For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்! என்னனு நீங்களே பாருங்க..

|

இன்றைய கால கட்டத்தில் நமது ஆயுளானது மிக குறைவு. இப்போதுள்ள இளைய தலைமுறையினர் 50 வயதை தாண்டுவார்களா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. நமது உணவு பழக்கம், சுற்றுசூழல், வாழ்க்கை முறை போன்ற காரணிகள் தான் நமது வாழ்நாட்களை தீர்மானம் செய்கின்றன.

114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்! என்னனு நீங்களே பாருங்க..

Image Courtesy

இவை அனைத்தையும் தாண்டி ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்தால் அதுவே சாதனையாகும். அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் 114 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளார். இதை பல நாட்டினரும் ஆய்வு செய்த வந்த போது அவரின் வாழ்நாட்களுக்கான இரகசியத்தை அவரே கூறி விட்டார்.

இவர் தினமும் தனது உணவில் இந்த பொருட்களை சேர்த்து கொள்வதால் தான் 114 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார் என அவரே கூறுகிறார். அப்படி என்னதான் இந்த மனிதர் தினமும் சாப்பிட்டு இருப்பார் என்கிற உங்களின் ஆர்வத்திற்கான பதிலே இந்த பதிவு. வாங்க, இந்த இரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாதனை மனிதர்!

சாதனை மனிதர்!

பெர்னாண்டோ லாபல்லோ என்கிற இந்த மாமனிதர் தான் 114 வயது வரை நோய்களே இல்லாமல் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். 1901 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுமார் 114 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்துள்ளார்.

இவரின் நீண்ட ஆயுளை கண்டு நிச்சயம் எல்லோருக்கும் கேள்வி வரும். அந்த கேள்விக்கான விளக்கம் வெறும் 5 உணவுகளில் உள்ளது என லாபல்லோ கூறுகிறார்.

இரகசியம் #1

இரகசியம் #1

லாபல்லோ தனது முதல் இரகசியத்தை கூறினார். அதாவது, இலவங்கப்பட்டை தான் அவரின் முதல் இரகசியமாம். இதை அன்றாடம் டீயிலோ அல்லது உணவுவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வருவாராம். இது தான் அவரின் நோயற்ற நீண்ட ஆயுளுக்கான முதல் கரணம்.

இரகசியம் #2

இரகசியம் #2

கொலஸ்ட்ராலை சீராக வைத்து கொண்டாலே எந்த வித பாதிப்புகளும் உடலுக்கு ஏற்படாது. இதற்கு சாக்லேட் உதவுகிறது என லாபல்லோ கூறுகிறார்.

மேலும், மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும், ஹார்மோன்கள் சீராக சுருக்கவும் சாக்லேட் உதவுகிறதாம்.

MOST READ: மீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது? எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது?

இரகசியம் #3

இரகசியம் #3

உணவில் அதிக அளவு பூண்டு சேர்த்து கொண்டால் எதிர்ப்பு சக்தி கூடும். மேலும், இவை இதய நோய்களை தடுத்து, ஞாபக திறனை அதிகரிக்கவும் உதவுகிறதாம்.

உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த உணவு பூண்டு தான் என்பது இவரின் மூன்றாவது இரகசியம்.

இரகசியம் #4

இரகசியம் #4

சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து காத்து கொள்ள ஆலிவ் எண்ணெய் உதவுமாம். இவற்றின் நான்காம் இரகசியம் ஆலிவ் எண்ணெய் ஆகும். உடல்நலத்தை சீராக வைத்து கொள்ள ஆலிவ் எண்ணெய் வழி செய்கிறது.

இரகசியம் #5

இரகசியம் #5

நீண்ட நாள் கெடாமல் இருக்கும் உணவு பொருளான தேனில் பல்வேறு நலன்கள் உள்ளது. இவை நோய் தொற்றுக்களை ஏற்படுத்த கூடிய கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டவை.

மேலும், அவ்வப்போது இதனை மருந்து போன்று சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் என லாபல்லோ கூறுகிறார்.

தவிர்த்து விடுங்கள்!

தவிர்த்து விடுங்கள்!

114 வயது வரை லாபல்லோ வாழ்ந்ததற்கு மேலும் சில முக்கிய காரணிகள் உள்ளது. அதாவது, இவர் சிவப்பு இறைச்சிகளை பெரும்பாலும் தவிர்த்து விடுவாராம். மேலும், ஜங்க் உணவுகள், கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை இவர் தவிர்த்து விடுவார்.

MOST READ: முதலிரவின் போது ஏன் பால் கொண்டு போறாங்கனு தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அன்றாட பழக்கம்...

அன்றாட பழக்கம்...

மேலும் இவர் சில சிறப்பான பழக்க வழக்கங்களை அன்றாடம் கடைபிடித்து வந்தார். குறிப்பாக காலையில் விரைவாக எழுந்து வாக்கிங் செல்வது, உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் ஏதேனும் விளையாட்டை விளையாடுவது, போன்றவற்றை தொடர்ந்து செய்து வருவாராம்.

இவைகள் தான் லாபல்லோவின் ஆயுட்கால சாதனைக்கு காரணமாம். இவரை போன்று நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவரை பற்றி உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்டில் பதவி செய்யுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

114 Year Old Man Reveals 5 Foods That Have Kept Him Young

This article talks about 114 Year old man reveals 5 foods that kept him young.
Story first published: Thursday, March 28, 2019, 16:10 [IST]
Desktop Bottom Promotion