For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..?

|

மனித உடலில் உள்ள எல்லாவித உறுப்புகளும் மிக முக்கியமானவை. எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அவற்றுடன் தொடர்ப்புடைய வேறொரு உறுப்பும் இதனால் பாதிக்கப்படுலாம். மனித உடலின் ஈடு இணையற்ற உறுப்பு என்றால் அது மூளை தான். மூளையின் செயல்திறனை மிஞ்சுவதற்கு இதுவரையிலும் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் வரவில்லை.

இந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா?

இத்தகைய ஆற்றல் பெற்ற மூளையில் ஏதேனும் சிறு ஆபத்து வந்தால் கூட அவ்வளவு தான். மூளை சொல்லும் பேச்சை தான் மற்ற உறுப்புகளும் கேட்டு கொண்டிருக்கின்றன. இதன் செயல்பாடே நின்று விட்டால் அவ்வளவுதான்.

இப்படிபட்ட மூளையை பாதுகாக்கவும், எந்தவித பாதிப்பும் ஏற்படமாலும் இருக்க தினமும் இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிட்டால் போதும். இனி மூளை சாவை தடுக்க கூடிய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

முடியின் வளர்ச்சியை எப்படி இந்த தேங்காய் எண்ணெய் அதிகரிக்கிறதோ அதே போன்று மூளையின் செயல்பாட்டிற்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாக உள்ளது. தேங்காய் எண்ணெய்யில் சமைத்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தாலே மூளை படு வேகமாக செயல்படும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ஆரோக்கியமான உணவுகளில் ப்ரோகோலியும் ஒன்று. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மூளை செல்களை ஆற்றலுடன் செயல்பட வைக்கும். இதனால் எளிதில் மூளை பாதிப்பில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

ப்ரோக்கோலியில் உள்ள glucosinolates என்கிற மூல பொருள் மூளையை அதி வேகமாக செயல்பட வைக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மஞ்சள்

மஞ்சள்

"சிறந்த கிருமி நாசினி" என்கிற பட்டத்தை பெற்றிருக்கும் இந்த மஞ்சளை உணவில் அன்றாடம் சேர்த்து கொண்டாலே மூளை பாதிப்பிலிருந்து காத்து கொள்ளலாம்.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற மூல பொருள் மூளையின் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைக்கிறது. அத்துடன் ஞாபக சக்தியையும் இது கூட்டுகிறது.

MOST READ: 100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை நினைவில் வைத்தாலே போதும்!

ஒமேகா 3 உணவுகள்

ஒமேகா 3 உணவுகள்

பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் எந்த வித மூளை சார்ந்த நோய்களும் உங்களை அண்டாது.

கூடவே இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஞாபக திறனை அதிகரித்தது, சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.

முட்டை

முட்டை

தினமும் 1 முட்டையை சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்கள் கிடைக்கும். இவற்றில் உள்ள அதிக புரதசத்து மூளை செல்களை புத்துணர்வுடன் வைத்து வேகமாக உங்கள் மூளையை செயல்பட வைக்கும். ஆதலால், முட்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

இறைச்சி

இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எப்போதுமே சாப்பிட கூடாது. அதற்கு மாறாக சுத்தமான தற்போது அரிந்த இறைச்சியை சாப்பிடுவது நல்லது.

நாட்டு கோழி, வான்கோழி, போன்றவற்றை வாரத்திற்கு 1 முறை சாப்பிட்டு வந்தால் மூளை சாவை தடுக்கலாம்.

MOST READ: இனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்! காரணம் தெரியுமா..?

மீன்

மீன்

வாரத்திற்கு 1 அல்லது 2 முறையாவது கடல் உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு, ஆற்றல்மிக்க உடலையும் தரும். மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு ஏற்படுகின்ற பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

பெர்ரி

பெர்ரி

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் அதிகம் உள்ள ஸ்ட்ராவ்பெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரி போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து சாப்பிட்டாலே பலவித நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

பெர்ரி வகை உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டவை. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக மூளையின் ஞாபக திறன் அதிகரித்து, சிறப்பாக செயல்படும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

தினமும் சாப்பிட கூடிய உணவில் முழு தானியங்களை சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். கோதுமை, பார்லி, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் அதிக ஆரோக்கியம் தருபவை. இவை சர்க்கரையின் அளவை குறைத்து மூளையின் செல்களை பாதிக்காமல் பார்த்து கொள்ளும்.

MOST READ:வீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா? அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to Reverse Brain Damage

Here we listed top 8 foods to reverse brain damage.
Desktop Bottom Promotion