Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
பிரியாணி சமைக்குறதுல வேணா தல டாப்பா இருக்கலாம்! ஆனா அவருக்கு பிடிச்ச உணவு இதுதானாம்..!
தல போல வருமா..! இது வெறும் பி.ஜி.எம்-மிற்காக மட்டுமில்லை. தலய பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு. தலய பத்தின பல விஷயங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் எக்கசக்கமாகவே இருக்கு. ஆனால், அவர பத்தி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்த பத்திதான் நாம்ம இந்த பதிவுல பாக்க போறோம்.

தலைக்கு பிரியாணி செய்யறதுக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். என்னதான் தன்னோட சக நடிகர் நடிகைகளுக்கு பிரியாணி செஞ்சு கொடுத்தாலும், தலைக்கு பிடிச்சது வேற உணவுதானாம். தல ரசிகர்கள் கட்டாயம் தலய பத்தின இந்த விஷயத்த தெரிச்சிகிட்டா இன்னும் பெரும படுவீங்க. இதோட சேத்து மேலும் சில பிரபல நடிகர்களின் பிடித்தமான உணவு பழக்கத்தையும் நாம் தெரிந்து கொள்வோம்.

அசைவமா..? சைவமா..?
பெரும்பாலும் இந்த லிஸ்டில் நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தான் உள்ளனர். இவர்களில் பலர் அசைவத்தை முன்பு அதிகம் விரும்பி சாப்பிட்டவர்கள். ஆனால், இன்று சுத்த சைவமாக மாறி உள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் கூட மாற வாய்ப்புள்ளது.

தனுஷ்
ஒரு காலத்தில் அசைவத்தை அதிகம் விரும்பி சாப்பிட்ட தனுஷ், இப்போதெல்லாம் அதை தவிர்த்து வருகிறாராம். பல படங்களின் நடிக்கும் போதும் சுத்த சைவ உணவுகளையே இவர் எடுத்து கொண்டாராம். இதற்கு காரணம், வேலையில் அதிக சுறுசுறுப்புடன் கவனத்துடனும் செயல்பட சைவ உணவுகள் அதிகம் உதவுகிறதாம்.

சேவாக்
பலரின் கிரிக்கெட் தெய்வம் என கொண்டாடப்படும் சேவாக்கின் திறமையையும் ஆரோக்கியதையும் பார்த்தால் அவர் சுத்த அசைவம் என்றே நமக்கு தோன்றும். ஆனால், இது உண்மை இல்லை. இவர் சுத்த சைவ உணவையே சாப்பிடுவாராம். இவரின் பிடித்தமான வகையும் சைவம் தானாம்.

நம்ம சூப்பர் ஸ்டார்..!
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இப்போதெல்லாம் அசைவ உணவை தவிர்த்து வருவதாக சினி வட்டாரங்கள் பேசி வருகின்றனர். காரணம், அவரின் உடல் நிலை கோளாறும், அதிக படங்கள் நடிப்பதாலும் தான். எனவே, சைவ வகை உணவுகளை எடுத்து வருகிறாராம்.

விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் டயட் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். இவர் கிரிக்கெட்டிலும் உடல் எடை சீராக இருப்பதிலும் பலவித மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அதில் முக்கியமானது அசைவத்தை தவிர்த்து சைவத்திற்கு மாறியது தான். இது அவரின் விளையாட்டு திறனை மேலும் அதிகரிப்பதாக கூறுகின்றார்.

அனுஷ்கா ஷர்மா
கோலி- அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்திற்கு முன்பில் இருந்தே இவர் சுத்த சைவ உணவையே சாப்பிட்டு வருகிறார். அசைவத்தில் இருந்து சைவத்தில் மாறுவதற்கு பெரிய போராட்டமே தனக்குள் ஏற்பட்டது என அவர் கூறுகின்றார். இது நல்ல உணர்வை தருவதாகவும் அனுஷ்கா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமிதாப்
பாலியூட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பட்சன் கூட சுத்த சைவ உணவை தான் விரும்புவாராம். இதனை பின்பற்ற சைவ வகை உணவுகளால் எந்தவித உடல் நல பாதிப்பும் இல்லாததே காரணம் என இவர் கூறுகின்றார். இந்த வயதிலும் தெம்பாக இருக்க சைவம் பெரிதும் உதவுவதாகவும் கூறுகிறார்.

மோடி எப்படி..?
நமது பிரதமர் மோடி அவர்களின் உணவு பழக்கம் முழுவதுமே சுத்த சைவம் தானாம். பிறந்ததில் இருந்தே இவர் அசைவ உணவை சாப்பிட்டதே இல்லையாம். மேலும், வெளிநாடுகளுக்கு சென்றாலும் அசைவம் தொடுவதில்லையாம். "எங்கும் சைவம்...எதிலும் சைவம்" என்பதே இவருக்கு பிடிக்கும் போல..!

தளபதிக்கு பிடித்தது..!
இளைய தளபதிவிஜய் அவர்களுக்கு மிகவும் பிடுத்த உணவு தோசை தானாம். அத்துடன் படத்திற்கு படம் இவரின் டயட் பிளான் மாறும் என்றும் கூறுகின்றனர். மேலும், இவருக்கு சிக்கன் மிகவும் பிடித்த அசைவ உணவு என தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தல போல வருமா..!
தலையை பற்றிய மிக சுவாரசியமான விஷயம் பிரியாணி சமைப்பது தான். என்னதான் இவர் தந்து சூட்டிங்க்கில் சக நடிகர்-நடிகைகளுக்கு சமைத்து போட்டாலும், பெரும்பாலும் அவர் பிரியாணியை சாப்பிடுவதில்லையாம். மேலும், வேக வைத்த காய்கறிகளையே இவர் அதிக சாப்பிடுகிறார் என தனது பேட்டியில் கூறியிருக்கின்றார். அத்துடன், இவர் குளிர் பானங்களை முற்றிலுமாக தவிர்த்து, சூப் போன்றவற்றை விரும்பி உண்கிறாராம்.



Click it and Unblock the Notifications