Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
டார்க் சாக்லேட் சாப்பிட்டது போதும்... இனி பிங்க் சாக்லேட் சாப்பிட ஆரம்பிங்க... ன் தெரியுமா?
டார்க் சாக்லேட் நன்மை பநற்றி நமக்குத் தெரியும். ஆனால் பிங்க் சாக்லேட் பற்றி தெரியுமா. அதன் ஆரோக்கியம் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் பல உணவுப் பொருட்கள் தங்கள் அடையாளங்களை மாற்றி கண்கவர் அலங்காரங்களைப் பெற்று புதிய பரிமாணத்தில் சந்தையில் விற்கப்படுகின்றன.

அவற்றுள் இப்போது புதிதாக இணைந்திருப்பது சாக்லேட். சாக்லேட் அறிமுகமாகி 80 ஆண்டுகளில் இதுவரை மூன்று விதமான, டார்க், வெள்ளை, மற்றும் மில்க் என்ற மூன்று வகைகளில் உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

பிங்க் சாக்லேட்
எவ்வளவு சாக்லேட்டுகள் இருந்தாலும், இப்போது இவற்றுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை, பிங்க் சாக்லேட். சுவிஸ்சில் இயங்கி வரும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான பர்ரி கல்லேபுட், ரூபி கொக்கோ பீன்ஸில் இருந்து இந்த இளஞ்சிவப்பு நிற சாக்லேட்டை உற்பத்தி செய்கிறது. இந்த கொக்கோ பீன்ஸ், எக்குவடோர், பிரேசில், ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.

சுவை எப்படி இருக்கும்?
ரூபி இளஞ்சிவப்பு வண்ணம், ரூபி கொக்கோ பீன்ஸில் இருந்து ஒரு புதிய வகையான சாக்லேட் உருவாக்க ஆராய்ச்சியின் ஒரு தசாப்தத்தின் விளைவாக கூறப்படுகிறது. இனிப்பு, வண்ணம் மற்றும் கூடுதல் சுவையூட்டிகள் சேர்க்கப்படாமல் செய்யப்பட்ட நான்காவது இயற்கை வகையான சாக்லேட் இது. பெர்ரி போன்ற சற்று புளிப்பு சுவை கொண்ட மிருதுவான சாக்லேட் என்பதும் இதன் கூடுதல் செய்தியாகும்.

எப்போது வரும்?
முதன் முதலில் சீனாவின் ஷாங்காய் நகரில் செப்டம்பர் 5 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாக்லேட், இனிப்பு பிரியர்களிடையே ஒரு புயலை உருவாக்கி உள்ளது. ஆனால் சந்தையில் இதன் வருகை தொடங்க இன்னும் ஆறு மாதம் முதல் 12 மாதம் வரை ஆகலாம். இந்த வகை சாக்லேட் FDAவால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

நிறம்
இதன் நிறம் இதன் புகழுக்கு ஒரு முக்கிய ஆயுதம் ஆகும். நிச்சயமாக இந்த சாக்லேட் சமூக ஊடகங்களில் ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இளஞ்சிவப்பு பிங்க் வண்ணம் மூலப்பொருளின் செயலாக்கத்தின் போது பிரித்தெடுக்கப்பட்ட ஒரு தூள் காரணமாக உருவாகிறது.
இந்த நிறுவனம் பல வருட ஆய்வு மற்றும் சோதனைகள் மற்றும் சுத்தீகரிப்பு மூலம் இந்த புதிய வகை சாக்லேட்டை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக இது ஒரு தூய மற்றும் ஆழ்ந்த மகிழ்ச்சியை உருவாக்கும் ஒரு பொருளாக அமையும்.

6Nestle கம்பெனி
80 வருடங்களுக்கு முன்னர், Nestle நிறுவனம், கொக்கோ பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து வெள்ளை சாக்லேட்டை அறிமுகம் செய்தது. இது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பாக மாறியது. இப்போது உலகம் முழுவதும் உள்ள இனிப்பு பிரியர்களுக்காக மற்றொரு புதிய கண்டுபிடிப்பு இந்த பிங்க் சாக்லேட்.
டார்க் சாக்லெட்டில் 70% கொக்கோ மற்றும் மீதமுள்ள பகுதி கொக்கோ பட்டர் மற்றும் சர்க்கரையால் ஆனது. மில்க் சாக்லேட் என்பது, பால், கொக்கோ, கொக்கோ பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுவது. பிங்க் அல்லது ரூபி சாக்லேட் என்பது கொக்கோ, கொக்கோ பட்டர், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படுவதாகும்.

வணிக ரீதியாக
ரூபி சாக்லெட்டில் அதன் நிறம் மற்றும் சுவையை பாதுகாக்கும் நோக்கத்துடன், சுவை முன்னோடிகளை பிரித்து, சாக்லேட் பீன்ஸில் ஒரு புதிய செயலாக்க வழியைக் கண்டுபிடித்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
வணிக ரீதியாக இந்த சாக்லேட் வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் நாம் இந்த சாக்லெட்டின் அழகான படங்களை பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாக்லேட் விரைவாக நமது சந்தைகளை எட்டி வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
