For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைவலிச்சா ஸ்டிராங்கா காபி குடிக்கிற ஆளா நீங்க? நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்...

இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம் 2018 ஆக கருதப்படுகிறது. ஒற்றைத் தலைவலி வரும்போது சாப்பிடக் கூடாத உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

|

சிலருக்கு மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றின் காரணமாக, அடிக்கடி தலை வலிக்கும். உடனே எல்லோரும் செய்கின்ற முதல் விஷயம் நல்ல ஸ்டிராங்கான காபி குடிக்க வேண்டும் என்பது தான்.

foods to avoid for migraine

அதேபோல், சில சமயம் நல்ல பசியுடன் சாப்பிடாமல் இருந்தால் கூட சிலருக்கு தலை வலிக்கும். இப்படி தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி

காபி

நம்மில் பலரும் தலைவலி வந்ததும் முதலில் தாவுவது ஸ்டிராங்கான காபிக்கு தான். காபி குடித்தவுடன் தலைவலி காணாமல் போனதுபோல் நினைத்துக் கொள்வோம். ஆனால் உண்மை அது இல்லை. சில சமயங்களில் மிக ஸ்டிராங்கான காபியை நீங்கள் குடிப்பது உங்களுடைய தலைவலியைத் தூண்டிவிட்டு, அதிகரிக்கவே செய்யும். அதனால் காபி பிரியர்கள் தலைவலிக்கும் போது அதைக் குடித்துவிடாதீர்கள்.

சீஸ்

சீஸ்

சிலருக்கு பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கும். தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

சிலருக்கு மது அருந்தியவுடன் மூன்று மணி நேரத்துக்குள்ளாக ஒற்றைத் தலைவலி வர ஆரம்பித்துவிடும். ஒரு ஆய்வின் முடிவின் படி, மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

நாமே வாங்கி, சுத்தம் செய்வதை விட தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை மிக அதிக அளவில் சாப்பிடுகிறோம். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு 5 சதவீதம் பேருக்கு அதிகபட்சமாக சாப்பிட்டு ஒரு மணி நேரத்திலும் குறைந்த அளவாக சாப்பிட்ட நிமிடம் முதலே ஒற்றைத் தலைவலி உருவாக ஆரம்பித்து விடுகிறது. அதிலுள்ள அதிக அளவிலாக நைட்ரேட் ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.

சைனீஸ் உணவுகள்

சைனீஸ் உணவுகள்

நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள்

சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சாக்லேட்

சாக்லேட்

டார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்னை உண்டாகிறதாம்.

குல்டன் உணவுகள்

குல்டன் உணவுகள்

குல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

National Nutritional Week 2018: Foods to avoid when you have a migraine

this week is National Nutritional Week 2018. we are telling about super foods to avoid when you have a migraine.
Story first published: Wednesday, September 5, 2018, 17:59 [IST]
Desktop Bottom Promotion