Latest Updates
-
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும்..?
எந்த வகையான உணவாக இருந்தாலும் அதை சாப்பிட கூடிய நேர காலம் என்று ஒன்றுள்ளது. கண்ட நேரத்தில் கண்ட உணவுகளை சாப்பிட்டால் அதனால் பக்க விளைவுகள் நீங்கள் நினைப்பதை விடவும் அதிகமாக வர கூடும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எண்ணற்ற பாதிப்புகளை இவை உண்டாக்கும்.

குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிட கூடிய உணவும், இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவும் மிக முக்கியமானதாகவும். இந்நேரத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிட கூடாது. இதனால் நேரடியாக உள் உறுப்புகள் பாதிக்கப்படும். எந்தெந்த உணவுகள் இரவு நேரத்தில் நாம் சாப்பிட்டாலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சீஸ்
சீஸ் சேர்த்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டாலும் எந்தவித பாதிப்பும் உங்களுக்கு உண்டாகாது என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், இது உங்களின் பசியை முழுமையாக பூர்த்தி செய்ய உதவும். இருப்பினும் அதிக அளவில் இதனை எடுத்து கொண்டால் நிச்சயம் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

பாப்கார்ன்
இரவில் சிறிதளவு பாப்கார்ன் சாப்பிடுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் நேராது. முக்கியமாக உப்பு சேர்த்த பாப்கார்னை சாப்பிடுவதை தவிர்த்து சாதாரண பாப்கார்னை சாப்பிடலாம். வேண்டுமானால் இதில் மிளகு தூளை சேர்த்து கொள்ளலாம்.

முட்டை
பலர் இரவில் முட்டை சாப்பிடுவதால் உடலில் பாதிப்புகள் உண்டாகும் என அஞ்சுகின்றனர். ஆனால், நீங்கள் நினைப்பது போல கிடையாது. இரவில் 1 முட்டை சாப்பிடுவதால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் நேராது.

வாழைப்பழம்
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் கொண்ட வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டு வருவதால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆதலால், இரவில் இதை சாப்பிட கூடிய உணவாக கருதலாம். மேலும், உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தையும் இது தரும்.

பழசாறு
குளிர்ச்சியான உடல் அமைப்பை கொண்டோர் இரவு நேரத்தில் பழச்சாறுகளை பெரும்பாலும் குடிக்காமல் இருப்பது நல்லது. மற்றவர்கள் பழச்சாறுகளை ஐஸ்கட்டிகளை சேர்க்காமல் குடிக்கலாம். இது பெரிய அளவில் பாதிப்பை தராது.

நொறுக்கு தீனிகள்
பெரும்பாலும் இரவு நேரத்தில் சாப்பிட கூடிய நொறுக்கு தீனிகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதுவே கோதுமை, கம்பு போன்ற தானிய வகைகளை கொண்ட நொறுக்கு தீனிகள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

யோகர்ட்
இரவு நேரத்தில் யோகர்ட் சாப்பிடுவதால் பாதிப்புகள் உண்டாகாது. காரணம், இதில் அதிக அளவில் கொழுப்பு இல்லாததே. மேலும், யோகார்ட்டில் அதிக அளவு புரதசத்து இருக்கிறதாம். எனவே, உங்களது பசியையும் இது தணிக்கும்.

காய்கறிகள்
சத்துக்கள் அதிகம் கொண்ட காய்கறிகளை இரவு நேரத்தில் உண்பதால் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கூடவே உடலுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் கிடைக்கும். நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க இந்த வகை உணவுகள் உதவும்.



Click it and Unblock the Notifications
