For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இருப்பவர்கள் நெய் சாப்பிடலாமா?

|

நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவர்கள் உட்கொள்ளும் உணவு இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பதுவே இதன் முக்கிய காரணம்.

உதாரணத்திற்கு, உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் என்று உறுதியளிக்கும் சமையல் எண்ணெய்கள் உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு பெருந்தீங்கை உண்டாக்குகின்றன. ஆகவே, இதற்கான அடுத்த தீர்வு என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெய்

நெய்

நெய், அதிகமான கொழுப்பை தன்னுள்ளே கொண்டிருந்தாலும், இது உடலுக்கு நன்மை செய்யும் பொருள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல காலமாக நெய், ஒரு மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருளாக அறியப்படுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் நெய் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு நெய் எந்த விதத்தில் நன்மை செய்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தொடர்ந்து படியுங்கள்.

எது நல்ல நெய்?

எது நல்ல நெய்?

மைக்ரோபியோடிக் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா கூறுவது என்னவென்றால், "நெய் ஒரு நீரிழிவு மருந்து. நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தில் மற்றும் உயர் இரத்த சர்க்கரை சமநிலைப்படுத்துவதில் உதவி புரிகிறது. மேலும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிடுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசியில் இருக்கும் சர்க்கரை எளிதில் செரிமானம் ஆகிறது. ஆனால் சுகாதாரமான பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட நெய் மட்டுமே இந்த பலன்களைத் தர முடியும். அதிக பட்ச நன்மைகளைப் பெற நாட்டு மாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பாலில் இருந்து நெய் தயாரிக்கப்பட வேண்டும்".

ரத்த சர்க்கரை

ரத்த சர்க்கரை

நாட்டு நெய் அல்லது சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் வெண்ணெய், ஆரோக்கிய கொழுப்பின் ஆதாரமாக விளங்குகிறது. இவை நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதற்கு உதவுகின்றன. இந்த செயல்முறை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் நீரிழிவு மேலாண்மை உறுதி செய்யப்படுகிறது.

செரிமானம்

செரிமானம்

செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டை கட்டுப்படுத்த நெய் உதவுகிறது. சரியான அளவு நெய் சேர்த்து தினமும் உணவு உட்கொள்வதால் மலச்சிக்கல் கட்டுப்படுகிறது.

இதய நோய்

இதய நோய்

நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும் இதய நோயைக் குறைக்க, நெய்யில் உள்ள லினோலிக் அமிலம் பெருமளவில் உதவுகிறது.

சரியான அளவு

சரியான அளவு

சரியான அளவு நெய் உட்கொள்வதால் உடலில் படிந்திருக்கும் கொழுப்பு கரைந்து வெளியாகிறது. இதனால் சிறந்த முறையில் நீரிழிவு மேலாண்மை நடைபெறுகிறது.

ஹார்மோன்

ஹார்மோன்

குடலின் ஹார்மோன் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தை தருவது நெய் உட்கொள்ளல். இதனால் ஹார்மோன் சுரப்பு சீராக செயல்பட்டு, நீரிழிவு நோய் கட்டுப்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

நெய்யில் வைட்டமின் கே மற்றும் இதர அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் பொதுவாக பலவீனமாக இருப்பதால் நெய் அவர்களுக்கு நல்ல நன்மையைச் செய்கிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

ஆர்கானிக் நெய் பயன்படுத்துவதால் உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. உயர் க்ளைகமிக் குறியீடு கொண்ட உயர் கார்போ உணவுகளான அரிசி, வெள்ளை பிரட், பராத்தா போன்றவற்றின் க்ளைகமிக் குறியீட்டை குறைக்க நெய் பயன்படுவதால் நீரிழிவு நோயாளிகள் பலன் அடைகின்றனர்.

குறிப்பு

குறிப்பு

நெய் ஒரு சிறந்த மூலப்பொருள் என்பது மறுப்பதற்கில்லை. என்றாலும் அதன் பயன்பாட்டில் கவனம் தேவை. அளவுக்கு அதிகமான நெய் பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. இது ஒரு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமாகவும் மாறிவிடும். கடையில் வாங்கும் நெய்யை விட, வீட்டில் தயாரிக்கும் நெய் நல்ல பலன்களைத் தரும். இத்தனை அற்புதங்கள் செய்யும் நெய்யை உங்கள் உணவுப் பட்டியலில் இணைக்கும் முன் நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதன்மூலம் இன்னும் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Eating Ghee Healthy For Diabetics? Here's What The Expert Has To Say

we suggest some things about ghee particularly for diabetic patients. read and follow it.
Story first published: Tuesday, August 28, 2018, 15:40 [IST]