Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
உடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...!
பாலில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதில் இருக்கும் கொழுப்பு சில தீமைகளை ஏற்படுத்த கூடியதுதான்.
உலகின் முக்கியமான சக்திவாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும். மற்ற சத்துள்ள பொருட்கள் நாம் வளர்ந்த பின்தான் நமக்கு சத்துக்களை வழங்கும். ஆனால் பால் நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் பாலில் இருந்துதான் கிடைக்கிறது.

பாலில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதில் இருக்கும் கொழுப்பு சில தீமைகளை ஏற்படுத்த கூடியதுதான். உலகில் பாலை பயன்படுத்தாத நாடுகளோ, மக்களோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்பொது பாலில் பல புது வகைகள் வந்துவிட்டது. இவை பாலில் இருக்கும் சில தீமைகளையும் விலக்கி முழுமையான ஆரோக்கிய பொருளாக பாலை மாற்றுகிறது. இந்த பதிவில் டோன்ட் பால் என்றால் என்ன அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

பாலின் வகைகள்
உலகம் முழுவதும் பால் என்பது மிகப்பெரிய சந்தையாகும். அதனால் அதில் நாளுக்கு நாள் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அதில் சில பால் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை ஸ்கிமிட் பால், டோன்ட் பால், இரட்டை டோன்ட் பால். இவற்றில் கொழுப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் உள்ளது. இவை பசும் பாலின் சுத்திகரிக்கப்பட்ட பதிப்பு என்று கூறலாம்.

டோன்ட் பால்
டோன்ட் பால் என்பது முதன் முதலில் இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது. இந்த பால் பவுடர் அல்லது தண்ணீர் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்த முறை இந்தியாவில் தொடங்கப்பட்டதன் காரணம் அதிலிருக்கும் கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுத்தப்பட்டது, மேலும் இது மற்ற பால் வகைகளை விட விலை குறைவானதாக இருக்கிறது.

இரட்டை டோன்ட் பால்
டோன்ட் பாலை போலவே மற்றொரு சுத்திகரிக்கப்பட்ட பால் வகைதான் இரட்டை டோன்ட் பால் ஆகும். இந்த பாலில் டோன்ட் பாலை விட 9 சதவீதம் கொழுப்பின் அளவு குறைக்கப்படும். இந்த பாலை கொதிக்க வைக்காமல் அப்படியே குடிக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
சாதாரண பாலுக்கும் டோன்ட் பாலுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அதிலிருக்கும் கொழுப்பின் அளவுதான், மற்றபடி இரண்டிலும் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவில் எந்த மாறுபாடும் இருக்காது. இவற்றில் இருக்கும் கால்சியம் நம்முடைய எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. மேலும் இந்த பாலை அதிகம் குடிப்பது உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது.

பசியை கட்டுப்படுத்துக்கிறது
உங்கள் வயிற்றில் இருந்து அடிக்கடி பசிக்கான அபாய ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? இதனை சரி சிற மிகவும் எளிமையான வழி என்றால் இதுதான். தினமும் காலையில் ஒரு கிளாஸ் டோன்ட் பால் குடியுங்கள். அதற்கு பிறகு உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் சீரற்ற பசி உணரசு கட்டுப்படுத்தப்படும். இது உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

குறைந்த கலோரிகள்
ஒரு கப் டோன்ட் பாலில் 150 கலோரிகள் உள்ளது. ஆனால் ஒரு கப் சாதாரண பாலில் 285 கலோரிகள் இருக்கும். டோன்ட் பாலில் இருக்கும் கலோரிகள் அதிலிருக்கும் கார்போஹைட்ரேட்டில் இருந்து வருகிறது. இதனால் உங்கள் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக கொழுப்பால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க இந்த பாலை குடிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

எவ்வளவு குடிக்க வேண்டும்?
இந்த டோன்ட் பாளி அனைவருமே குடிக்கலாம். 3 முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் 3 கிளாஸ் டோன்ட் பால் குடிக்கலாம். இந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் டோன்ட் பால் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
