Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
உலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...
உலர் திராட்சை பழங்கள் நமது உடலில் இருக்கும். அதிகப்படியான சூட்டை குறைத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீர் நமக்கு ஏராளமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது.
பண்டிகை நாள் என்றாலே பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டோம். பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இந்த உலர் திராட்சை பழங்களின் சுவை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.
இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீர் நமக்கு ஏராளமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது. நமது உடலில் இருக்கும். அதிகப்படியான சூட்டை குறைத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. அதுமட்டுமா இந்த கிஸ்மிஸ் பழம் நம் இதயத்திற்கும் நல்லது. குழம்பிடாதீங்க... நம்ம வீட்ல பயன்படுத்துற உலர் திராட்சை பழம் தான் நிறைய இடங்களில் கிஸ்மிஸ்னு சொல்லப்படுது.

உலர்ந்த பழங்கள்
கிஸ்மிஸ் பழமான இது உலர்ந்த பழங்களின் பட்டியிலில் இடம் பெறுகிறது. இதய நோய்கள் மற்றும் கல்லீரல் பிரச்சினை போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி இதில் உள்ளது. மேலும் உடம்பில் கெட்ட நச்சுக்களை வெளியேற்ற கூடியது. இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீரை தயாரிப்பது மிகவும் சுலபம்.

ஊட்டச்சத்து அளவுகள்
உலர்ந்த திராட்சைப் பழங்கள் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த தண்ணீரில் விட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், நியசின், விட்டமின் பி6, சி, கே, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன.

கிஸ்மிஸ் வாட்டர்
2 கப் தண்ணீரில் 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை சூடு செய்து இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். காலையில் எழுந்ததும் அதை வடிகட்டி மிதமான தீயில் லேசாக சூடுபடுத்தி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். அரை மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருக்கவும்.

சீரண சக்தி
இந்த உலர்ந்த திராட்சை தண்ணீர் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும். வயிற்றில் உள்ள நல்ல அமிலத்தை நன்றாக சுரக்க செய்து உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்றாக உறிந்து கொள்ளச் செய்யும். இது நம்முடைய சீரண சக்தியை அதிகரிக்கிறது.

கல்லீரல் சுத்தம்
இது கல்லீரலில் ஒரு பயோ வேதியியல் விளைவை உண்டாக்கி அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் நல்லது.

அமிலத் தன்மை
வயிற்றில் சில நேரங்களில் அதிக அமிலத் தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த கிறிஸ்மஸ் பழ தண்ணீர் வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையை குறைக்கிறது. இதற்கு அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக அமைகின்றன. எப்பொழுதும் அமிலத்தை சமநிலையாக வைத்திருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி
கிறிஸ்மஸ் பழ தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நீங்கள் இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பட்டு நோய்கள் எதுவும் உங்களை அண்டாது. எனவே எளிதான இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீரை குடித்து நீண்ட காலம் நலமாக வாழுங்கள்



Click it and Unblock the Notifications

