி ​​நிவாரணியாக செயல்பட, பல்வலியை குறைக்க மவுத் வாஷாக என மேற்பூச்சாக கூட இந்த கவா தாவரத்தை பயன்படுத்தலாம்.

MOST READ: உங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா?... இந்த தண்ணிய குடிங்க...

வீட்டிலேயே கவா டீ தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே கவா டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

2-4 டேபிள் ஸ்பூன் உலர்ந்த கவா பொடி

1 கப் தண்ணீர்

தயாரிக்கும் முறை

கவா பொடி மற்றும் தண்ணீரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

4 நிமிடங்கள் வரை இரண்டையும் நன்றாக கலக்குங்கள்.

ஒரு வடிகட்டியில் அதை ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். நன்றாக பிழிந்து கொள்ளுங்கள். பிறகு டீ கப்பில் ஊற்றி சுவையுங்கள். சுவையான டீ மட்டுமல்லாமல் ஆரோக்கியமான டீயும் ரெடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kava Tea Nutrition, Benefits and How to prepare

Kava tea has been prized for thousands of years because of its unique taste and vital health benefits. Find out what makes this tea stand out from the rest. Learn more about what makes kava tea special, as well as the side effects to watch out for when trying this drink.
Desktop Bottom Promotion