For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வீரபாண்டிய கட்டபொம்மன் மக்களின் பெருமைமிகு இருட்டு கடை அல்வாவில் உள்ள ஆரோக்கிய ரகசியங்கள்...!

  |

  நம் தமிழ் மன்னர்களில் வீரத்தில் முதன்மையானவர் யார் என கேட்டு பார்த்தால், ஒரு நொடிகூட யோசிக்காமல் பதில் வரும். அவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரத்திற்கு தனி பெரும் அடையாளத்தை அவரே வகுத்தளித்தார். இவ்வளவு பெருமை மிகு மாமனிதரை ஈன்ற ஊர் நம்ம திருநெல்வேலிதாங்க. வீரத்திற்கே பேர்போன ஊர் என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் திருநெல்வேலி மக்கள் ஒவ்வொருவரின் ரத்த நாளங்களிலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர நினைவுகள் ஓடி கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய மக்களின் பாரம்பரிய உணவு என்றால் முதல் இடத்தில் வருவது நம்ம "திருநெல்வேலி அல்வா"தாங்க.

  tirunelveli halwa iruttukadai in tamil

  வீரத்திற்கு மட்டும் நாங்கள் முதன்மையானவர்கள் கிடையாது... இனிப்பான பாரம்பரிய உணவிலும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்றே இந்த அல்வா நமக்கு எடுத்துரைக்கிறது. அப்படி என்னதான் இந்த அல்வாவில் இருக்குனு பல நாட்டை சேர்ந்த உணவியல் வல்லுநர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதன் முடிவு நம்ம பாரம்பரிய உணவின் மகத்துவத்தை பறைசாற்றுகிறது. உலக பிரசிதி பெற்ற திருநெல்வேலி அல்வாவில் உள்ள ஆரோக்கிய ரகசியத்தையும், வரலாற்றையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அல்வாவின் வரலாறு :-

  அல்வாவின் வரலாறு :-

  திருநெல்வேலி என்றவுடன் நிச்சயம் நம்மில் பலரின் நினைவிற்கு வருவது "இருட்டு கடை" அல்வாதான். இந்த ஊரின் பாரம்பரிய இனிப்பை உலகெங்கும் மணக்க செய்த பெருமை இதனையே சேரும். பல வகையான அல்வாக்கள் திருநெல்வேலியில் இன்று இருந்தாலும் இருட்டு கடை அல்வாவிற்கே பெருமை எப்போதும் அதிகம். முதன்முதலில் இந்த அல்வா கடையை1882 ஆம் ஆண்டில் ஜெகன் சிங் என்பவர் ஆரம்பித்தார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். "வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்பதை நம்ம மண் நிரூபித்துவிட்டது. இந்த கடை இன்று வரை நெல்லையப்பர் கோவிலின் எதிர்புறத்தில் தான் இருக்கிறது.

  அற்புத சுவைக்கு காரணம் :-

  அற்புத சுவைக்கு காரணம் :-

  இருட்டு கடை அல்வாவின் அருமையான எச்சில் ஊரும் சுவைக்கு காரணம் இவையே...

  - சம்பா கோதுமை

  - தாமிரபரணி ஆற்று நீர்

  - நெய்

  - கருப்பட்டி

  - ஏலக்காய் தூள்

  இந்த முத்தான 5 பொருட்கள்தான் திருநெல்வேலி அல்வாவின் ஊர் மணக்க பேசும் பேச்சிக்கு காரணம்.

  ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் :-

  ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் :-

  சம்பா கோதுமை :-

  உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது இந்த கோதுமை. இருட்டு கடை அல்வாவில் இது சேர்க்கப்படுவதால் இதன் சுவை மட்டும் கூடாமல் இவற்றின் ஆரோக்கியத்தின் மதிப்பும் சேர்த்தே கூடுகிறது. சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது.

  - கால்சியம்

  - நார்சத்து

  - ஒமேகா 3

  - ஒமேகா 6

  - கரைய கூடிய கொழுப்புகள்

  - புரத சத்து

  இவ்வளவு நலன்களையும் ஒரு சிறு துண்டு அல்வாவிற்குள் இருட்டு கடைகாரர்கள் அடக்கி விட்டார்கள்.

  தாமிரபரணி ஆற்று நீர் :-

  தாமிரபரணி ஆற்று நீர் :-

  நீர் என்றாலே அது தாமிரபாணி ஆற்று நீர்தான் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் இனிமையாகவும், பல கனிமங்களையும் கொண்டது இது. "தாமிரமரணி" என்பதற்கு "கனிமங்களின் மூல பொருள்" என்பது அர்த்தமாம். பல்வேறு சத்துக்கள் தாமிரப்பரணி ஆற்று நீரில் இருந்ததாக பல தகவல்கள் சொல்லப்படுகிறது. மேலும் இதற்கு "கல்யாண தீர்த்தம்" என்ற பெருமையும் இருக்குதாம்.

  குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம்

  புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த

  தாமிரபரணியின் பெருமையை உனக்கு

  நினைவுபடுத்துகிறேன்

  -மகாபாரதம்

  மகாபாரதத்தில் கூட தாமிரபரணி ஆற்றை சிறப்பிக்கும் வகையிலேயே பாடல்கள் எழுதியுள்ளனர்.

  கருப்பட்டி :-

  கருப்பட்டி :-

  சர்க்கரையை விட பல மடங்கு உடலுக்கு நன்மைகளை தருகிறது இந்த கருப்பட்டி. சித்த மருத்துவத்திலும், ஆயர்வேத மருத்துவத்திலும் கருப்பட்டிக்கென்றே தனி மருத்துவ குணம் உண்டு. இது ஜீரண பிரச்சினை, நுரையீரல் சார்ந்த கோளாறுகள் மற்றும் தொண்டை சளியை குணப்படுத்தவல்லது. இதிலும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

  - புரதம்

  - தாதுக்கள்

  - மாவுசத்து

  - கால்சியம்

  - இரும்பு சத்து

  - பாஸ்பரஸ்

  இவ்வளவும் இந்த கருப்பட்டியில் உள்ளது. இதனாலையே இருட்டு கடை ஆல்வா அத்துணை ஆரோக்கியம் கொண்டது.

  நெய் :-

  நெய் :-

  அனைத்து வகையான இனிப்புகளையும் ருசியூட்டவும், ஆரோக்கியத்தை கூட்டவும் நெய் உதவுகிறது. அளவான அளவு நெய், உடலுக்கு நன்மையே தரும். இது குடல் புண்களை குணப்படுத்தி, சரும அழகை பராமரித்து , ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இதில் உள்ள ஊட்டசத்துக்கள்...

  - கொழுப்புகள்

  - புரதம்

  - பொட்டாசியம்

  ஏலக்காய் :-

  ஏலக்காய் :-

  வாசனை பொருட்களில் முதல் இடத்தில் இருப்பது ஏலம்தான். உணவு பொருட்களின் சுவையை மட்டும் கூட்டாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் பல் சார்ந்த நோய்களுக்கும், செரிமானத்தை தூண்டவும், மலட்டு தன்மை குணமடையவும் இது வழி செய்யும். ஊட்டச்சத்துக்கள் இதிலும் அதிகம் உள்ளது.

  - புரதம்

  - நார்சத்து

  - வைட்டமின் சி

  - வைட்டமின் எ

  - சோடியம்

  - பொட்டாசியம்

  - கால்சியம்

  இந்த வாசனை பொருளை திருநெல்வேலி அல்வாவில் சேர்க்கப்படுதால் உங்களுக்கு நிச்சயம் ஆரோக்கியத்தை தரும்.

  எச்சரிக்கை :-

  எச்சரிக்கை :-

  மிக மிகவும் ருசியாக இருக்கிறதென்று இருட்டு கடை அல்வாவை எல்லா வேளைகளிலும் சாப்பிட்டு கொண்டே இருந்தால் சில சமயங்களில் உடல் உபாதைகள் வர கூடும். எனவே "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை உணர்ந்து இதனை அளவோடு சுவைத்து மகிழுங்கள். இதன் பெருமையை உலகெங்கும் பரப்புங்கள்.

  இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  tirunelveli iruttukadai halwa secrets health benefits

  Tirunelveli Halwa/Godhumai Halwa / Wheat Halwa. It is one of the yummiest mouths smacking Halwa ever that has not lost its interest among all of us from ages.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more