Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
இந்த பட்டாணி பாலை 1 கப் குடிப்பதால், உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன?
குழந்தையாக பிறந்தது முதலே பால் ஊட்டி வளர்க்கப்பட்ட இனம் மனித இனம். இதே போன்று தான் பெரும்பாலான ஜீவ ராசிகளும் வளர்ந்து வருகின்றன. ஆனால், ஒரு சில வயது வரை தான் நாம் தாய்ப்பாலை குடித்து வளர்ந்தோம். அதன் பின்னர் பசும்பால், எருமைப்பால், கழுதை பால் போன்ற பிற விலங்குகளின் பாலை குடித்து வளர்ந்தோம். அடுத்த நிலையில் உணவு பொருட்களில் இருந்து கிடைக்கும் பாலை உண்டு வளர தொடங்கினோம்.

இது மற்ற பாலை காட்டிலும் அதிக சத்துக்களை கொண்டிருக்கும் என ஆய்வுகளே கூறுகின்றன. தேங்காய் பால் கேள்விப்பட்டிருப்போம், பாதாம் பால் கேள்வி பட்டிருப்போம் ஆனால் இதுவரை பட்டாணி பால் கேள்வி பட்டிருப்போமா?! ஆமாங்க, இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வகை பால் தான்.
என்றாலும் நம்மில் பலருக்கு இதை பற்றி தெரிவதில்லை. பட்டாணி பாலை 1 கப் குடித்தாலே உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகுமாம். இனி பட்டாணி பாலினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

பால்
பொதுவாக பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். ஆனால், நேரடியாக கிடைக்கும் பாலில் தான் அனைத்து வித சத்துக்களும் உள்ளன.
இதற்கு மாறாக பதப்படுத்தப்பட்ட பாலை குடித்தால் அதனால் பாதிப்பு மட்டும் தான் உண்டாகுமே தவிர எந்த விதத்திலும் நன்மை தராது.

பட்டாணி பால்
பாலில் இருக்க கூடிய சத்துக்களை விட அதிக அளவில் பட்டாணி பாலில் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே போல பாலில் ஏற்பட கூடிய வாடை இந்த பட்டாணி பாலில் கிடையாது. எனவே, பசும்பாலை வெறுப்போருக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.

உடல் எடை
பட்டாணி பாலில் குறைந்த அளவிலே கலோரிகள் இருப்பதால் இதை தொடர்ந்து குடித்து வருவோருக்கு உடல் எடை குறையும். மேலும், இதில் க்ளுட்டன் இல்லாததால் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஆய்வுகள் சொல்கின்றன. உடல் எடை கூடியுள்ளோருக்கு இந்த பட்டாணி பால் சிறந்த தேர்வாக இருக்கும்.

நோ கார்ப்ஸ்!
மற்ற பால் வகைகளை போல இதிலும் கார்ப்ஸ் உள்ளது என நீங்களே எண்ணி கொள்ளாதீர்கள். இதில் முற்றிலுமாக வேறுபட்ட சத்துக்களே இருக்கின்றன.
1 கப் பட்டாணி பாலில் 70 கலோரிகள், 4.5 கிராம் லாவ் கொழுப்பு, பொட்டாசியம் 13%, புரதசத்து 8 கிராம், கால்சியம் 45%, இரும்புசத்து 15% உள்ளது. முக்கியமாக இதில் கார்போஹைடிரேட் 0 கிராம் அளவு கூட கிடையாது.

புரதசத்து
பசும்பாலை போன்றே இந்த பாலிலும் புரதசத்து அதிக அளவில் உள்ளது. 1 கப் பாலில் கிட்டத்த்தட்ட 8 கிராம் அளவு புரதசத்து உள்ளது. ஆதலால் புரதசத்து குறைபாடும் இதனால் குறையும். மேலும் அடிக்கடி பசி எடுக்கும் பிரச்சினையும் ஏற்படாது. இதனால் எடை கூடும் பிரச்சினையும் தடுக்கப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு
இந்த பட்டாணி பாலில் சர்க்கரை அளவு முற்றிலுமாக இல்லாததால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். அத்துடன் இதில் கார்போஹைட்ரேட்டும் இல்லாததால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.

ஒவ்வாமை
சாதாரண பாலை பார்த்து பயப்படுவதை போன்று, இதை பார்த்தும் பயப்பட வேண்டியதில்லை. மற்ற பால் வகைகளை காட்டிலும் இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், பாலினால் உண்டாக கூடிய ஒவ்வாமைகள் இந்த பட்டாணி பாலில் கிடையாது.



Click it and Unblock the Notifications